சிறுமி கோதையின் உலக சாதனை!
ரூபிக் கியூபை சால்வ் செய்து சாதனை!
--------------------------------------------------------------
ரூபிக் கனசதுரத்திற்கு 6.88 நொடியில்
தீர்வு கண்ட சிறுமி!
இச்சிறுமி கோதை ஆவாள்.
சிறுமியின் வயது 7 மட்டுமே.
சென்னையைச் சேர்ந்த இந்தச் சிறுமியின்
சாதனையைப் போற்றுவோம்.
இணைக்கப்பட்ட 3 நிமிட வீடியோவைப்
பாருங்கள்.
சிறுமி கோதை சுடோகு புதிர்களையும்
அதி விரைவாக விடுவித்துள்ளாள்.
சுடோகு புதிர்களை அடுத்து
ரூபிக் கனசதுரத்தை விடுவித்து உள்ளாள்.
TNCA எனப்படும் Tamil Nadu Cube Association
என்னும் அமைப்பு இருக்கிறது. இது கியூப்களை
solve செய்ய பயிற்சி அளிக்கிறது.
இந்த TNCA அமைப்பை ஆர்வமுள்ளவர்கள்
தொடர்பு கொள்ளுங்கள்.
சுடோக்கு போடச் சொன்னேன்.
எத்தனை பேர் போடுகிறீர்கள்?
நீங்கள் எக்கேடும் கெடுங்கள்!
நாசமாகப் போங்கள்!
உங்கள் குழந்தைகளை நாசமாக்கி
விடாதீர்கள்!
தாழ்வு மனப்பான்மையை விட்டுத்
தொலையுங்கள்!
1 சுடோக்கு போடுங்கள்.
2. சுடோக்குப் புதிர்களை உண்டாக்குங்கள்.
3, ரூபிக் கனசதுரங்களை சால்வ் செய்யுங்கள்.
4. சதுரங்கம் விளையாடுங்கள்.
5. சூதாட்டத் தன்மையற்றதாகவும்
ADDICTIONஐ ஏற்படுத்தாமல் பார்த்துக்
கொண்டு சீட்டு விளையாடுங்கள்.
அதன் மூலம் PERMUTATION, COMBINATION
பற்றிய அறிவில் உச்சம் தொடுங்கள்.
6. தேவையான அனைத்தையும் மனப்பாடம்
செய்து வைத்துக் கொள்ளுங்கள். விளையாட்டுப்
போல மனப்பாடம் செய்யலாம்.
7. தாழ்வு மனப்பான்மைக்கு இடம்
தராதீர்கள்!
8. TNCA அமைப்புடன் தொடர்பு ஏற்படுத்திக்
கொள்ளுங்கள்.
9. அறிவியல் ஒளி ஏட்டுக்கு சந்தா கட்டி
இதழை வரவழித்துப் படியுங்கள்.
10. முதலில் ரூ 100 அல்லது ரூ 200 விலையில்
நல்ல தரமான ஒரு கியூபை வாங்கி
உங்கள் பிள்ளைகளுக்குக் கொடுங்கள். .
-------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக