சனி, 21 ஆகஸ்ட், 2021

 காற்றில் கரைந்த கற்பூரமாய் 

பழைய பென்சன் திட்டம்!

ஜாக்ட்டோ ஜியோவின் கனத்த மௌனம்!

ரூ 25 கோடிக்கு சபரீசனிடம் விலைபோன போலிகள்!

------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

---------------------------------------------------

ஓய்வூதியம் என்னும் பென்ஷன் மகத்தான 

ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டம். பென்ஷன் 

என்பது சோஷலிசக் கோட்பாட்டின் அடிப்படையில் 

அமைந்த ஒரு சமூக நலத்திட்டம்.


பென்ஷன் குறித்த இந்திய அரசின் கண்ணோட்டம்

இந்த மில்லேனியத்தின் தொடக்கத்தில் மாறுகிறது. 

21ஆம் நூற்றாண்டில் பென்ஷன் குறித்த புதிய 

கொள்கையை இந்திய அரசு கடைப்பிடிக்கத் 

தொடங்கியது.


புதிய பென்ஷன் என்பது சோஷலிஷத் தன்மை 

வாய்ந்ததல்ல. மாறாக அது ஒரு முதலாளித்துவக் 

கோட்பாடு. அதன் அடிநாதமாக சமூகப் 

பாதுகாப்பு இல்லை. வணிகப் பரிவர்த்தனையே  

உள்ளது.


பழைய பென்ஷன் திட்டத்தில் ஒரு மத்திய அரசு 

ஊழியரின் பென்ஷன் இந்திய அரசின் 

பொக்கிஷதாரின் (Govt exchequer) கணக்கில் இருந்து 

ஊழியருக்கு வழங்கப்படும். இது Benefit pension scheme

எனப்படும்.


புதிய பென்சன் திட்டம் CONTRIBUTORY PENSION 

SCHEME எனப்படும். இதில் ஊழியர்கள் மாதந்தோறும் 

தமது பங்கைச் செலுத்த வேண்டும். ஊழியர்களின் 

சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதம் 

பென்ஷனுக்காக பிடித்தம் செய்யப்படும்.  

13 சதவீதம், 18 சதவீதம் என்றெல்லாம் பல்வேறு 

அளவுகளில் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 

பிடித்தம் செய்யப்படும்.


மாநிலங்கள் புதிய பென்சன் திட்டத்தை ஏற்க 

வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. ஆனால் 

எல்லா மாநிலங்களும் புதிய பென்ஷன் திட்டத்தை

விரும்பி ஏற்றுக் கொண்டுள்ளன. மாநில 

சுயாட்சி என்பதெல்லாம் தமிழ்நாட்டில் உள்ள 

முட்டாள்களை ஏமாற்றுவதற்கு மட்டுமே.    


ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது புதிய 

பென்சன் திட்டத்தை ஏற்றுக் கொண்டு தமிழக 

அரசில் செயல்படுத்தினார். பின்னர் முதல்வரான 

கலைஞரும் புதிய பென்சன் திட்டத்தை ரத்து 

செய்யவில்லை. அதையே தொடர்ந்து 

செயல்படுத்தினார்.


இந்தத் தேர்தலின்போது (2021) புதிய பென்ஷன்

திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் 

திட்டத்தைக் கொண்டு வருவதாக திமுக 

தேர்தல் வாக்குறுதி வழங்கியது. ஆனால்

பழைய பென்ஷன் திட்டத்தைக் கொண்டு வர 

இயலாது என்று திமுக அரசின் நிதியமைச்சர் 

தியாகராஜன் சட்டமன்றத்தில் அறிவித்து விட்டார்.


ஆக புதிய பென்ஷனே நீடிக்கும். இனி அதை 

ஒருபோதும் யாராலும் ரத்து செய்ய இயலாது.

ஒவ்வொரு தேர்தலிலும் திமுகவைத் தொடர்ந்து 

ஆதரித்து வரும் கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் 

கட்சி சார்பு தொழிற்சங்கங்களின் பேரமைப்பான 

ஜாக்டோ ஜியோ என்ன செய்யப் போகிறது?



ஒன்றும் செய்யாது; ஒரு போராட்டமும் நடத்தாது.

பழைய பென்ஷனை மறக்கடிக்கும் வேலைகளில்

ஜாக்ட்டோ ஜியோ ஈடுபடும். திமுக அரசுக்கு 

ஜால்றா தட்டும் வேலை மட்டுமே ஜாக்ட்டோ ஜியோவின் 

அஜெண்டாவில் உள்ளது.


சும்மாவா, சபரீசன் சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் 

ரூ 25 கோடி கொடுத்து CPI CPM கட்சிகளை விலைக்கு 

வாங்கினார். இந்தத் தேர்தலில் மேலும் அதிகம் 

கொடுத்திருக்கக் கூடும். எனவே CPI, CPM கட்சிகளால்

திமுகவையோ உதயநிதியையோ எதிர்த்து ஒரு 

பெருமூச்சைக்கூட விட முடியாது.


திமுகவை நாம் கோபிக்க வேண்டியதில்லை. திமுக 

ஒரு பூர்ஷ்வா கட்சி. மக்களை ஏமாற்றுவது திமுகவின் 

ரத்தத்தில் DNAவில் ஊறிய பண்பு. அதை மாற்ற 

முடியாது. நீட் தேர்வை ஒழிப்போம் என்றும் 

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வோம்    

என்றும் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுப்பது 

திமுகவின் இயல்பு. எனவே என்ன செய்தாலும் 

திமுகவால் மக்களை ஏமாற்றும் செயல்களில் 

இருந்து விடுபட முடியாது.    


ஆனால் கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் 

கட்சிகளையும் அவர்களின் பிடியில் இருக்கும் 

தொழிற்சங்கங்களையும்  அப்படிச் சுலபமாக 

விட்டு விட முடியாது. இவர்கள் மார்க்சியத்திற்கு

களங்கம் ஏற்படுத்துபவர்கள். இவர்கள் 

கயவாளிப் பயல்கள். இவர்களை மன்னிக்க 

முடியாது.


பாம்பையும் போலிக் கம்யூனிஸ்ட்டையும் கண்டால் 

பாம்பை விட்டு விடு! 

போலிக் கம்யூனிஸ்டை அடி!

*******************************************





 .   

    







        


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக