திங்கள், 10 அக்டோபர், 2022

திரு ஆசை என்பவர் எழுதிய இக்கட்டுரை
பிழைகளால் நிறைந்துள்ளது. குவாண்டம் 
தியரி குறித்த கட்டுரையாளரின் 
முற்றிலும் தவறான புரிதலை கட்டுரை 
வெட்கமின்றி வெளிப்படுத்துகிறது.

துகள் அலை இரட்டைத் தன்மை குறித்த 
கட்டுரையாளரின் புரிதல் பிறழ்புரிதலாக  
இருக்கிறது.  ஒளியானது திட்டவட்டமான 
அலை வடிவத்தைக் கொண்டுள்ளது 
என்பது  நியூட்டன் காலத்திலேயே 
கிறிஸ்டியன் ஹைஜென்சால் 
முன்மொழியப் பட்டது. பின்னர் நிரூபிக்கப் 
பட்டது. கட்டுரையாளர்  அலை என்பதற்கு 
முற்றிலும் புதிய, ஆனால் தவறான 
விளக்கத்தைத் தருகிறார்.    

புத்தகக் கடையில் தேன்மொழியைச் 
சந்திக்கும்போதுதான் தேன்மொழிக்கு 
ஒரு திட்டவட்டமான வரையறை 
கிடைக்கிறது என்று எழுதியுள்ளார். 
இது தவறு. 

பொருட்களை micro என்றும் macro என்றும் 
வகைப்படுத்துகிறோம். கட்டுரையாளரால் 
உதாரணமாகச் சொல்லப்பட்ட பெண் 
macro பொருள் ஆவார். எந்த ஒரு மேக்ரோ 
பொருளுக்கும் திட்டவட்டமான வரையறை 
உண்டு. எவரேனும் சென்று அந்தப் 
பெண்ணைச் சந்தித்தால்தான் 
அப்பெண்ணுக்கு திட்டவட்டமான 
வரையறை ஏற்படும் என்பது மடமை.

கட்டுரையாளரைப் பற்றிய குறிப்பில், அவர் 
கவிஞர், மொழியியலாளர், பத்திரிகையாளர் 
என்றெல்லாம் கூறப்பட்டுள்ளதே தவிர, 
அவரின் அறிவியல் பின்னணி குறித்து 
எதுவும் கூறப்படவில்லை. 

அருஞ்சொல் என்னும் இணைய இதழை 
நடத்தும் திரு சமஸ் அவர்களுக்கும் 
எவ்வித அறிவியல் பின்னணியும் 
கிடையாது. இதுபோன்ற கட்டுரைகளை 
எழுதினால் சன்மானமாக ரூ 5000 வரை 
கிடைக்கும் என்பதால், subject knowledge 
அறவே இல்லாதவர்கள் கூட, எதையாவது 
எழுதுகின்றனர். அது பிரசுரமாகி 
சமூகத்திற்கு நச்சுக் கருத்துக்களைக் 
கொண்டு செல்கிறது. 
    
         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக