வெள்ளி, 15 டிசம்பர், 2017




அகநிலைக் கருத்துமுதல்வாதத்தை எதிர்த்து லெனின்:08-
(பருப்பொருளை, பருப்பொருளின் இயக்கத்தை குறைத்து மதிப்படுகிற அகநிலைக் கருத்துமுதல்வாதத்தின் கண்ணோட்டமானது, புறநிலை யதார்த்தத்திலிருந்து சிந்தனையைப் பிரிப்பதற்கு சமம் என்கிறார் லெனின்.)
"பொருள்முதல்வாதிக்கும் கருத்துமுதல்வாதத் தத்துவஞான ஆதரவாளருக்கும் இடையில் அடிப்படையான வேறுபாடு, பொருள்முதல்வாதி புலனுணர்ச்சி, புலனறிவுக்காட்சி, கருத்து மற்றும் பொதுவாக மனிதனுடைய உணர்வு புறநிலையான யதார்த்தத்தின் பிம்பம் என்று கருதுகிறார் என்ற உண்மையில் அடங்கியிருக்கிறது. நம் முடைய உணர்வினால் பிரதிபலிக்கப்படுகின்ற இப்புறநிலை யதார்த்தத்தின் இயக்கமே உலகம். கருத்துக்கள், புலனறிவுக் காட்சிகள், இதரவற்றின் இயக்கத்துடன் எனக்கு வெளியே இருக்கின்ற பருப்பொருளின் இயக்கம் பொருந்துகிறது.
பருப்பொருள் என்ற கருத்து புலனுணர்ச்சிகளில் நமக்குக் கிடைக்கின்ற புறநிலை யதார்த்தத்தைக் காட்டிலும் அதிகமாக வேறு எதையும் வெளிப்படுத்தவில்லை. ஆகவே பருப்பொருளிலிருந்து இயக்கத்தைப் பிரிப்பது புறநிலை யதார்த்தத்திலிருந்து சிந்தனையைப் பிரிப்பதற்கு அல்லது புற உலகத்திலிருந்து என்னுடைய புலனுணர்ச்சிகளைப் பிரிப்பதற்குச் சமம்- சுருக்கமாகக் கூறுவதென்றால், அது கருத்துமுதல்வாதத்துக்குப் போய்விடுவதாகும். பருப்பொருளை மறுக்கின்ற பொழுது, பருப்பொருள் இல்லாத இயக்கத்தை அனுமானிக்கின்ற பொழுது வழக்கமாகச் செய்யப்படுகின்ற தந்திரம் சிந்தனைக்குப் பருப்பொருளின் உறவைப் புறக்கணிப்பதே. இந்த உறவு இல்லை என்பதைப் போல இந்தப் பிரச்சினை முன்வைக்கப்படுகிறது; ஆனல் எதார்த்தத்தில் அது இரகசியமாக நுழைக்கப்படுகிறது, வாதத்தின் தொடக்க நிலையில் அது எடுத்துரைக்கப்படாத படி இருக்கிறது, ஆனல் பிறகு அது அநேகமாக உணர முடியாதபடி வெளியே வந்து விடுகிறது."
(பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும் பக்கம் -309 - 310)
====================================================================

தோழரே, தங்களின் பின்னூட்டத்தின் மீதான
எனது கருத்தை தனிக்கட்டுரையாக எழுதி
வெளியிட்டுள்ளேன். அதில் தங்களை tag செய்ய
முயன்றும் முடியவில்லை. மன்னிக்கவும். எனவே
கட்டுரையைப் படிக்குமாறு வேண்டுகிறேன்.

என் பணிவான வேண்டுகோள்!
--------------------------------------------------------
கட்டுரையின் சாரமாகவும் மையமாகவும் உள்ள
பொருள் மீது மார்க்சியம் கற்றறிந்த வாசகர்கள்
தங்கள் கருத்தைக் கூறினால், அது அனைவருக்கும்
பயன்படும். குறிப்பாக இளம் வாசகர்களுக்குப்
பயன்படும். மாறாக, அத்வைதத்தால் பேராபத்தா
இல்லையா என்ற திசையில் விவாதம் செல்வதானால்
பயன் குறைவாகவே இருக்கும். எனவே கற்றறிந்த
மூத்த தோழர்கள் பொருள், கருத்து, ஆன்மா, மனம்
ஆகிய கருத்தாக்கங்கள் மீதான விமர்சனத்தை
முன்வைத்தால் அனைவருக்கும் பயன் கிட்டும்
என்று தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கட்டுரை மா-லெ கட்சிகளின் கட்சித்திட்டம்
குறித்து எழுதப் படுவதல்ல. மார்க்சிய பார்வையில்
அத்வைதம் குறித்த ஒரு எளிய அறிமுகத்தை
உருவாக்கவே இத்தொடர். இந்திய சமூகத்தில் எது
பிரதான முரண்பாடு என்பது பற்றி இத்தொடரிலோ
அது சார்ந்தோ விவாதிக்க இயலாது அல்லவா!


பட விளக்கம்: படம்-1: ஆதி சங்கரர் மண்டன மிசுரர்
விவாதக் காட்சி.
படம்-2: பெர்க்லி பாதிரியார்.

மார்க்சிய முகாமில் உள்ள தேவையை பூர்த்தி
செய்யும் பொருட்டு இத்தொடர் எழுதப் படுகிறது.
இது தீவிரமான தத்துவார்த்தப் பிரச்சினை
என்பதால்,  பரந்துபட்ட வாசகர்களுக்கு இதில்
அக்கறை இருக்காது. இது இயல்பே.


இந்தக் கட்டுரைத் தொடரில் எதை எதை விமர்சிக்க
வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்கள்? இதுவரை
விமர்சிக்காமல் விடப்பட்டது எது என்றும் கூறுங்கள்.
எமது தொடர் தனிநபர்களுக்கு எவ்விதமான
முக்கியத்துவத்தையும் அளிக்காது. மாறாக,
பொதுவெளியில் முன்வைக்கப்படும் கருத்துக்களை
மட்டுமே கணக்கில் கொள்ளும்.

தாங்கள் தனிநபர் சார்ந்தே சிந்திக்கிறீர்கள் என்று
புரிந்து கொள்கிறேன். "சுட்டி ஒருவர் பெயர்கொளா மரபு"
என்ற சங்க இலக்கிய மரபை பல்லாண்டு காலமாக
உணர்வுபூர்வமாகப் பின்பற்றி வருபவன் நான்.
எனவே தனிநபர்களை முற்றிலுமாகப் புறந்தள்ளி
விட்டு, அவர்கள் முன்வைக்கிற கருத்தை மட்டுமே
விமர்சிப்பது என்ற நிலைப்பாட்டில் இருந்து
எழுதுகிறேன். அந்த அடிப்படையில், "அத்வைதத்தை
மார்க்சியத்துடன் கலக்க வேண்டும்; அத்வைதம்
பொருள்முதல்வாதமே" என்பவை போன்ற
கருத்துக்களை அடுத்தடுத்த கட்டுரைகளில்
விமர்சிக்க இருக்கிறேன். அதில் ஒரு கட்டுரை
இன்று இரவு வெளியாகும். தாங்கள் அதைப் படித்த
பின்னர், எனது விமர்சனம் சரியான திசைவழியில்
செல்கிறதா என்று தீர்மானிக்கலாம்.

இது சரியே. இந்த அடிப்படையில்தான் அத்வைதம்
பற்றிய தொடர் அமையும். அடுத்தடுத்து வரும்
கட்டுரைகளில் அது புலப்படும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக