புதன், 26 ஜனவரி, 2022

 தமிழ் வளர்ச்சித் துறையின் விருதுகள் 

அறிவியல் அறிஞர்களுக்கு வழங்கப்பட வேண்டும்!

-----------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

--------------------------------------------------------------

Interoperability 

Backward compatibility 

Equipment commonality 

Precision and accuracy

-----------------------

மேலே கூறிய சொற்களுக்கெல்லாம் 

நிகரான கலைச்சொற்கள் தமிழில் வேண்டும்.


இன்னும் ஆயிரமாயிரம் சொற்கள் தமிழில் 

வேண்டும். அப்படி இருந்தால்தான் தமிழில் 

அறிவியல் கட்டுரை எழுத முடியும்.


ஆனால் இங்கே அறிவியல் அறிவு துளிக்கூட 

இல்லாதவர்களுக்கு,

a ப்ளஸ் b whole squared என்றால் என்ன என்று 

தெரியாதவர்களுக்கு 

தமிழ் வளர்ச்சித்துறை விருது வழங்குகிறது.


அறிவியல் வளராமல் தமிழ் எப்படியடா 

வளரும்?


கடந்த பத்தாண்டுக்கும் மேலாக 

தமிழில் அறிவியல் பத்திரிகை நடத்தி வரும்

அறிவியல் ஒளி ஆசிரியர் நா சு சிதம்பரம் 

அவர்களுக்கு அல்லவா முதன் முதலில் 

தமிழ் வளர்ச்சித்துறையின் விருது 

வழங்கப்பட வேண்டும்!

-------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக