வெள்ளி, 14 ஜனவரி, 2022

 இஸ்ரோ தலைவர் சிவன் பணிநிறைவு!

புதிய தலைவராக சோம்நாத் பொறுப்பேற்பு!

-----------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-------------------------------------------------------------

இஸ்ரோவின் தலைவராக இருந்த டாக்டர் 

கே சிவன் கடந்த ஆண்டே 2021 ஜனவரியில் 

ஒய்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால்  

அவரின் ஆற்றலும் அர்ப்பணிப்பும் கருத்தில்

கொள்ளப்பட்டு, இஸ்ரோவுக்கு அவரின் 

சேவை தேவை என்று கருதிய பிரதமர் மோடி 

அவருக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கினார்.


அந்த நீட்டிப்பும் நிறைவடைந்தது. எனவே 

ஜனவரி 14, 2022ல் டாக்டர் கே சிவன் 

பணிநிறைவு எய்தினார்.

   

அவரின் இடத்தில் கேரளத்தைச் சேர்ந்த திரு 

சோம்நாத் இஸ்ரோவின் தலைமைப்

பொறுப்பை ஏற்றார். மதிப்புக்குரிய 

சோம்நாத் அவர்களுக்கு வரவேற்பை 

நல்குவோம்.


டாக்டர் கே சிவன் அவர்கள் காலத்தில் 

சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்பட்டது.

ககன்யான் திட்டப்பணிகள் வேகமடைந்தன.


சர்வதேச அளவில் மிகவும்  புகழ்பெற்ற 

தியடோர் வான் கார்மன் விருது டாக்டர் 

கே சிவனுக்கு வழங்கப் பட்டது. அறிவியலின் 

ஏதாவது ஒரு துறையில் வாழ்நாள் சாதனை 

புரிந்தவர்களுக்கு தியடோர் வான் கார்மன் 

விருது வழங்கப் படுகிறது. இவ்விருது குறித்து 

அறிவியல் ஒளி ஏட்டில் நான் ஒரு கட்டுரை 

எழுதி இருக்கிறேன்.  


இந்தியா அல்ல உலகம் மதிக்கிறது டாக்டர் 

சிவன் அவர்களை. எனவேதான் வான் கார்மன் 

விருது அவருக்குக் கிடைக்கிறது.ஆனால் 

தமிழ்நாட்டில்  கடைந்தெடுத்த போலிப் 

பகுத்தறிவுவாதிகளான திராவிடக் கசடுகள் 

டாக்டர் சிவனை அவர்களை ஏளனம் செய்து 

வருகின்றனர்.


இந்தக் குப்பைகள் டாக்டர் சிவனின் மலத்துக்குச் 

சமமாக மாட்டார்கள். எவராவது மலையாளி 

இஸ்ரோ தலைவராக இருந்தால், ஒட்டு மொத்த 

மலையாளிகளும் கடசி பேதமின்றி சாதிமத 

பேதமின்றி அவரைக் கொண்டாடுகிறார்கள். 


ஆனால் ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் 

சார்ந்த டாக்டர் சிவனை 

பனையேறி சமூகம் என்று இழிவு செய்யப்பட்ட 

நாடார் சமூகத்தைச் சேர்ந்த சிவனை 

அவர் இஸ்ரோவில் உச்சம் தொட்ட போதும் சரி,

அவருக்கு உலக அளவிலான அறிவியல் விருது 

(தியடோர் வான் கார்மன் விருது) கிடைத்த 

போதும் சரி, இங்குள்ள போலி நாத்திக 

திராவிடக் கசடுகள் அவரை மதிக்கவோ 

அங்கீகரிக்காவோ செய்யாமல் அவரைத் தூற்றிக் 

கொண்டே இருந்தனர்.


ஆனால் 

The dogs bark but the caravan passes on என்று 

ஷேக்ஸ்பியர் சொன்னது போல, டாக்டர் 

சிவன் தமது கடமையைத் தொடர்ந்து

செய்து கொண்டே வந்தார். இன்று அறிவியலை 

நேசிக்கும் அனைவராலும் போற்றப் படுகிறார்.

**************************************************************


 

 

 

தியடோர் வான் கார்மன் விருது 

என்றால் என்ன என்று தெரியுமா?

வான் கார்மன் விருது 

பெற்றவர் இஸ்ரோ சிவன்.

 


மேனனை எம் ஆர் ராதா சுட்ட சம்பவம்! 

1967 ஜனவரி 12ஆம் தேதி நடந்த சம்பவம்!

----------------------------------------------------------

மேனனை எம் ஆர் ராதா சுட்ட 

காலத்தில், வி என் ஜானகியும் 

மேனனும் லிவ்விங் டுகதர் முறையில்தான் 

வாழ்ந்து வந்தனர். முதல்வரான பிறகே 

வி என் ஜானகியைத் திருமணம் செய்தார் 

மேனன்.


எம் ஆர் ராதா மேனனை ஏன் சுட்டார்?

வி என் ஜானகியை முன்னிட்டுத்தான் 

துப்பாக்கிச் சூடு நடந்தது.


அவள் என் மனைவி என்றார் மேனன்.

எனவே நீ அவளுடன் பழகக் கூடாது 

என்றார் மேனன். 


அடப்போய்யா, அவள் என்ன உன் 

மனைவியா, இல்லையே என்றார் ராதா.


ஜெயிலுக்குப் போய், விடுதலையாகித்

திரும்பிய ராதா புராணப் படங்களிலும்

நடித்தார். அவர் கடவுள் மீது 

நம்பிக்கை கொண்டு விட்டார்.


இந்த உண்மைகளை மறைத்து விட்டு.

எம் ஆர் ராதாவை புரட்சியாளன்

ரேஞ்சுக்கு திராவிடர் கழகம் 

கொண்டு செல்கிறது. அது சந்தி

சிரித்துப் போனது  தயவு செய்த் 

நீங்கள் உண்மையைச் சொல்லுங்கள்.


இதில் காமராசருக்கு எவ்வித 

சம்பந்தமும் கிடையாது. திருட்டுப் பயல் 

ராதா காமராசரை சம்மந்தப் 

படுத்துவது அயோக்கியத்தனம் ஆகும்.

இது ஒரு காமவெறியால் நடந்த 

ஒரு இழிந்த சம்பவம்.

 


அதைப் பொருட்படுத்த 

வேண்டியதில்லை.கடவுள் மீது 

நம்பிக்கை கொண்டிருப்பதற்கும்

நம்பிக்கை இல்லாமல் இருப்பதற்கும் 

எவர் ஒருவருக்கும் உரிமை இருக்கிறது.


விஞ்ஞானிகள் என்றாலும் அவர்களிலும் 

பலருக்கு கடவுள் நம்பிக்கை இருந்தது.

இருக்கிறது.


நியூட்டன் கடவுளை ஏற்றவர்.

டாக்டர் அப்துல் கலாம் கடவுளை 

ஏற்றுத் தொழுகை செய்தவர்.   

 ஸ்டீபன் ஹாக்கிங் கடவுளை 

ஏற்காதவர். 


கடவுளின் இருப்பு அல்லது இன்மை சார்ந்து 

விஞ்ஞானிகள் இடையே ஒருமித்த 

கருத்தில்லை. எனவே டாக்டர் சிவன் 

கடவுள் நமிக்கை கொண்டிருக்கிறார் 

என்பதற்காக அவரை நாம் குறைத்து 

மதிப்பிடவோ தூற்றவோ 

வேண்டியதில்லை.


ஒருவருடைய கடவுள் நம்பிக்கை சார்ந்து 

அவரைத் தீர்மானிப்பது சரியல்ல.

அவர் ஏற்றுக் கொண்டுள்ள பொறுப்பில்

அவரின் performance எப்படி இருந்தது 

என்பது மட்டுமேஅவரை எடைபோடும் 

காரணி ஆகும்.


இஸ்ரோவின் தலைவராக இருப்பவர் 

ஒரு நாத்திகராக இருக்க வேண்டும் 

என்று நான் விரும்புகிறேன். இது 

என்னுடைய விருப்பம். ஆனால் 

என்னுடைய விருப்பப்படி இஸ்ரோ 

தலைவர் அமையவில்லை என்றால் 

அதற்காக நான் சோகம் கொள்ள 

வேண்டியதில்லை.


இன்னொருவர் இப்படி விரும்புகிறார்:

இஸ்ரோ தலைவராக வருபவர் 

திருநெல்வேலி சைவப் பிள்ளைமாராக 

இருக்க வேண்டும்.    


தேவமார் சாதியைச் சேர்ந்த ஒருவர் 

இஸ்ரோ தலைவராக வர வேண்டும் என்று 

இன்னொருவர் விரும்பலாம்.


இந்த விருப்பங்களுக்கெல்லாம் எவ்வித

அர்த்தமும் இல்லை.   


ஒருவருடைய விருப்பப்படி அமைந்தால் 

மகிழ்ச்சி கொள்ளலாம். அப்படி 

அமையாவிட்டால் அதற்காக ஏன்

உலகை வெறுத்து தாடி வளர்த்துக் 

கொண்டு திரிய வேண்டும்?

  



    

           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக