தீபாவளி: தமிழைச் சரியாக எழுதுங்கள்!
தீபாவளி குறித்த பொருட்செறிவு மிக்க ஒரே கட்டுரை!
-------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------
தீபம் + ஆவளி = தீபாவளி.
தீபம் = விளக்கு.
ஆவளி = வரிசை.
தீபாவளி = விளக்குகளின் வரிசை.
(அல்லது விளக்கு வரிசை).
நாமாவளி என்றால் நாமங்களின் வரிசை
என்று பொருள். இறைவனுக்கு ஆயிரம் நாமங்கள்
உண்டல்லவா! அவற்றை வரிசையாகச் சொன்னால்
அது நாமாவளி ஆகும்.
புஷ்பாவளி = புஷ்பங்களின் வரிசை.
அதாவது பூக்களின் வரிசை என்று பொருள்.
மல்லிகை, முல்லை, இருவாச்சி, பிச்சி,
ரோஜா என்று பூக்களை வரிசையாக
அடுக்கினால் அது புஷ்பாவளி.
கர்நாடக சங்கீதம் தெரியுமா? அதில்
ஸ்வரங்கள் என்றால் என்ன என்று தெரியுமா?
ஸ்வரங்கள் மொத்தம் ஏழு.
ஸ ரி க ம ப த நி என்னும் ஏழு ஸ்வரங்கள்.
ஸ்வராவளி என்ற சொல்லை அறிவீர்களா?
கேள்விப் பட்டதுண்டா?
ஸ்வரம் + ஆவளி = ஸ்வராவளி.
ஸ்வரங்கள் வரிசை என்று பொருள்.
அதாவது சுரவரிசை இரு பொருள்.
சுரவரிசைக்கு ஒரு உதாரணம் தருகிறேன்.
கர்நாடக சங்கீதத்தில் இருந்து நேரடியாக
உதாரணம் தந்தால் புரிந்து கொள்ள
இயலாமல் போகலாம். எனவே ஒரு சினிமாப்
பாட்டில் உள்ள சுரவரிசையை அப்படியே
இங்கு தருகிறேன். சினிமாப்பாட்டு என்றால்
தமிழன் எளிதில் புரிந்து கொள்வான்தானே!
சசக நிசப்பானி சாசா
சச சமக நிசப்பானி சாசா
நிச சபபா பா பாப பாதபமா
மம கமக கம கம நீப காரி சாநி.
(நெடில்களை குறில்கள் ஆக்கிக் கொள்ளவும்.
நிசப்பானி = நி ஸ ப நி)
மேலே உள்ளது சுர வரிசை. பாடல் இப்படி
அமையும்.
ஸப்த ஸுர தேவி உணரு
நீ என்னில் வரகானம் அருளு
நீ அழகில் மமனாவில் வாழு
என் கழிவில் ஒளிதீபம் ஏற்று.
ஏகப்பட்ட உதாரணங்கள் தந்து விட்டேன்.
இப்போது தீபாவளி என்றால் தீபங்களின்
வரிசை என்று புரிகிறதா?
கணிதத்தில் வரும் மேட்ரிக்ஸ் (Matrix) பற்றித்
தெரியுமா? மேட்ரிக்ஸ் மிகவும் வசதியானது.
உதிரி உதிரியாக வருகின்ற பொருட்களை,
ஒவ்வொன்றாக வரும் பொருட்களை
வசதியாக அடுக்கலாம்.
வரிசையாக அடுக்கலாம்.
இதற்குப் பயன்படுவதுதான் மேட்ரிக்ஸ்.
வாழைப்பழம் = 10
மாம்பழம் = 10
பலாப்பழம் = 10
என்பதாக மொத்தம் மூன்று வகையில் 30 பழங்கள்
உங்களிடம் உள்ளன. இதை ஒரு 3x10 matrixல்
(3 rows and 30 columns) அடுக்கலாம் அல்லவா!
ஒரு mxn matrixன் படத்தை இங்கு கமெண்ட் பகுதியில்
கொடுக்க விழைகிறேன். அது உங்களின் புரிதலை
சரிப்படுத்தும். தீபங்களையெல்லாம்
ஒரு மேட்ரிக்சில் அடுக்குவதுதான் தீபாவளி.
இதை உங்களால் புரிந்து கொள்ள முடிந்தால்
நீங்கள் பேறு பெற்றவர்கள்.
---------------------------------------------------------
பின்குறிப்பு:
இக்கட்டுரை ஒரு கோடீஸ்வரக் கட்டுரை.
இது போன்ற கட்டுரைகளை என்னிடமிருந்து
அல்லாமல் வேறு யாரிடம் இருந்தும், கடவுளிடம்
இருந்து கூட, நீங்கள் பெற இயலாது என்ற
உண்மையை உணருங்கள்.
கடவுள் என்னுடைய வாசகராக இருக்கிறார்.
அவர் கேட்டபடி தீபாவளி சிறப்புக் கட்டுரையாக
இக்கட்டுரையை எழுதி அவருக்கு அனுப்பி உள்ளேன்.
ஆன்மிக காலமாக கடவுளானவர் என்னுடைய
கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து தமது IQவை
மேம்படுத்தி வருகிறார். கடவுளின் IQ என்ன
தெரியுமா? அதை அளந்து வைத்துள்ளது நியூட்டன்
அறிவியல் மன்றம்.
********************************************
IQ குன்றியவர்கள் அருள் கூர்ந்து இக்கட்டுரையைப்
படிக்க வேண்டாம்! படிக்க வேண்டாம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக