ஒவ்வோராண்டும் ஏப்ரல் 14ஆம்
நாளன்று தமிழ்நாட்டில் equinox
ஏற்படுகிறது என்னும்போது,
2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த
தமிழ் மக்கள் அந்த equinoxஐ
கண்டறிந்தது எப்படி?
1) சித்திரையை முதல் மாதமாகக் கொண்ட
புத்தாண்டு 2) ஆவணியை முதல் மாதமாகக்
கொண்ட புத்தாண்டு 3) தையை முதல்
மாதமாகக் கொண்ட புத்தாண்டு என்னும்
மூன்று புத்தாண்டுகளையும் பரிசீலிப்போம்.
என்னுடைய கேள்வி இதுதான். ஒரு புத்தாண்டு
என்றால் அதன் முதல் நாளை அன்று, 2000
ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள்
கண்டறிந்தது எப்படி?
இன்று உள்ளதுபோல வானியல் அன்று
வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.
அன்று தொலைநோக்கி கூட கிடையாது.
இன்ருல்லபல கருவிகள் அன்று இல்லை.
இச்சூழலில் ஒரு புத்தாண்டின் முதல்
நாளை எப்படி அடையாளம் கண்டனர்?
இந்தக் கேள்விக்குப் பதில் தெரியாமல்
புத்தாண்டை நிர்ணயம் செய்ய முடியாது.
புத்தாண்டு விஷயம் என்பது அறிவியல்
விஷயம்! வானியல் தொடர்பான விஷயம்.
எந்த ஒரு புத்தாண்டையும் எவரும்
ஆதரிக்கலாம். அது எப்படிக் கண்டறியப்
பட்டது? இதற்கான விடை தேவை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக