ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

 அக்கு வேறு ஆணி வேறு என்ற தொடரில் 

அக்கு வருகிறது. 

"இயந்திரத்தை அக்கு வேறு ஆணி வேறாகக் 

கழற்றிப் போட்டு விட்டான்" என்ற வாக்கியத்தில் 

அக்கு பயின்று வருகிறது.


"அக்கக்காக் கழற்றிப் போடு" என்று நெல்லை 

மாவட்டத்தில் கூறுவது 1970களில் இயல்பு.

சைக்கிள் பஞ்சர் கடைகளில் மெக்கானிக்குகள் 

அடிக்கடி பயன்படுத்தும் சொல் அக்கு என்பது.


அக்கு என்றால் ஓர் இயந்திரத்தின் ஒரு சிறிய 

பகுதி என்று பொருள். ஒரு இயந்திரத்தைக் 

கழற்றும்போது, ஒரு ஸ்க்ரூவைக் கழற்றிய 

ஒருவர் கூடவே உள்ள வாஷரையும் கழற்றிப் 

போடுகிறார் அல்லவா! இந்த வாஷர்தான் அக்கு.

வாஷர் மட்டுமின்றி, அதைப்போன்ற சின்னஞ்சிறிய

பொருட்களெல்லாம் அக்கு எனப்படும்.

    


இன்று ஆங்கிலத்தின் தாக்கத்தால் பார்ட் பார்ட்டாக 

கழற்றிப் போடு என்ற தொடர் வழக்கில் வந்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக