குவாண்டம் கணினி!
----------------------------------
சாதாரணக் கணினியில் 1 bit ஒரு நேரத்தில்
1 நிலையில்தான் (state) இருக்கும்.
ON என்பது ஒரு state.
OFF என்பது ஒரு state.
1 bit ஒரு நேரத்தில் ON அல்லது OFF என்னும்
2 நிலைகளில் ஏதாவது ஒன்றில் இருக்கும்.
குவாண்டம்
கணினியில் 1 qubit ஒரு நேரத்தில் இரண்டு நிலைகளின்
ஒன்றிப்பாக இருக்கும். ஒன்றிப்பு என்பது
SUPERPOSITION ஆகும்.
அதாவது 1 qubit ஒரு நேரத்தில் ON, OFF என்னும்
இரண்டு நிலைகளின் சேர்க்கையாக இருக்கும்.
இது QUANTUM SUPERPOSITION ஆகும்.
இதன் பொருள் என்ன?
1 qubit ஒரு நேரத்தில் ON ஆகவும் இருக்கும்;
OFF ஆகவும் இருக்கும்.
இதுதான் குவாண்டம் கணினி!
n கூறுகளைக்கொண்ட ஒரு சாதாரண கணினியின்
அனைத்து நிலைகளையும் வர்ணிக்க n பிட்டுகள் போதும்.
ஆனால் குவாண்டம் கணினியில் n நிலைகளை
வர்ணிக்க 2^n complex numbers தேவைப்படும்.
அதாவது n = 5 என்றால், 2^5 = 32 ஆகும்.
**********************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக