இந்தியப் பொருளாதாரம் எவ்வளவு பெரியது?
How large or how big is Indian Economy?
இதற்கு முன்பு எப்போதாவது இந்தியப் பொருளாதாரம்
உலகத் தரவரிசையில் 3ஆம் இடத்தில் இருந்ததா?
------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------
இந்தியா சுதந்திரம் அடைந்த 75ஆம் ஆண்டு 2022.
இந்த ஆண்டில் நம்மை அடிமை கொண்டிருந்த
இங்கிலாந்தை, அவர்களை விடப் பெரிய
பொருளாதாரமாக ஆகியதன் மூலம் வீழ்த்தி
விட்டோம். உலகப் பொருளாதாரத் தரவரிசையில்
இதுவரை இங்கிலாந்து வகித்து வந்த ஐந்தாம்
இடத்தில், அவர்களை விரட்டி விட்டு நாம்
அமர்ந்து கொண்டோம்.
ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் அளவை
நிர்ணயிக்கும் காரணி எது? பெரியது என்றும்
சிறியது என்றும் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை
வகைப்படுத்தும் காரணி எது? அதுதான் அந்தந்த
நாட்டின் GDP ஆகும். (GDP = Gross Domestic Product).
இந்தியாவின் GDP தற்போது 3.469 டிரில்லியன் டாலராக
உள்ளது. (Nominal GDP). இப்போது இங்கிலாந்தின் GDP
3.198 டிரில்லியன் டாலராக இருக்கிறது. இங்கிலாந்தை
விட இந்தியா 0.271 டிரில்லியன் டாலர் அதிகமான
GDPயைக் கொண்டிருக்கிறது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தச் சாதனையை டிசம்பர்
2021ல் இந்தியா நிகழ்த்தியது. India has become the FIFTH largest
economy of the world. தாங்கள் ஏற்றுக்கொண்டுள்ள,
மெய்யானதும் அதிகாரபூர்வமானதுமான
புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்தியா
ஐந்தாம் இடத்திற்கு வந்ததை IMF அறிவித்துள்ளது.
2014ல் உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு
2.6 சதவீதமாக இருந்தது. 2021 டிசம்பரில் 3.5 சதவீதம்
ஆகியது. 2027ல் இது 4 சதவீதமாக வளரக் கூடும் என்று
எதிர்பார்க்கப் படுகிறது.
உலகின் பெரிய பொருளாதாரம் எது?
தரவரிசை இதோ! நாடுகளின் Nominal GDP.
---------------------------------------------------------
1) அமெரிக்கா = 24.88 டிரில்லியன் அமெரிக்க டாலர்.
2) சீனா = 19.91 டிரில்லியன் அமெரிக்க டாலர்.
3) ஜப்பான் = 4.3 டிரில்லியன் அமெரிக்க டாலர்.
4) ஜெர்மனி = 4.031 டிரில்லியன் அமெரிக்க டாலர்.
5) இந்தியா = 3.469 டிரில்லியன் அமெரிக்க டாலர்.
6) இங்கிலாந்து = 3.198 டிரில்லியன் அமெரிக்க டாலர்.
2027ல் ஜெர்மனியைப் பின்னுக்குத் தள்ளி விட்டு
இந்தியா நான்காம் இடத்தைப் பிடித்து விடும் என்பது
IMF சார்ந்த பொருளாதார நிபுணர்களின்
கணிப்பாக இருக்கிறது.
ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் அளவைத்
தீர்மானிக்கும் காரணி அந்த நாட்டின் GDP ஆகும்.
IMFன் வசமுள்ள தரவுகளில் இருந்து IMF நிறுவனம்
கணித்த உலகப் பொருளாதாரம் பற்றி மேலே
பார்த்தோம். இந்தியா 2014ல் GDP கணக்கீட்டின்படி,
உலகப் பொருளாதாரத் தரவரிசையில் மூன்றாம்
இடத்தில் இருந்தது என்ற பிதற்றல்கள்
தண்டனைக்குரிய கிரிமினல் குற்றம் ஆகும்.
*********************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக