உனக்காக நான்!
-------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
------------------------------------------
உன்னைத் தழுவத் துடிக்கும் என் நேசம்
கணந்தோறும் இதழ் விரிக்க
என் மனவெளி எங்கும்
உன் கொலுசுகளின் நாதம்.
யுக யுகங்களின்
கனிந்த காதலுடன்
உன்னுடன்
உன் சுவாசத்தை விடவும்
நெருக்கமாக இருக்க விழைகிறேன்.
நீ விரும்புவது அனைத்தையும்
உன்னிடம் அடைக்கலம் ஆக்க
என்னை அர்ப்பணிப்பது தவிர
வேறெந்த இலக்கும்
உடையேன் அல்லேன்.
உன் நெஞ்சில்
ஈரக்கசிவுகளை நிகழ்த்தும்
என் நேசத்தை மறுதலிக்க
உன் மனசு இடம் தராது
என்ற நம்பிக்கையில்
வாழ்வுடன் நான் பந்தம் கொள்கிறேன்.
பிரியமானவளே
உன்னால் தர முடியாத எதையும்
நான் கேட்கவில்லை
என்பதை அறிவாயா!
************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக