வியாழன், 12 ஆகஸ்ட், 2021

 ராமச்சந்திர மேனன், மோகன்தாஸ், வால்டர் 

தேவாரம் ஆகியோரின் போலீஸ் ராஜ்யம் 

தமிழ்நாட்டில் நடந்தபோது மக்களின் மிக எளிய 

ஜனநாயக உரிமைகள் கூட மூர்க்கத்தனமாக 

மறுக்கப்பட்டன.ஊர்வலத்தில் சென்ற நீதிபதி 

தார்குண்டே அவர்களை மண்டையில் ஓங்கி 

அடித்தது மேனனின் போலீஸ். இச்சூழலில் 

மிக்க துணிச்சலுடன் அடக்குமுறைக்கு 

அஞ்சாமல் தங்களைப் போன்ற சிலர் நின்றது 

தமிழகத்தின் புரட்சிகர வரலாறு.    


ரவீந்திரனின் சடலம் ஜிஹெச்சில் வைக்கப் 

பட்டிருந்தபோது, தாங்கள், டி எஸ் எஸ் மணி, 

சங்கரசுப்பு ஆகியோர் ஒவ்வொரு பொறுப்பை 

ஏற்றுக்கொண்டு போலீசுடன் முட்டி மோதிக்

கொண்டு நின்றதை நான் பார்த்தேன். ரவீந்திரனின்

துணைவியார் அப்போதுதான் ஆந்திராவில் இருந்து  

ஜிஹெச்சுக்கு வந்தார். அவருக்குத் தமிழ் தெரியாது.

தம் கணவரின் உடலைக் காண விரும்பிய அவரை 

அழைத்துக் கொண்டு டீன் அவர்களின் 

அனுமதியைப் பெற, ஒவ்வொரு மாடியாக 

நாங்கள் ஏறி இறங்கினோம். கடுமையான 

பிரயாசைகளுக்குப் பிறகே சில எளிய 

உரிமைகளைக்கூட அன்று பெற முடிந்தது.        .

 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக