திங்கள், 30 ஆகஸ்ட், 2021

 சொத்து குவிப்பு வழக்கின் விசாரணைக்காக திமுகவின் மாண்புமிகு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கோர்ட்டில் நேற்று குடும்பத்தினருடன் ஆஜராகினர்.

கடந்த 2006 -11 வரையிலான திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, அமைச்சரின் உதவியாளர் செண்பகமூர்த்தி மற்றும் தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகிய 5 பேர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கின் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வழக்கின் விசாரணைக்காக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட ஐந்து பேரும் மாவட்ட நீதிமன்றத்தில்
இன்று ஆஜராகினர்.
இந்த வழக்கை
தள்ளுபடி செய்ய வேண்டும்
(அமைச்சர் சொத்து சேர்ப்பது குற்றமா..?) என்றும் அவர்கள் மனு அளித்தனர்.
வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி வரும் செம்படம்பர் மாதம் 15 ஆம் தேதி மீண்டும் 5 பேரையும் ஆஜாரகும்படி உத்தரவிட்டு வழக்கை அன்றைய தேதி ஒத்திவைத்தார்.
காமராஜர் பிறந்த ஊரின் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் சாரி மாண்புமிகு அமைச்சர்கள் குடும்பத்தினருடன்
நீதி மன்றத்தில் லஞ்ச வழக்கில் ஆஜர்..
அதுவும் வழக்கறிஞர்கள் படை சூழ,சிங்க நடைப்போட்டு..
கொஞ்சமாவது வெட்கம்,மானம் வேண்டாமா..?
இதில் இவர்களை மாண்புமிகு
என அழைக்க வேண்டுமாம்..?
என்ன கொடுமை..?
காமராஜர் பிறந்து வளர்ந்து
அரசியல் செய்த ஊரில்,
அவரை தோல்வியடையச் செய்து,
இப்படிப் பட்டவர்களை அதே மாவட்டத்தில் வெற்றி பெற செய்து,அவர்களை மீண்டும் மீண்டும் அமைச்சர்களாக்கி அழகு பார்க்கும்
இந்த மக்களை என்ன என்பது..?
இந்த லட்சணத்தில்
ஒருவர் வருவாய்துறை,
மற்றொருவர் தொழில்துறை..
திருடன் கையிலேயே சாவியை கொடுத்த கதைதான்..
இதை எந்த மீடியாக்களாவது வெளிபடுத்துகிறதா..?
விமர்சனம் செய்கிறதா...?
அட இந்த பதிவை யாராவது பெரிதா எடுத்து கொள்ள போகிறார்களா..?
யார் செய்யல...
இது எல்லாம்சகஜமப்பா..
என சாதரண மனநிலைக்கு அனைவரும் போனது எப்படி..?
எதனால்.?ஏன் இப்படி ஆனோம்...?
இதற்கு இனி விடிவுகாலமே வராதோ..?
=========================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக