விஞ்ஞானிகள் ஏன் பொருள்முதல்வாதிகளாக இல்லை?
-----------------------------------------------------------------------------------
திராவிட இயக்கம் தனியுடைமையை
எதிர்க்கும் இயக்கம் அல்ல. தனிச்
சொத்துரிமையை போற்றிப் பாதுகாக்கும்
இயக்கம். எனவே பிற்போக்கான இயக்கம்.
நான் தோழர் ஏ எம் கே அவர்களின் மாணவன்.
திராவிட இயக்கத்தின் போலித்தனத்தை
ஏ எம் கே அவர்களைப் போல் யாரும்
தோலுரித்தது இல்லை.
எனவே நான் ஒவ்வொரு அம்சத்திலும்
திராவிடக் கசடுகளை (Dravidian scum)
தீவிரமாக எதிர்த்தே வந்திருக்கிறேன்.
இனியும் எதிர்ப்பேன்.
பிற்போக்கான திராவிட சித்தாந்தத்தை
அப்புறப் படுத்தாமல் மார்க்சிய
லெனினிய மாவோ சிந்தனை தமிழ்நாட்டில்
ஒருபோதும் வேரூன்றாது.
20 ஆண்டுகளுக்கு முன்பு, அறிவியலைப்
பரப்ப விரும்புகிறேன் என்றும் அதற்காக
மன்றம் அமைக்கப் போகிறேன் என்றும்
நான் தோழர் ஏ எம் கே அவர்களிடம்
சொன்னபோது, சமூகத் தாக்கம் உடைய
விஷயங்களில் உள்ள அறிவியலை
எடுத்துச் சொன்னாலே போதும் என்று
ஏ எம் கே அவர்கள் அறிவுரை கூறினார்.
2g அலைக்கற்றை, கூடங்குளம் அணுஉலை,
மரபணு மாற்றப்பட்ட பயிர் என்று
பலவாறாக, இழையறாத அறிவியல் பணியை
தோழர் ஏ எம் கே அவர்களின் அறிவுரையின்
அடிப்படையில் செய்து வருகிறேன்.
அறிவியல் பணிகளில் தீவிரம் காட்டியபோது,
பல்வேறு அறிவியல் அறிஞர்கள் கடவுள்
நம்பிக்கை கொண்டிருந்தது எனக்கு
வியப்பைத் தந்தது. அது குறித்த
சந்தேகத்தையும் ஏ எம் கே அவர்களிடம்
கேட்டேன்.
விஞ்ஞானி என்றால் பொருள்முதல்
வாதியாகத்தான் இருக்க வேண்டும் என்று
காரல் மார்க்ஸ் ஏதேனும் நிபந்தனை
விதித்து இருக்கிறாரா என்று என்னிடம்
திருப்பிக் கேட்டார். அப்படி மார்க்சோ
மார்க்சியமோ நிபந்தனை எதுவும்
விதிக்கவில்லை என்கிறார். ஹெக்கல்
பொருள்முதல்வாதியா? ஹெக்கல்
சொன்னதை (இயங்கியலை) மார்க்ஸ்
ஒதுக்கவில்லையே)! தேவையான அளவில்
திருத்திக் கொண்டார் அல்லவா?
இப்படி மிக்கது தெளிவாக ஏ எம் கே அவர்கள்
விளக்கம் அளித்தார். விரித்தால் பெருகும்.
சமூகத் தாக்கம் உடைய பல்வேறு விஷயங்களில்
உள்ள அறிவியலை பரந்துபட்ட மக்களுக்குக்
கொண்டு சென்றேன்.
ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் எப்பேர்ப்பட்ட
விஞ்ஞானி! அவர் ஆழ்ந்த கடவுள் விசுவாசி.
அவர் ஸ்காட்லாந்து சர்ச்சின் முன்னவராக
(Elder) இருந்தார்.
மைக்கேல் ஃபாரடே ப்பேர்ப்பட்ட விஞ்ஞானி!
அவர் இறுதி மூச்சு வரை மிகவும் தீவிரமான
கிறிஸ்துவ விசுவாசியாக இருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக