சனி, 15 ஜனவரி, 2022

 இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன் மீதான 

விமர்சனங்கள், அவதூறுகளுக்குப் பதில்!

-------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

---------------------------------------------------------

சந்திரயான்-2வை 2019ல் விண்ணில் செலுத்தும் 

முன்பு இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன் 

திருப்பதி கோவிலுக்குச் சென்று கடவுளை 

வழிபட்டார். 


முன்னதாக 2013ல் மங்கள்யானை 

விண்ணில் செலுத்தும் முன்பு அன்றைய 

இஸ்ரோ தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் 

திருப்பதிக்குச் சென்று பெருமாளை வழிபட்டார்.

இத்தகைய வழிபாடுகள் விமர்சனத்துக்கும் 

அவ்விருவர் மீதான அவதூறுகளுக்கும் 

வழி வகுத்தன. இந்த வழிபாடு சரியா? இதற்கான 

அறிவியலின் பதில் என்ன? காண்போம்!


1) முதன் முதலில் இது ஒரு trivial matter என்று 

உணர வேண்டும். இது trivial matter in every 

respect என்பதால் இதற்கான பதில் ஒரு 

சீரியஸான anti thesis  ரேஞ்சுக்கு இருக்க 

வேண்டிய அவசியமில்லை.


2) உலகம் தோன்றிய நாள் முதல் இன்று வரை

கடவுள் உண்டா என்ற கேள்விக்கு 

பைனரியாகத்தான் (உண்டு, இல்லை) பதில் 

சொல்லப் படுகிறது. இந்தக் கேள்விக்கு என்று 

ஒரு ஒற்றைப் பதில் சொல்லப் படுகிறதோ, 

அதுவரை இரண்டு பதில்களும் 

சம மதிப்பு உடையவையே!


3) எனவே 

அ) கடவுள் இருக்கிறார்

ஆ) கடவுள் இல்லை 

என்ற இரண்டு பதில்களில் 

ஒன்று உயர்ந்தது ஒன்று தாழ்ந்தது என்று 

சொல்வதற்கு இடமில்லை.ஏனெனில் ஒன்று 

உயர்ந்தது என்றும் மற்றொன்று தாழ்ந்தது 

என்றும் இன்றுவரை நிரூபிக்கப் படவில்லை.


4) விஞ்ஞானிகளில் சிலர் கடவுள் நம்பிக்கை 

உடையவர்கள் ஆகவும் சிலர் நம்பிக்கை

அற்றவர்கள் ஆகவும் இருக்கின்றனர்.

நியூட்டனுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு.

கத்தோலிக்க திருச்சபையின் கோபத்துக்கும் 

தண்டனைக்கும் இலக்கான கோப்பர் நிக்கஸ்,

கலிலியோ இருவரும் கடவுளை ஏற்றுக் 

கொண்டவர்கள்தாம்! 


5) அதே நேரத்தில் ஸ்டீபன் ஹாக்கிங் 

கடவுளை ஏற்காதவர். There is no unanimity 

or uniformity even among the best scientists.   

எனவே கடவுளை ஏற்றுக் கொண்ட 

நியூட்டனை, அதை முன்னிட்டுக் குறைத்து 

மதிப்பிடுவது முட்டாள்தனம்.     


6) அறிவியல் வளர்ச்சியும் தொழில் 

வளர்ச்சியும் அசுரத் தனமாக ஏற்பட்டு  

மானுட வாழ்க்கையை வெகுவாக செம்மைப் 

படுத்தி உள்ளன. மனித குலத்தின் ஆயுள்

70 வயதைத் தாண்டி நிற்கிறது.டாலி  என்ற 

வெள்ளாட்டில் தொடங்கிய குளோனிங் 

ஒட்டகம் போன்ற பெரிய விலங்குகளையும் 

படைத்துக் காட்டி உள்ளது. பன்றியின் 

இதயத்தை எடுத்து மரபணு மாற்றம் செய்து 

மனிதனுக்குப் பொருத்தும் அளவுக்கு மருத்துவம் 

சிகரம் தொட்டுள்ளது.


7) இவையெல்லாம் கடவுளின் மீதான பிரமிப்பை,

கடவுளின் பாத்திரத்தை வெகுவாகக் குறைத்து 

விட்டது. கம்யூனிஸப் புரட்சி நடைபெற்ற நாடுகளில் 

ரஷ்யா, சீனா, கியூபா, வியட்நாம், வடகொரியா 

கம்பூச்சியா, அல்பேனியா போன்ற நாடுகளில் 

பொருள்முதல்வாதம் என்னும் நாத்திகத் 

தத்துவம் மக்களுக்குக் கற்பிக்கப்பட்டு      

உலகில் கணிசமான பகுதி மக்கள் கடவுள் 

நம்பிக்கையிலிருந்து விடுபட்டுள்ளனர்.


8) கடவுள் உண்டா இல்லையா என்ற கேள்வி 

ஒரு காலத்தில் மில்லியன் டாலர் கேள்வியாக 

இருந்தது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் 

காரணமாக அக்கேள்வியின் மவுசு 

குறைந்து விட்டது. "உனக்கு கமல் பிடிக்குமா 

அல்லது ரஜனி பிடிக்குமா" என்ற கேள்வியின் 

தரத்துக்கு அது கீழிறங்கி விட்டது. The question 

remains but with reduced importance.               

   

9) எனவே கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு 

ஒருவர் அளிக்கும் பதிலை வைத்துக் கொண்டு 

அவரை மதிப்பிடுவது சரியல்ல. அப்படி 

மதிப்பிடும்பட்சத்தில், மனித குலத்துக்கு 

கணிசமாகப் பங்களித்துள்ள பல கணித 

மேதைகளை,அறிவியலாளர்களை சரியாக 

மதிப்பிட இயலாமல் போகும்.


10) 1843ல் காரல் மார்க்சுக்கும் ஜென்னிக்கும் 

ஜெர்மனியில் உள்ள புனித பால் தேவாலயத்தில் 

(St Pauls church) திருமணம் நடைபெற்றது. 

பாதிரியார்கள்தான் இத்திருமணத்தை நடத்தி 

வைத்தனர். இதற்காக மார்க்ஸை விமர்சிக்கக் 

கூடுமா?


11) டாக்டர் சிவன் திருப்பதியில் வழிபாடு 

செய்ததை கண்டனம் செய்வோர்கள் யார்?

வேறு யார்? நம்மூர் போலிப் பகுத்தறிவுவாதிகள்!

பொருள்முதல்வாதம் என்றால் என்னவென்றே 

தெரியாத முழுமூடர்களான திராவிடக் 

கசடுகள்தான் (Dravidian scum) தங்களின் 

காழ்ப்புணர்வையும் முட்டாள்தனத்தையும் 

வெளிப்படுத்தி வருகின்றனர்.


12) கொளத்தூர் மணி சிவன் அவர்களை 

அவதூறு செய்கிறார். கொளத்தூர் மணிக்கு 

என்ன அறிவியல் தெரியும்? ஒரு ரோமமும் 

தெரியாது என்பதுதானே உண்மை!


13) டாக்டர் சிவனுக்குப் பதிலாக, கொளத்தூர் 

மணியை இஸ்ரோவுக்கு அனுப்புவோம். அவரால் 

டாக்டர் சிவன் செய்த வேலையைச் செய்ய 

முடியுமா? முடியாது.


14) சரி, கொளத்தூர் மணி படிக்காத முட்டாள். 

அவரை விட்டு விடுவோம். டாக்டர் சுப  

வீரபாண்டியனை இஸ்ரோவுக்கு அனுப்புவோம்  

அவரால் சிவன் செய்த வேலையில் லட்சத்தில் 

ஒரு பங்காவது செய்ய இயலுமா? Celestial mechanicsல் 

0.0000001 சதவீதமாவது சுப வீரபாண்டியனுக்குத் 

தெரியுமா?  


15) சந்திரயான்-1, சந்திராயன்-2, மங்கள்யான், 

அடுத்து வரவிருக்கும் ககன்யான் ஆகியவற்றை 

விண்வெளிக்கு அனுப்புவது எளிதல்ல. இது ஒரு 

சினிமா தயாரிப்பது போன்றதல்ல.


16) செயற்கைக்கோளைத் தயாரிப்பது, அதைச் 

செலுத்த SLVயை (Satellite Launch Vehicle)

உருவாக்குவது, அவற்றி விண்ணில் செலுத்துவது. 

விண்ணில் அவற்றை வேலை செய்ய வைப்பது 

ஆகியவை தனி ஒருவரால் செய்யக் கூடியதல்ல.

ஆயிரக்கணக்கான பேரின் கூட்டு முயற்சி இது.


 17) ஒரு செயற்கைக்கோளை விண்ணில் அனுப்ப 

ஆண்டுக் கணக்கில் ஆயிரம் பேர் ஊண் உறக்கமின்றி

அறிவுடனும் அர்ப்பணிப்புடனும் உழைத்தால்தான் 

முடியும். அப்படி உழைக்கும் அந்த ஆயிரம் பேரில் 

எத்தனை பேர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்?


18) அந்த ஆயிரம் பேரில் 950 பேர் கடவுளை 

ஏற்றுக் கொண்டு வணங்குபவர்கள். அவர்கள் 

இல்லாமல் எந்த செயற்கைக்கோளையும்

விண்ணில் செலுத்த இயலாது.


19) அவர்களுக்குப் பதிலாக போலி நாத்திகம் 

பேசும் திராவிடக் கசடுகளை, அறிவியல் 

கற்காத புழுத்த தற்குறிகளை அனுப்ப 

முடியுமா? அனுப்பினால் இஸ்ரோ இயங்குமா?


20) எனவே அறிவியல் கல்லாத யார் எவரும் 

டாக்டர் சிவன் அவர்களைக் கேள்வி கேட்க 

இயலாது.அப்படிக் கேட்டால் அந்தத் தற்குறிகளின் 

தாடையை நாங்கள் உடைப்போம்.


அப்படியானால் டாக்டர் சிவன் அவர்கள் 

கேள்விக்கு அப்பாற்பட்டவரா? அவரை யாரும் 

கேள்வி கேட்க முடியாதா? அப்படி அல்ல.

தேவைப்பட்டால், டாக்டர் சிவனை 

நியூட்டன் அறிவியல் மன்றம் கேள்வி கேட்கும்! 

டாக்டர் சிவனின் சட்டையைப் பிடித்துக் 

கேள்வி கேட்கும்! திராவிடக் கசடுகள் கேட்கும் 

முட்டாள்தனமான அறிவீனமான கேள்வியை 

அல்ல. சமூகத்திற்குத் தேவையான கேள்விகளை 

நாங்கள் அவரிடம் கேட்போம்! திராவிடக் 

கசடுகள் அவதூறு செய்ய முயன்றால், அவர்களின் 

முதுகுத்தொலியை நியூட்டன் அறிவியல் 

மன்றம் உரிக்கும்.

***************************************

1 கருத்து:

  1. YouTube - videoodl.cc
    YouTube. YouTube. YouTube. YouTube. Videos. YouTube. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. youtube to mp3 320kbps Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos. Videos.

    பதிலளிநீக்கு