சனி, 16 செப்டம்பர், 2023

நவீன காலப் பேரெண்கள்!
பெரிய பெரிய எண்களை எழுதுவது எப்படி?
---------------------------------------------------------------------- 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------
தமிழில் லட்சம், கோடி என்ற இரு சொற்கள் உள்ளன.
இவற்றைக் கொண்டு பெரிய பெரிய எண்களைக் 
குறிக்க முடியவில்லை!

அதே நேரத்தில், சமகால உலகில் மாபெரும் மாபெரும் 
எண்கள் புழக்கத்துக்கு வந்து விட்டன. அவற்றை எப்படிக் 
குறிப்பிடுவது?

இதற்கு தீர்வை வழங்கியது அறிவியல். பேரெண்களைக் 
குறிக்க  புதிய எண் குறிப்பு முறை கொண்டு வரப்பட்டது.
அவற்றுக்கு ஏற்ப புதிய எண்ணுப் பெயர்களும் 
கொண்டு வரப்பட்டன.

புதிய எண் குறிப்பு முறை வருமாறு:
------------------------------------------------------
1000 = ஆயிரம் 
1000 x 1000 = 1 000 000 = மில்லியன்.
1000 x 1000 x 1000 = பில்லியன் 
1000 பில்லியன் = 1 டிரில்லியன்  

1000 டிரில்லியன் = 1 குவாட்ரில்லியன் 
1000 குவாட்ரில்லியன் = 1 குவின்டில்லியன் 

இப்படி ஆயிரம் ஆயிரமாக எண்களின் மதிப்பு 
கூடிக் கொண்டே செல்லும்.     
 

இப்போது ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்!
--------------------------------------------------------------------
பூமியின் நிறை (mass of earth) = 6 x 10^24 kg 
இதை எழுத்தால் எழுத வேண்டும்.

பூமியின் நிறையானது scientific notationல் உள்ளது.
இதை நம்பராக மாற்றுவோம்.
 6 x 10^24 = 6,000,000,000,000,000,000,000,000.
இது ஒரு 25 இலக்க நம்பர் என்பதை உணர்வோம்.

இனி இதை எழுத்தால் எழுத வேண்டும். லட்சம் கோடி 
என்பதெல்லாம் இங்கு பயன்படாது. எனவே மில்லியன், 
பில்லியன், டிரில்லியன் etc etc முறையில் எழுத்தால் 
எழுத வேண்டும். எழுதுங்கள்.

மில்லியன், பில்லியன், குவாட்ரில்லியன், குவின்டில்லியன்,
செக்ஸ்டில்லியன், செப்டில்லியன், ஆக்டில்லியன் 
என்று எண்ணுப் பெயர்கள் செல்கின்றன.

மில்லியன் என்பது 10ன் 6 மடி (10 to the power of 6)
பில்லியன் .... 9 மடி.
டிரில்லியன் .... 12 மடி.

குவாட்ரில்லியன் .... 15 மடி 
குவின்டில்லியன் .... 18 மடி.
செக்ஸ்டில்லியன் ...21  மடி 
செப்டில்லியன் ....24 மடி 
ஆக்டில்லியன் ... 27 மடி.
நானில்லியன் ... 30 மடி.

சரி, மேலே உள்ள கணக்கை  இப்போது செய்யலாமா?
6 x 10^24 = 6,000,000,000,000,000,000,000,000.
= 6 செப்டில்லியன்.
அவ்வளவுதான்! இதுதான் விடை!
6 செப்டில்லியன் என்பதுதான் விடை!
*********************************************

பின்குறிப்பு:
இதை அறிவியல் வழியிலான எண் குறிப்பு 
முறைப்படி அமைந்தது.
--------------------------------------------------------
பூமியின் நிறை (mass) = 6,000,000,000,000,000,000,000,000 கிலோகிராம்.
இதை எழுத்தால் எழுதுங்கள்!


இது 25 இலக்க எண்.

 
 
 
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக