முலாயம் சிங் யாதவ்வும் திராவிடத் தற்குறிகளும்!
பாரத் என்று பெயர் மாற்றக்கோரி தீர்மானம்!
போலி நக்சல்பாரிகள் இதைப் படிக்க வேண்டாம்!
-----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------
முலாயம் சிங் யாதவ் உபி முதல்வராக மூன்று முறை
இருந்தவர். நான்காவது முறையும் அவருடைய கட்சி
வென்றபோது, தன்னுடைய மகன் அகிலேஷ் யாதவ்வை
முதல்வர் ஆக்கினார் முலாயம். இவர் போன வருஷம்
காலமாகி விட்டார்.
2003-2007 காலக்கட்டத்தில் முலாயம்சிங் முதல்வராக
இருந்தபோது அவர் உபி சட்டப் பேரவையில் ஒரு
தீர்மானம் கொண்டு வந்து வரலாற்றில் இடம்
பெற்றார். அது என்ன தீர்மானம்?
நமது நாட்டின் பெயரை இந்தியா என்று குறிப்பிடாமல்
பாரத் என்று குறிப்பிட வேண்டும். இதற்காக அரசமைப்புச்
சட்டத்தின் ஷரத்து-1ஐ மாற்ற வேண்டும் என்ற ஒரு
தீர்மானத்தை உபி சட்டப் பேரவையில் கொண்டு வந்து
அதை நிறைவேற்றினார் முலாயம் சிங்.
இது நடந்தது 2004ல்; 2004ன் பின் பாதியில். அப்போது
மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து
கொண்டிருந்தது. மன்மோகன்சிங் பிரதமர்.
உபி சட்டப் பேரவையில் நிறைவேற்றிய
இத்தீர்மானத்தை பிரதமரின் பார்வைக்கு
அனுப்பினார் முலாயம்சிங்.
அண்மையில் டில்லியில் நடைபெற்ற G20 மாநாட்டில்தான்
(செப்டம்பர் 2023) பாஜக கட்சியானது பாரத் என்ற
பெயரைப் புழங்க ஆரம்பித்தது. அதுவும் G20 என்ற
அந்த ஒரு நிகழ்வில் மட்டும். ஆனால் இதற்கு
19 ஆண்டுகள் முன்னரே சமாஜ்வாதி கட்சியானது
பாரத் என்ற பெயர் வேண்டுமென சட்டப் பேரவையில்
தீர்மானமே இயற்றி உள்ளது.
சமாஜ்வாதி கட்சியானது இந்துத்துவக் கட்சி அல்ல.
மாறாக இந்துத்துவ எதிர்ப்புக் கட்சி ஆகும். அதன்
தலைவர் முலாயம் சிங் முஸ்லிம்களின் கெழுதகை
நண்பர். அவருடைய பட்டப் பெயரே "முல்லா முலாயம்"
என்பதுதான். (முல்லா என்ற சொல்லுக்கு இஸ்லாமிய
மார்க்க அறிஞர் என்று பொருள்).
முலாயம் சிங் கொண்டு வந்த பாரத் தீர்மானத்தை உபி
சட்டப் பேரவையில் யாரும் எதிர்க்கவில்லை.
இந்தியாவிலேயே மிகவும் பெரிய சட்ட மன்றம்
உபியில் உள்ள சட்டமன்றம்தான். அங்குள்ள சட்டப்
பேரவையில் 403 உறுப்பினர்கள் மேலவையும் அங்குண்டு.
ஆளும் கட்சியான சமாஜ்வாதியும் எதிர்க்கட்சியான
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் பாரத்
என்ற பெயரை ஆதரித்தன. காங்கிரசும் பாஜகவும்
பாரத் என்ற பெயரை ஆதரித்தன. இவ்வாறு 2004
ஆகஸ்டு 3ல் உபி சட்டப்பேரவையில் இத்தீர்மானம்
ஏகமனதாக நிறைவேற்றப் பட்டது (unanimously passed).
வாசகர்கள் இங்கு கவனிக்க வேண்டும். பாரத் என்ற
பெயருக்கு ஆதரவான தீர்மானத்தை பாஜகவோ
வேறெந்த இந்துத்துவக் கட்சியோ கொண்டு
வரவில்லை. இந்துத்துவ எதிர்ப்புக் கட்சி கொண்டு
வந்தது. ஏகமனதாக அதை எல்லாக் கட்சிகளும்
ஆதரித்தன. இதெல்லாம் எதைக் காட்டுகிறது?
வட இந்தியாவில் குறிப்பாக இந்தி வளைய
மாநிலங்களில் (Hindi belt) பாரத் என்ற பெயருக்கு
மக்களிடம் வரவேற்பு இருக்கிறது என்ற
உண்மையை முலாயம்சிங்கின் தீர்மானமும்
அதற்குக் கிடைத்த ஆதரவும் காட்டுகின்றன.
சுருங்கக் கூறின், பாரத் என்ற பெயர்மாற்றம்
இந்துத்துவ அஜெண்டா அல்ல; மாறாக அது
இந்திய மக்களின் அஜெண்டா என்ற உண்மையை
முலாயம் சிங்கின் தீர்மானம் தெளிவுறுத்துகிறது.
மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றி
வருவதால்தான் பாஜக இரண்டாம் முறையாக
2019ல் வெற்றி பெற்றது. எதிர்வரும் 2024 தேர்தலிலும்
பாஜக வெற்றியை எதிர்பார்ப்பதில் தர்க்கப்பிழை
எதுவும் இல்லை.
ஆனால் தமிழ்நாட்டைத் தாண்டி வேறு எங்கும்
போய இராத, குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டு
இருக்கும் திராவிடக் கசடுகளும் போலி நக்சல்பாரித்
தற்குறிகளும் கிணற்றுத் தவளை ஆசாமிகளாகவே
இருந்து வருகிறார்கள். பாரத் என்பது இந்துத்துவ
அஜெண்டா என்று தங்களின் முட்டாள்தனத்தை
வெளிப்படுத்தும் இவர்களின் மூஞ்சிகளில் மலத்தை
வீசி இருக்கிறார் முலாயம்சிங்.
ஆனாலும் திராவிடக் கசடுகளுக்கு (Dravidian scum)
இது உறைக்காது. அவர்கள் முட்டாள்களாக இருப்பதில்
சிக்கல் இல்லை. ஆனால் தாங்கள் எப்பேர்ப்பட்ட
முட்டாள்கள் என்பது தெரியாத அளவுக்கு அவர்கள்
முட்டாள்களாக இருப்பதுதான் சிக்கல்.
திராவிடக் கசடுகளை விட கூடுதல் தற்குறிகளாக
இருப்பவர்கள் போலி நக்சல்பாரிகள். திமுகவின்
பாசிசப்போக்கை ஆதரிப்பதன் மூலம் இந்தப் போலி
நக்சல்பாரிகள் தங்களின் முதுகுத் தொலியைக்
காப்பாற்றிக் கொள்கிறார்கள். திமுக அரசை
எதிர்த்தால் திமுக அரசு சும்மா விடாது என்பதை
நன்கு தெரிந்து வைத்துக்கொண்டுள்ள இந்தப்
போலி நக்சல்பாரிகள் திமுகவின் எடுபிடிகளாகத்
திரிகிறார்கள். அந்த வகையில் இவர்கள்
போலிக் கம்யூனிஸ்டுகளான CPI,CPMஐ விட
போலிகள்!
****************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக