புதன், 13 டிசம்பர், 2017

அரசு இருக்கும் வரை மரண தண்டனையும்
இருக்கும்! இதுவே மார்க்சிய பால பாடம் ஆகும்!
-----------------------------------------------------------------------------------------
1) 1917ல் மகத்தான நவம்பர் புரட்சியின் வெற்றிக்குப்
பின்னால், சோவியத்தில் பாட்டாளி வர்க்க அரசு
அமைந்தது. லெனின் அரசின் தலைவர் ஆனார்.

2) சோவியத் நாட்டுக்கான புதிய சட்டங்கள் இயற்றப்
பட்டன. அதில் மரண தண்டனை இடம் பெற்றது..

3) 1949ல் சீனத்தில்  மாவோ தலைமையில் புதிய
ஜனநாயக அரசு அமைந்தது. மக்கள் சீனத்திற்கான
புதிய சட்டங்கள் இயற்றப் பட்டன. அதில்
மரண தண்டனை தவறாமல் இடம் பெற்றது.

4) கியூபாவில் பிடல் காஸ்ட்ரோ அமைத்த அரசின்
சட்ட  திட்டங்களில் மரண தண்டனை இடம் பெற்றது.

5) வியட்நாமில் ஹோ சி மின் அமைத்த அரசு,
கம்பூசியாவில் போல்பாட் அமைத்த அரசு,
வட  கொரியாவில் கிம் இல் சுங் அமைத்த அரசு 
ஆகிய அனைத்து கம்யூனிசஅரசுகளின் சட்ட
திட்டங்களில் மரண தண்டனை தவறாமல்
இடம் பெற்று இருந்தது.

6) சட்டப் புத்தகத்தில் மரண தண்டனை இல்லாத
எந்த ஒரு கம்யூனிச நாடாவது என்றாவது இருந்ததா?

7) மரண தண்டனை என்பது பாட்டாளி வர்க்க
சர்வாதிகாரத்தின் ஒரு பகுதி. மரண தண்டனை
கூடாது என்பவன் பாட்டாளி வர்க்க
சர்வாதிகாரம் கூடாது என்று சொல்கிறான்.

8) அரசு என்ற ஒன்று இருக்கும் வரை, மரண
தண்டனையும் இருக்கும். இதுவே மார்க்சிய
பால பாடம் ஆகும்.
அரசு என்று இல்லாமல் போகின்றதோ, அன்றுதான் 
மரண தண்டனையும் இல்லாமல் போகும்.

9) பின்நவீனத்துவக் கயவர்களும், லிபரல் பூர்ஷ்வா
மூடர்களும் மரண தண்டனை வேண்டாம் என்று
கூச்சல் இடலாம். அவர்களின் கூச்சல்
மார்க்சியத்தைக் கட்டுப் படுத்தாது.

10) சோஷலிச அரசுகள் மட்டுமல்ல, சோலிசமற்ற
விடுதலை இயக்கங்களான விடுதலைப் புலிகள்
(LTTE) மற்றும் பாலஸ்தீன விடுதலை இயக்கம் (PLO)
போன்றவையும் மரண தண்டனையை தங்களின்
சட்டப் புத்தகத்தில் வைத்து இருக்கின்றன.
மாத்தையாவை பிரபாகரன் தூக்கிலிட்ட போது

எந்த லிபரலும் கண்டிக்கவில்லையே ஏன்?
--------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: இங்கு அரசு (state) என்ற சொல், அதன்
மார்க்சிய லெனினிய அர்த்தத்தில் சொல்லப்
படுகிறது. மோடி அரசு, எடப்பாடி அரசு என்று
புரிந்து கொள்ள வேண்டாம்.
***************************************************************
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக