பத்ம விருதுகள்!
நியூட்டன் அறிவியல் மன்றத்தின் கோரிக்கை!
--------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------
1) ஐந்து முறை உலக சாம்பியனாக இருந்தவரும்
இந்திய சதுரங்கத்தை பூஜ்யத்தில் இருந்து
INFINITY வரை கொண்டு செல்ல உழைத்தவருமான
விஸ்வநாதன் ஆனந்துக்கு பாரத ரத்னா
வழங்க வேண்டும். ஒரு சதுரங்க நிபுணர்
என்பவர் கணித நிபுணரும் ஆவார் என்று
அறிவியல் நிரூபித்துள்ளது.
2) சமூகத்தின் பொருள் உற்பத்தியில் ஈடுபட்டு
சமூகம் உயிர் வாழ வழிவகுக்கும் அறிவியல் துறை
சார்ந்தோருக்கு பத்ம விருதுகள் வழங்குவதில்
முன்னுரிமையும் பெரும்பங்கும் வேண்டும்.
3) கூத்துக்காரர்களுக்குத்தான் பத்ம விருது என்ற
இழிந்த மனப்பான்மை அகல வேண்டும்.
4) கவிதை என்ற பெயரில் சுய இன்ப அனுபவங்களை
எழுதி வரும் மூதேவிகளுக்கு மீண்டும் மீண்டும்
என்ன மயிருக்கு பத்ம விருதுகள் வழங்க வேண்டும்?
5) மறைந்த அறிவியல் எழுத்தாளரும் அறிவியல்
பரப்புநருமான சுஜாதா அவர்களுக்கு
posthumousஆக பத்மபூஷண் விருது வழங்கு!
6) பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த
டாக்டர் ரமணனுக்கு (முன்னாள் வானிலை இயக்குனர்)
பத்மஸ்ரீ விருது வழங்கு!
7) அறிவியல் ஒளி ஏட்டின் ஆசிரியர் நா சு சிதம்பரம்
அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கு!
8) எளிதில் கிடைக்கும் பொருட்களில் இருந்து
மிகவும் அரிய அறிவியல் உண்மைகளை
நிரூபிக்கும் இயற்பியல் பரிசோதனைகளை
பேரளவில் நூற்றுக் கணக்கில் செய்து வரும்
டாக்டர் அ சுப்பையா பாண்டியன்
அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கு!
9) ஏகாதிபத்திய வாட்சப்புக்கு மாற்றாக தமிழில்
அரட்டை என்ற பெயரில் ஒரு MESSAGING APPஐ
உருவாக்கி வரும் ZOHO நிறுவனத்தின் உரிமையாளர்
தமிழர் ஸ்ரீதர் வேம்புவுக்கு பத்மபூஷண் வழங்கு!
10) இஸ்ரோ முன்னாள் தலைவர் கே சிவனுக்கு
பத்மபூஷண் வழங்கு!
-----------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக