செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

 வெண்பா !! உளவு மென்பொருள் பெகாசஸ் 

பற்றிய வெண்பா!

-------------------------------------------- 

வீரை பி இளஞ்சேட்சென்னி

-------------------------------------------


பாடா வதியே தரக்குறைவே வேண்டாமே 

கேடான மென்பொருளே இந்தியா --நாடா  

பெகாசசே  பேயே பிசாசே இகழ்வோமே  

ஆகாதென் றுன்னை யே.     

-----------------------------------------------------------


பொருள்:

பாடாவதியே -  அருதப் பழசான பெகாசசே 

தரக்குறைவே -- தரத்தில் குறைந்த  பெகாசசே 

வேண்டாமே -- எங்களுக்கு நீ வேண்டாமே 


கேடான மென்பொருளே - கெடுதி விளைவிக்கும் 

மென்பொருளே 

இந்தியா நாடா பெகாசசே -- இந்தியா விரும்பாத 

பெகாசசே     

பேயே பிசாசே - பேயே பிசாசே 

இகழ்வோமே - காரித் துப்புவோமே  


ஆகாது என்று உன்னையே - நாட்டுக்கு ஆகாது

என்று உன்னை.

-----------------------------------------------------  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக