சனி, 15 அக்டோபர், 2022

சென்னையில் 5G வந்து விட்டது!
ராட்சஸத் தனமான வேகத்தில் 5G கிடைக்கிறது!
5Gயை நியூட்டன் அறிவியல் மன்றம் வரவேற்றது!
--------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
தலைவர், நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------------------------
சற்று முன் இரவு எட்டரை மணியளவில் 
(2030 hours IST on 15 Oct 2022), சென்னை எத்திராஜ் சாலை 
ஏரியாவுக்கு எங்கள் மன்ற உறுப்பினர்களான 
இளைஞர்கள் சிலருடன் (பைக்கில் பின்புறம் 
அமர்ந்து) சென்றிருந்தேன்.

அங்குதான் 5ஜி டவர் நன்றாகக் கிடைக்கிறது என்று 
நண்பர்கள் மூலமாக அறிந்தோம். அங்கு சென்றோம்.
அங்கு பாந்தியன் சாலையில் கன்னிமாரா நூலகம் 
அருகிலும் எத்திராஜ் கல்லூரி அருகிலும் 5ஜி சிக்னல்கள்
சிறப்பாகக் கிடைத்தன. மேலும் நுங்கம்பாக்கம் 
ஏரியாவிலும் சாஸ்திரி பவன் அருகிலும் வருமானவரி 
அலுவலகமான ஆயக்கர் பவனிலும் மிகவும் 
பிரமாதமாக 5ஜி டவர் கிடைக்கிறது.    

நாங்கள் கன்னிமாரா அருகிலும், எத்திராஜ் மகளிர் 
கல்லூரி அருகிலும் நின்று ஏர்டெல் நிறுவனம் வழங்கும் 
5ஜி சேவையின் வேகம் என்ன என்று அறியும் வேகச் 
சோதனையை மேற்கொண்டோம்.  ஓக்லா (Ookla) நிறுவனம் 
நடத்தும் Global Broadband Speed Test என்னும் வேகச் 
சோதனையை மேற்கொண்டோம். ராட்சஸத் தனமான 
வேகம் இருந்தது. 910 Mbps வேகம் DOWNLOAD 
செய்யும்போது கிடைத்தது. இது மூச்சை அடைக்கிற 
வேகம்! UPLOADல் 130 Mbps வேகம் கிடைத்தது.

சென்னையில் சுனில் மிட்டலின் ஏர்டெல் மட்டுமே 
5ஜி சேவையை  வழங்குகிறது. முகேஷ் அம்பானியின் 
ஜியோ சென்னை நகரில் சேவை வழங்கவில்லை.
டெல்லி, மும்பை, கொல்கொத்தா, வாரணாசி ஆகிய 
நான்கு நகரங்களில் மட்டுமே ஜியோ 5ஜி சேவையை 
வழங்குகிறது.

சென்னை உள்ளிட்ட எட்டு நகரங்களில் ஏர்டெல் தனது 
5ஜி சேவையை வழங்குகிறது. 50 லட்சம் சென்னை 
மக்கள் சார்பாக ஏர்டெல்லின் 5ஜியை நியூட்டன் 
அறிவியல் மன்றம் வரவேற்கிறது. அந்தச் சேவையை 
உடனடியாக நுகர்கிறது. ஏர்டெல் அதிபர் சுனில் 
மிட்டல் அவர்களுக்கு சென்னைப் பெருநகரவாசிகள் 
சார்பாக எங்களின் மரியாதையைத் தெரிவித்துக் 
கொள்கிறோம். Let us SALUTE him.

நிறுவனங்களுக்கு இடையிலான போட்டியில் 
நான் முந்தி நீ முந்தி என்று போட்டி போட்டுக்கொண்டு 
முதன் முதலில் 5ஜி போன்ற அதிநுட்பபமான 
சேவையை வழங்குவது எளிதல்ல. தீபாவளிக்கு 
வரும் என்று எதிர்பார்த்த 5ஜி சேவை தீபாவளிக்கு 
முன்னரே வந்து விட்டது. இவ்வளவு அதிவிரைவில் 
சேவையை வழங்கிய ஏர்டெல்லின் பொறியாளர்கள் 
மற்றும் டெக்னீஷியன்களுக்கு நியூட்டன் அறிவியல் 
மன்றம் பாராட்டைக் காணிக்கை ஆக்குகிறது. இது 
மானுட ஆற்றலின் மற்றுமோர் மகத்துவம்!

5ஜி என்பது சமகால சமூகத்தின் மிகவும் மேம்பட்டதும் 
அதிநுட்பமானதுமான ஓர் உற்பத்திக் கருவி!
எந்தவொரு சரியான மார்க்சிஸ்டும் உற்பத்திக்
கருவியின் மேம்பாட்டை மனப்பூர்வமாக வரவேற்பது
மார்க்சியப் பண்பு.   

வாசகர்களின் கேள்விகளுக்கு நியூட்டன் அறிவியல் 
மன்றத்தின் பதில்கள்!
-----------------------------------------------------------------------------
வாசகர்: என்னுடைய மொபைல் போனில் 5ஜி 
இருக்கிறதா இல்லையா என்று தெரிந்து கொள்ள 
வழி எதுவும் உண்டா?

நி அ ம: உண்டு. 
1) உங்களின் மொபைலை எடுத்துக் 
கொள்ளுங்கள். 
2) அதில் உள்ள SETTINGS பகுதிக்குச் செல்லுங்கள்.
3) அங்கு NETWORK என்ற optionக்குச் செல்லுங்கள்.
4) அதிலிருந்து SIM MANAGEMENTக்குச் செல்லுங்கள்.
5) அங்கிருந்து PREFERRED NETWORK TYPEஐ கிளிக் 
செய்யுங்கள்.
6) இதை கிளிக் செய்தவுடன் உங்களின் கைபேசி 
எந்தெந்த அலைக்கற்றைகளை ஆதரித்து நிற்கிறது 
என்று தெரியவரும். 2ஜி முதல் 5ஜி வரையிலான 
அத்தனை நெட்வொர்க்களில் உங்களின் 
கைபேசியில் எவையெல்லாம் உள்ளன என்று 
திரையில் காட்டப்படும்.
2g/3g/4g/5g என்று திரையில் காட்டினால் நீங்கள் 
அதிர்ஷ்டசாலி. உங்களின் கைபேசியில் 5ஜி 
enabledஆக உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.
அதாவது உங்களின் இந்தக் கைபேசியைக் 
கொண்டே 5ஜி சேவையைப் பெறலாம் என்று 
அர்த்தம்.

சிம் மாற்ற வேண்டுமா அல்லது பழைய சிம்மிலேயே 
5ஜி சேவையைப் பெற இயலுமா என்ற கேள்விக்கு 
உங்களின் நிறுவனம் என்ன  பதில் சொல்கிறதோ 
அதைக் கேட்டு நடக்கவும். பழைய சிம்மிலேயே 
5ஜி சேவையை வழங்க முடியும் என்று ஏர்டெல் 
அறிவித்துள்ளது.

சர்வ சாதாரணமாக 850 Mbps, 900 Mbps  வேகமெல்லாம் 
5ஜியில் கிடைக்கிறது. இந்த அசுர வேகத்தால் 
85 நொடி அல்லது 90 நொடியில் ஒரு முழுநீளத் 
திரைப்படத்தை பதிவிறக்கம் செய்ய முடியும்.
அதே நேரத்தில் உங்களின் data இருப்பு காற்றில் 
கரைந்த கற்பூரமாய் ஆகிவிடக் கூடும். 2 GB data 
என்பதெல்லாம் கண்ணிமைப்பதற்குள் காலியாகி 
விடும். எனவே data managementல் சரியானதொரு 
அணுகுமுறையைக் கையாளுங்கள்.

வசதி படைத்த அன்பர்கள் 5ஜி சேவையைப்
பெறுங்கள். பெற்று அனுபவியுங்கள். வசதி 
படைத்த பெற்றோர்  தங்களின் பிள்ளைகளுக்கு 
நல்லதொரு கைபேசியுடன் 5ஜி சேவையை 
உறுதி செய்யுங்கள்.

BSNLன் 5ஜி சேவை அடுத்த ஆண்டு (ஆகஸ்டு 15, 2023)
சுதந்திர தினத்தில் வந்து விடும். BSNL மலிவு 
விலையில் 5ஜி சேவையை வழங்கும். அதுவரை 
பொறுத்திருங்கள். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு
மட்டுமின்றி தனியார் பள்ளி மாணவர்கள் உட்பட 
அனைத்து மாணவர்களுக்கும் 5ஜி வசதி கொண்ட 
ஸ்மார்ட் கைப்பேசிகளை தமிழக அரசு இலவசமாக 
வழங்க வேண்டும். இது அரசின் கடமை.

5ஜியை வரவேற்போம்!
5ஜி இன்று வந்தது. உடனேயே INSTANTANEOUSLY 
5ஜி பற்றிய என்னுடைய கட்டுரை தமிழில் வெளிவந்து 
விட்டது. இந்தக் கட்டுரையைப் படியுங்கள். இதைப் 
பரப்புங்கள்.

5ஜி குறித்து ஒரு நீண்ட கட்டுரையை இம்மாத 
அறிவியல் ஒளி இதழில் (அக்டோபர 2022)
எழுதி உள்ளேன். அறிவியல் ஒளி ஏட்டுக்குச் சந்தா 
கட்டி அதை வாங்கிப் படியுங்கள். பல்வேறு அரசு 
நூலகங்களிலும் அறிவியல் ஒளி கிடைக்கும்.
அங்கும் சென்று படியுங்கள். படிக்க வேண்டும்.

அமெரிக்காவிலேயே 5ஜி இவ்வாண்டு பெப்ரவரியில்தான் 
நிறுவப்பட்டுக் கொண்டு இருந்தது. இதோ அக்டோபர் 
முதல் தேதியன்று பிரதமர் மோடி 5ஜியை இந்தியாவில் 
தொடக்கி வைத்தார். தற்போது சென்னையில் 
ஆர்வமுள்ள சாதாரண மக்கள் 5ஜி சேவையை 
அனுபவிக்கத் தொடங்கி விட்டனர். அதே வேகத்தோடு 
தமிழில் எழுதப்பட்ட என்னுடைய  கட்டுரையும் 
அறிவியல் ஒளியில் வெளிவந்து விட்டது. தமிழை 
உற்பத்தி மொழியாக ஆக்குவது எப்படி? இப்படித்தான்!    
***********************************************  

இதை எல்லோரும் படியுங்கள்! பகிருங்கள்.
வாட்சப்பில் அனுப்புங்கள்.

மருதுபாண்டியன் 

ரகுபதி 

ராமன் ராஜு   

        
    

           

 

   

    
   
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக