சனி, 21 ஆகஸ்ட், 2021

 ///சோசியலிச அறத்தின்படி பார்த்தால் 

மாவட்ட ஆட்சியர் முதற் கொண்டு 

தூய்மைப் பணியாளர்‌ வரை ஒரே 

ஊதியம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்///


இது சரியல்ல. 

சோஷலிசம் என்றால் என்ன என்று 

மார்க்சியம் வரையறுத்துள்ளது.

அதன்படி, சோசலிஷத்திலும் 

மனிதர்களுக்கு இடையில் ஊதிய 

வேறுபாடு (wage disparity) இருக்கும்.

ஏனெனில் சோஷலிசம் என்பது 

சக்திக்கு ஏற்ற உழைப்பும் உழைப்புக்கு 

ஏற்ற ஊதியமும் ஆகும். உழைப்புக்கு 

ஏற்ற ஊதியம் எனும்போது ஊதிய வேறுபாடு 

தவிர்க்க இயலாதது. 


இந்த ஊதிய வேறுபாடு 1:100 என்ற அளவில் 

கூட இருக்கும். காலப்போக்கில் இந்த 

வேறுபாடு குறையும். ஒரே நொடியில் ஊதிய 

வேறுபாட்டைக் களைந்து விட முடியாது.

இதுதான் சோஷலிசம்.


அடுத்து, எம்ஜியாரின் சத்துணவுத் திட்டம் முதல் 

கருணாநிதி கொண்டு வந்த மாணவர்களுக்கு 

இலவச பஸ் பாஸ் திட்டம், ஜெயலாலிதா 

கொண்டு வந்த மாணவர்களுக்கு இலவச 

லேப்டாப் திட்டம், இன்று மு க ஸ்டாலின் கொண்டு  

வந்த பெண்களுக்கு பேருந்துகளில்  

இலவசப் பயணம் வரை அனைத்து சமூக நலத் 

திட்டங்களும் சோஷலிஸக் கூறுகளைக் கொண்ட 

திட்டமே. அது போன்றதே மத்திய மாநில 

அரசுகள் தங்களின் ஊழியர்களுக்கு வழங்கும் 

பென்ஷன் திட்டமும்.


இத்திட்டங்களை பித்தலாட்டம் என்று கூறுவது 

மானுட விரோதத் தன்மை உடையது. பாஜக 

ஆர் எஸ் எஸ் மற்றும் சங்கத் பரிவாரங்கள் கூட 

அப்படிச் சொல்ல நாணுவார்கள். பென்ஷன்

என்பது சோஷலிஸத் திட்டமே. கோடானு கோடி 

உழைக்கும் மக்களுக்கு எதிரான கருத்தைக் 

கைவிடுமாறு வேண்டுகிறேன்.    


தோழமையுள்ள, 

பி இளங்கோ சுப்பிரமணியன் 

முன்னாள் மாவட்டச் செயலாளர் 

NFTE BSNL, சென்னை மாவட்டம், சென்னை.  


.        


 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக