செவ்வாய், 19 செப்டம்பர், 2023

மகான்களிடம் ஆசி பெற்றால் நோய் குணமாகுமா? 
நாத்திகர்களை இறை நம்பிக்கை காப்பாற்றுமா?
டாக்டர் ஹெக்டேவுக்கு எதிர்வினை!
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------------------------
1) டாக்டர் ஹெக்டே தமது கட்டுரையில் பல்வேறு 
விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். அவற்றுள்  
மருத்துவ நிபுணர்களால் மட்டுமே விடையளிக்கக் 
கூடியவை சிலவும் உண்டு. அவற்றைத் தவிர்த்து 
விட்டு, ஏனைய விஷயங்களுக்கு மட்டும் 
இக்கட்டுரை எதிர்வினை ஆற்றுகிறது.

2) மருத்துவத்தில், நோயைக் குணப்படுத்துவதில் 
உளவியல் (psychology) குறிப்பிடத்தக்க பங்கு 
வகிக்கிறது. எனவே மருத்துவம் பற்றிப் பேசுவோர் 
உளவியல் பற்றிய அடிப்படை அறிவைப் பெற்றிருக்க 
வேண்டும் என்பது முன்நிபந்தனை ஆகிறது.

3) உலகின் இன்றைய மக்கள் தொகை 800 கோடி.
இந்த 800 கோடிப்பேருக்கும் மருத்துவம் தேவை.
இந்த 800 கோடிப்பேருக்குமான மருத்துவம் என்பது 
இடம் பொருள் ஏவல் சந்தர்ப்பம் சூழ்நிலை 
ஆகியவற்றைப் பொறுத்தும் நபர்களைப்  
பொறுத்தும் சிறிய அளவிலும் பேரளவிலும் 
வேறுபடும். நோயைக் குணப்படுத்துதல் என்பது 
எப்போதுமே ஒரு Unique Solution உடையதாக இருக்கும் 
என்று கருத இயலாது.

4) நோயைக் குணமாக்குவதில், பொதுவாக 
மருந்தும் உளவியலும் ஒன்றுசேர்ந்தே 
செயல்படுகின்றன. நோயைப் பொறுத்தும் 
நோயாளியைப் ;பொறுத்தும் மருத்துவரைப் 
பொறுத்தும் மருந்தின் பங்கும் உளவியலின் 
பங்கும் வேறுபடுவது இயல்பே. 

5) இவ்விரண்டில் நோயைக் குணப்படுத்துவதில் 
மருந்தின் பங்கு நன்கு வரையறுக்கப்பட்டது; 
மற்றும் துல்லியமானது (accurate and well defined).
ஆனால் உளவியலின் பங்கு துல்லியமாக 
வரையறுக்கப் படாத ஒன்று. அதன் வீச்சு 
(range) zero to infinity என்ற அளவில் சுருங்கியும் 
விரிந்தும் இருக்கும்.   

6) புரிந்து கொள்ள வசதியாக மேற்கூறிய 
இரண்டையும் quantify செய்வோம். மருந்து 
100 சதவீதம்; உளவியல் 0 சதவீதம்  என்று 
தொடங்கி வெவ்வேறு அளவுகளில் இவ்விரண்டும் 
அமையும். அதிகபட்சமாக உளவியலின் பங்கு  
25 சதவீதத்திற்கு உட்பட்டதாக அமையும் என்று 
வைத்துக் கொள்ளலாம். இந்த சதவீத அளவு 
நபருக்கு நபர் மாறக்கூடும்; நோயைப் பொறுத்தும்      
மாறும்.

7) மருத்துவத்தில் Placebo effect என்ற ஒன்று உண்டு.
இயற்பியல் படித்தவர்கள் Compton effect, Raman effect
பற்றிப் படித்திருக்கக் கூடும். இவ்விரண்டும் 
இயற்பியல் விளைவுகள்; எனவே அதிதுல்லியமானவை.
ஆனால் Placebo effect என்பது சமூகவியல் விளைவு.
துல்லியமாகக் கூறின் சமூக-உளவியல் விளைவு 
(Socio Psychological effect). இவ்விளைவு zero to infinity
என்ற ரேஞ்சில் இருக்கும். Placebo effectக்கு நேர் 
எதிரான Nocebo effect என்பதும் உண்டு. இவை 
பற்றித் தெரிந்தோர் மேற்கொண்டு படிக்கலாம்; 
ஏனையோர் வெளியேறலாம்.

8) டாக்டர் ஹெக்டேவின் கூற்றுகளுக்கு 
எமது point to point rebuttal! 
---------------------------------------------------------
அ) டாக்டர் ஹெக்டே கூறும் தரவுகளை, அவற்றின் 
face value அடிப்படையில் உண்மை என்று ஏற்றுக் 
கொண்டே எமது மறுமொழியை முன்வைக்கிறோம்.
நோய்வாய்ப்பட்டு, படுக்கையிலேயே முடங்கிப்போன 
ஒரு நாத்திகர் ஒரு மகானைச் சந்தித்ததுமே குணம் 
அடைந்தார் என்கிறார் ஹெக்டே. அவர் கூறியது 
போன்றே அந்த நாத்திகரின் நோய் குணமாகி 
இருக்கலாம். இப்படி நிகழ்வதற்கு ஒரு non-zero 
probability இருக்கலாம் என்று நான் ஏற்கிறேன். 
(Non-zero probability does not imply any non-zero positive integer. 
Non-zero means 0.00000000000000000000000000000000000001.)          

ஆ) எனினும் இது வெறும் placebo effect. உளவியல் 
விளைவு, அவ்வளவுதான்! This cannot be generalised.

இ) புள்ளியியலில் ஒரே ஒருவர் குணம் அடைந்தார் 
என்ற தரவு எதற்கும் பயன்படாது. ஓராயிரம் பேர் 
அல்லது ஒரு லட்சம் பேர் மகான்களைத் 
தரிசித்தமையால் குணம் அடைந்தனர் என்றால்தான் 
அதை பொதுமைப் படுத்த இயலும். புள்ளியியலில் 
ஒரு தரவின் நம்பகத்தன்மை (reliability) அதன் 
sigma levelஜப் பொறுத்தது. எனவே நாத்திகர் 
குணமடைந்தார் என்னும் தரவை வைத்துக்கொண்டு 
ஒரு முடிவை அடைய ஹெக்டே முற்படுவது 
தர்க்கப்பொருத்தம் அற்றது (illogical). எனவே அவர் 
வந்தடைந்த அல்லது கூற முற்படும் 
பொதுமைப்படுத்தல் நிராகரிக்கப் படுகிறது.

அமெரிக்கப் பகுத்தறிவாளர் சங்கத் தலைவர் 
திரு ராக் ஹட்ஸன் விஷயத்தில் ஹெக்டே 
கூறியதற்கு மேலே சொன்ன பதில் பொருந்தும்.

டாக்டர் ஹெக்டே கூறும் Quantum healing என்பது 
அபத்தம் மட்டுமல்ல; அடிமுட்டாள்தனமும் ஆகும்.
2019ல் சென்னை ஐஐடியில் அவர் உரை நிகழ்த்தியபோது 
ஐஐடி மாணவர்கள் அவரின் கருத்துக்களுக்கு கடும் 
எதிர்ப்பைத் தெரிவித்தனர். Quantum healing என்பது 
ஒரு போலி அறிவியல் (pseudo science) என்று 
அம்மாணவர்கள் நிரூபித்தனர்.

முடிவுரை!
---------------
முற்போக்கு-இடதுசாரி-மார்க்சிய முகாமில் இருந்து
நியூட்டன் அறிவியல் மன்றத்தைத் தவிர வேறு யாரும் 
டாக்டர் ஹெக்டே பரப்பி வரும் கருத்துமுதல்வாதப் 
பிற்போக்கு கருத்துக்களை, போலி அறிவியலை 
எதிர்க்கவில்லை.

தமிழ்நாட்டின் இடதுசாரிகள் என்போர் 
மார்க்சிஸ்டுகள் என்போர் 
நக்சல்பாரிகள் என்போர் 
இப்படி யாரும் எவரும் 
தீவிரமாகப் பரவும் டாக்டர் ஹெக்டேவின் 
போலி அறிவியலை        
எதிர்க்கவில்லை. 

டாக்டர் ஹெக்டேவை எதிர்க்கும் என்னையும் 
ஆதரிக்கவில்லை. இவர்கள் யாருக்கும் 
பயனற்றவர்கள். தமிழக இடதுசாரி முகாமில் 
இருக்கும், தங்களை மார்க்சிஸ்டுகள் என்று 
அழைத்துக்கொள்ளும் இவர்கள் தாங்களாக 
முன்வந்து போலி அறிவியலை எதிர்க்க மாட்டார்கள்.
எதிர்க்கும் என்னையும் ஆதரிக்க மாட்டார்கள்.
இவர்கள் உயிர்வாழத் தகுதியற்ற கயவர்கள் 
என்கிறார் வள்ளுவர்.

ஏவவும் செய்கிலான் தான்தேரான் அவ்வுயிர் 
போஒம் அளவுமோர் நோய்.
******************************************** 

டாக்டர் ஹெக்டே (Dr Prof B M Hegde) ஒரு மருத்துவர்;
இதய நோய் நிபுணர். மணிப்பால் பல்கலையின்
முன்னாள் துணை வேந்தர்! பத்ம விபூஷண்
விருது பெற்றவர்.
இவர் சொல்வதைக் கேளுங்கள்!
தான் அமர்ந்திருக்கும் நாற்காலியிலேயே
முடங்கிப்போன ஒரு நோயாளி, ஒரு பெரிய மகானிடம்
சென்று ஆசிர்வாதம் பெறுகிறார். உடனே வலி நீங்கி
குணம் அடைகிறார் என்று ஒரு செய்தியை ஆங்கில
இந்து ஏட்டில் ஒரு கட்டுரையில் கூறுகிறார்
ஹெக்டே. (The Hindu)
மேற்கூறிய நோயாளி ஒரு தீவிர நாத்திகர் என்றும், அவரை
வற்புறுத்தி அவரின் மனைவிதான் அந்த மகானிடம் ஆசி
பெற அழைத்துச் சென்றார் எனவும் குறிப்பிடுகிறார்
கட்டுரையின் பிறிதோர் இடத்தில், அமெரிக்கப் பகுத்தறிவாளர்
சங்கத்தின் தலைவரான திரு ராக் ஹட்சன் (Rock Hudsoan)
எய்ட்ஸ் நோயின் கொடுமையால் துன்புற்றபோது,
பிரான்சு நாட்டில் உள்ள லூர்து மாதா ஆலயத்தின் சுனைநீரை
அருந்தி உயிர் பிழைத்தார் என்றும் குறிப்பிடுகிறார்.
     
    
 
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக