கரக்பூர் ஐஐடியும் அது வெளியிட்ட காலண்டரும்!
அதன் விளைவாக எழுந்துள்ள சர்ச்சைகளும்!
இந்தியா முட்டாள்களின் நாடு என்பதன் நிரூபணம்!
---------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------
கரக்பூர் ஐஐடி (Kharagpur IIT) தற்போது செய்தியில்
அடிபடுகிறது. கரக்பூர் எங்குள்ளது, தெரியுமா?
தெரியுமே, உத்தரப் பிரதேசத்தில் உள்ளது!
உபியின் துறவு பூண்ட முதல்வரான யோகி
ஆதித்யநாத்தின் தொகுதிதானே அது என்று
டக்கென்று சொல்லுவார்கள் நம்மூரில் சிலர்!
யார் அவர்கள்? வேறு யார்? Dravidian scumதான்
அவர்கள்! scum என்றால் என்ன என்று தெரியுமா?
கொஞ்சம் ஆங்கிலமும் தெரிந்து வைத்துக் கொள்ள
வேண்டும். முட்டாளாக இருக்கலாம், தவறில்லை!
அடிமுட்டாளாக, ஜமக்காளத்தில் வடிகட்டிய
முட்டாளாக இருக்கக் கூடாது. எனவே scum என்பதன்
பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள்.
திராவிடக் கசடுகள் கூறிய மேலே உள்ள விடை
சரிதானா? இல்லை. கரக்பூர் என்பது உத்தரப்
பிரதேசத்தில் இல்லை. அது மேற்கு வங்கத்தில்
இருக்கிறது. ஆம், கரக்பூர் ஐஐடியானது மேற்கு
வங்கத்தின் தலைநகரான கொல்கொத்தாவில்
இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
கரக்பூர் ஐஐடிக்கும் உத்தரப் பிரதேசத்திற்கும்
ஸ்நானப் பிராப்தி கிடையாது. ஸ்நானப் பிராப்தி
என்றால் என்ன தெரியுமா? தெரியாது. கொஞ்சம்
சமஸ்கிருதமும் தெரிந்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
இன்னார் செத்துப் போனால், இன்னாரெல்லாம்
ஸ்நானம் பண்ண வேண்டும் என்று வரையறுக்கப்
பட்டுள்ளது. அப்படி வரையறுக்கப் பட்டவர்கள்தான்
ஸ்நானப் பிராப்தி உள்ளவர்கள்.
ஒரு உதாரணம் சொல்லட்டுமா? மேற்கு வங்கத்தில்
34 வருஷம் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆட்சி நடந்தது.
பின்னர் மார்க்சிஸ்ட்களின் நந்திகிராமம் சிங்கூர்
மிருக்கத்தங்களின் பின்னர் அக்கட்சி மமதாவிடம்
தோற்றது. கடந்த ஆண்டு தேர்தலில் மார்க்சிஸ்ட்
கட்சி முற்றிலுமாகத் தோற்றது. அதாவது செத்துப்
போனது.
புத்ததேவ் பட்டாச்சார்யா கொள்ளி போட்டார்.
மூத்த மகன் என்ற முறையில் அவரின் உரிமை அது.
துஷ்டிக்கு நானும் போயிருந்தேன். எங்களுக்கெல்லாம்
ஸ்நானப் பிராப்தி உண்டு. நான் முதன் முதலில்
மார்க்சிஸ்ட் கட்சியில்தான் இருந்தேன். பின்னர்தான்
எம் எல் இயக்கத்துக்குப் போனேன்.எனவே
எனக்கு ஸ்நானப் பிராப்தி இருந்தது. நிற்க.
உபியில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தொகுதி
கோரக்பூர் (Gorakhpur). கரக்பூர் வேறு; கோரக்பூர்
வேறு. கரக்பூர் ஐஐடி மேற்கு வங்கத்தில் உள்ளது.
கோரக்பூரில் ஐஐடி எதுவும் கிடையாது.
கரக்பூர் ஐஐடியில் படித்த பிரபலம் யார் என்று
சொல்ல முடியுமா? தெரியாது அல்லவா?
தெரிந்திருந்தால்தான் ஆச்சரியம்! டெல்லி
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கரக்பூர் ஐஐடியில்
படித்தவர்தான்.
சரி, இப்போது விஷயத்துக்கு வருவோம்.
பாருங்கள் எவ்வளவு பீடிகை! பீடிகை இல்லாமல்
இந்தியாவில் எந்த ஒரு விஷயத்தையும் சொல்ல
முடியாது. தரம், தராதரம், தகுதி இந்தச்
சொற்களுக்கெல்லாம் இந்தியாவில் எந்த
மரியாதையும் கிடையாது.
கரக்பூர் ஐஐடி இந்த ஆண்டுக்கான 2022 ஒரு
காலண்டரை வெளியிட்டு உள்ளது. அது ஒரு
மந்த்லி காலண்டர்! 12 மாதத்திற்கும் சேர்த்து
18 பக்கம் கொண்ட காலண்டர் அது.
Recovery of the Foundations of the Indian
knowledge systems என்ற தலைப்பிலான
காலண்டர் அது. முற்ற முழுக்க அறிவியல்
வழிப்பட்ட காலண்டர் அது. அதில்
Rebuttal to the Aryan invasion myth என்று முதல்
பக்கத்திலேயே உள்ளது.
இதைப் படித்த Dravidian scumகளுக்கு தங்களின்
பிழைப்பு முடிந்து போகிறதே என்று ஆற்றாமை.
எனவே உரிய கூலிக்கு மேலேயே கொடுத்து,
கூலி எழுத்தாளர்களை ஏற்பாடு செய்து ஆரிய
திராவிட பிரித்தாளும் சூழ்ச்சியின் நெருப்பு
அணையாமல் இருக்க வேண்டும் என்று
முயற்சி செய்கிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும் முதுகெலும்பை
முறிக்கும் பதிலை நியூட்டன் அறிவியல்
மன்றம் வழங்கும். இப்போதுதான்
காலண்டர் கிடைத்தது. அதைப் படித்துக்
கொண்டிருக்கிறேன். படித்து முடித்ததும்
பதில்கள் வெளியிடப்படும்!
அறிவார்ந்த வாசகர்கள்ஆதரவு தர வேண்டுமென்று
கேட்டுக் கொள்கிறேன்.
******************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக