திங்கள், 30 ஆகஸ்ட், 2021

 


விவரக் குறிப்பு: 

பி இளங்கோ சுப்பிரமணியன்,

நிறுவனர் தலைவர், நியூட்டன் அறிவியல் மன்றம்,

அறிவியல் எழுத்தாளர் மற்றும் அறிவியல் பரப்புநர்

(Science writer and science communicator).   

தொடர்புக்கு: 

சுபிக்சா அடுக்ககம், எண்: 5/5,   6ஆவது தெரு  

சௌராஷ்டிரா நகர் சூளைமேடு சென்னை 600 094.

அலைபேசி: 94442 30176.

மின்னஞ்சல்  ilangophysics@gmail.com 

----------------------------------------------

தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க அறிவியல் பரப்புநர்களில் 

(science communicator) ஒருவர் திரு பி இளங்கோ சுப்பிரமணியன். 

டாக்டர் அப்துல் கலாம் அவர்களால் உந்தப்பட்டு,   

அறிவியலைப் பரப்பும் பொருட்டு, 2000ஆம் ஆண்டில், 

நியூட்டன் அறிவியல் மன்றம் என்னும் ஓர் அமைப்பைத் 

தொடங்கி பரந்துபட்ட மக்களிடம் அறிவியலைப் பரப்பி 

வருகிறார்.


நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் பிறந்த இவர்,

நெல்லையில் இயற்பியல் கற்ற பின்னர் மத்திய அரசின் 

தொலைதொடர்புத் துறையிலும் பின்னர் BSNLநிறுவனத்திலும்    

பணியாற்றி தற்போது ஒய்வு பெற்றுள்ளார்.


சமூகத் தாக்கம் உடைய (social impact) விஷயங்களில் 

உள்ள அறிவியலைச் சொல்லுவதையே நியூட்டன் அறிவியல் 

மன்றத்தின் பணியாக இவர் வரையறுத்து இருந்தார். 

உதாரணமாக குவான்டம் இயற்பியல் பற்றி அறிந்து 

கொள்வதைவிட, மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் உள்ள 

அறிவியல் குறித்து அறிந்து கொள்ளவே ஒரு சமூகம் விரும்பும். 

எனவே சமூகத் தாக்கம் உடைய விஷயங்களில் உள்ள 

அறிவியலைச் சொன்னால் மட்டுமே அது மக்களிடம் எடுபடும்.

    

 அச்சு ஊடகம் (print media)

மின்னணு ஊடகம் (electronic media)

சமூக ஊடகம் (social media) மற்றும் 

சமூகத்தின் பொதுவெளி ஆகிய எல்லா ஊடகங்களின் 

வாயிலாகவும் இவர் அறிவியலைப் பரப்பி வருகிறார்.


அறிவியல் ஒளி என்னும் மாதாந்திர அறிவியல் ஒளி 

ஏட்டிலும் நாளிதழ்களிலும் (உதாரணம்: தமிழ் இந்து திசை) 

கடந்த பல ஆண்டுகளாக அறிவியல் கட்டுரைகளை எழுதி 

வருகிறார். அகில இந்திய வானொலியில் அறிவியல் 

தலைப்புகளில் உரை ஆற்றி உள்ளார்.


பல்வேறு தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று

அறிவியல் விளக்கம் அளித்து வருகிறார். உதாரணமாக 

சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்டபோதும், தரையிறங்கும் 

என்று எதிர்பார்க்கப்பட்ட அன்றும் பல்வேறு தொலைக்

காட்சிகளில் தோன்றி நேரடி வர்ணனை செய்திருந்தார் இவர்.  

பல்வேறு யூடியூப் சானல்களில், இவரின் அறிவியல் 

விளக்கச் சிற்றுரைகள் வீடியோக்களாக வெளியிடப் 

பட்டுள்ளன.          


நாளும் பொழுதும் தேவைப்படும் அறிவியல் கலைச்சொற்களை 

உருவாக்குவதில் இவர் கணிசமாகப் பங்களித்துள்ளார். தமிழில் 

அறிவியல் என்று சொல்லும்போது, மிகச்சிலர் மட்டுமே 

முன்னணிக்கு வருவார்கள். அவர்களில் திரு பி இளங்கோ 

சுப்பிரமணியன் முக்கியமான ஒருவர்.    

------------------------------------------------------------------------- 

வெளியீடு: நியூட்டன் அறிவியல் மன்றம்.

---------------------------------------------------------------------- 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக