ஞாயிறு, 10 டிசம்பர், 2017

அலைக்கற்றை ஊழலும் நஷ்டமும்!
---------------------------------------------------------------
இந்தியாவிலேயே முதன் முதலாக 2G அலைக்கற்றை
விவகாரத்தில் நஷ்டம் என்பது கிடையவே கிடையாது
என்றும் பூஜ்யம்தான் நஷ்டம் என்றும் கூறியவன்
நான் மட்டுமே. இதை அன்று வின் டி.வி.யில் (WIN TV),
நெறியாளர் ஜோதி ராமலிங்கம் கூறினேன் நெறிப்படுத்திய
நிகழ்ச்சியில் கூறினேன். ஆதாரத்துடன் அதை
நிரூபித்தேன். அதன் பின்னர்தான் கபில் சிபல்
(அன்றைய அமைச்சர்) பூஜ்ய நஷ்டம் என்று கூறினார்.
*
இன்று வின் டிவி எல்லா விவாத நிகழ்ச்சிகளையும்
யூ டியூபில் பதிவு செய்கிறது. ஆனால் பூஜ்ய நஷ்டமே
என்று நான் பேசிய அக்காலத்தில் இவ்வாறு யூ டியூபில்
பதிவேற்றம் செய்யும் வழக்கத்தில் இல்லை.
**
இவ்வளவு இருந்தும் சன் டிவியோ கலைஞர் டிவியோ
ஒரு விவாதத்திற்கு கூட என்னை அழைத்ததில்லை.
இந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்வது?
**
2G என்றால் என்ன என்றே தெரியாத, அலைக்கற்றை
என்றால் என்னவென்றே தெரியாத பலரையும்
கூப்பிட்டு, விவாதம் நடத்திய கலைஞர் டிவி.
அறிவியலோ தொழில்நுட்பமோ தெரியாத பலரைக்
கூப்பிட்டுக் கூட்டம் நடத்திய திமுக, எனது
பின்னணி தெரிந்திருந்த போதிலும் என்னை
அழைத்து எந்தக் கூட்டத்தையும் போடவில்லை.
**
அலைக்கற்றை அறிவியல் தெரியாமல்
முட்டாள் தனமாகப் பேசும் ஒரு பேராசிரியர்
ஒரு கூட்டத்திற்கு ரூ 65000 (அறுபத்தி ஐந்தாயிரம்)
கட்டணம் வாங்கிக் கொண்டு, திமுக நடத்திய
கூட்டங்களில் பேசினார். அவரால் மக்களை
நம்ப வைக்க முடியவில்லை. ஆனால் கட்டணம்
வாங்காமல், போக்குவரத்துச் செலவை மட்டுமே
பெற்றுக்  கொண்டு பேசுவதற்கு நான் தயார் என்று
என்று கூறியபோதும் திமுக என்னை அழைக்கவில்லை.
(கனிமொழிதானே மாட்டினார், சாகட்டும் என்று
திமுக கருதியதோ என்னவோ!)
**
திமுக என்னை பயன்படுத்தாமல் விட்டதன்
விளைவு திமுக 2014 தேர்தலில் அடைந்த படுதோல்வி.
எனக்கு ஒரு மயிரும் நஷ்டமும் இல்லை.  
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக