இழிந்த பேச்சைப் பேசிய ஆர் பி வி எஸ் மணியனின்
முகத்தில் காரி உமிழ்கிறேன்!
--------------------------------------------------------------------------
ஆன்மிகப் பேச்சாளரும் விஸ்வ இந்து பரிஷத்தின்
முன்னாள் நிர்வாகியுமான திரு ஆர் பி வி எஸ் மணியன்
(வயது 76) கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளியன்று
(14.09.2023) அதிகாலை கைது செய்யப்பட்ட இவருக்கு
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் 14 நாள்
நீதிமன்றத் காவலை விதித்ததை அடுத்து இவர்
புழல் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.
சென்னை தி நகரில் செப் 11, 2023 அன்று ஒரு தனியார்
அமைப்பு நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டு
பேசியபோது, டாக்டர் அம்பேத்கார் மற்றும்
பட்டியலின மக்களை அவதூறாகப் பேசியுள்ளார்
ஆர் பி வி எஸ் மணியன். இதுவே அவர் மீதான
குற்றச்சாட்டு.. SC/ST வன்கொடுமைத் தடுப்புச்
சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளில் இவர்
மீது வழக்குத் தொடரப் பட்டுள்ளது.
செய்தி கேள்விப்பட்டதுமே, கொளத்தூர் மணி
தலைமையிலான திராவிடர் கழகம்தான்
ஆர் பி வி எஸ் மணியன் பற்றி போலீசுக்குத் தகவல்
கொடுத்திருக்கும் என்று நினைத்தேன். பல்வேறு
நிகழ்வுகளில் கொளத்தூர் மணியின் கட்சிதான்
போலீசின் வேலையை இழுத்துப் போட்டுக்
கொண்டு செய்கிறது என்ற உண்மை நாம் அறிந்ததே.
ஆனால் இம்முறை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
பெயரைத் தட்டிக் கொண்டு சென்றது. போலீசுக்குத்
தகவல் சொன்னது விசிக கட்சியே. ஆர் பி வி எஸ்
மணியனைக் கைது செய்து சிறையில் அடைக்கக்
கோரி போலீசிடம் முறையிட்டவர் திரு இரா செல்வம்
என்பவர். இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்
மத்திய சென்னை மாவட்ட முன்னாள் தலைவர் என்று
பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆர் பி வி எஸ் மணியனின் பேச்சை நான் கேட்டேன். அது
அ) கண்டனத்துக்குரிய பேச்சு.
ஆ) தேவையற்ற பேச்சு.
இ) அருவருக்கத் தக்க பேச்சு.
ஈ) அத்தோடு அடிமுட்டாள்தனமான பேச்சும் ஆகும்.
திரு ஆர் பி வி எஸ் மணியனின் IQ 94க்கும் குறைவானது
என்பதையே அவரின் பேச்சு எடுத்துக் காட்டுகிறது.
94 என்பது sub human IQ ஆகும்.
எவ்விதத்திலும் சமூகத்திற்குத் தேவையற்றதாகவும்,
சமூகத்தை நூறு ஆண்டுகள் பின்னுக்கு இழுப்பதாகவும்
ஆர் பி வி எஸ் மணியனின் பேச்சு இருக்கிறது.
அவரின் பேச்சை முதல் ஆளாக நான் கண்டிக்கிறேன்.
வேறு யாரினும் கூடுதலாக நான் கண்டிக்கிறேன்.
ஆனால் ஒருபோதும் அவரை நான் போலீசில்
காட்டிக் கொடுக்க மாட்டேன். அப்படிக் காட்டிக்
கொடுப்பது மானங்கெட்ட செய்கை ஆகும்.
ஒருவர் சொன்ன ஒரு கருத்துக்காக அவரைப் போலீசில்
காட்டிக் கொடுப்பது, அவர் மீது போலீசில்புகார் கொடுத்து
அரசு அதிகாரத்தின் மூலமாக அவரைத் தண்டிக்க
முயல்வது பாசிசம் ஆகும். பாசிசம் என்பது இதுதான். இது
கோழைகளின் ஆயுதம் ஆகும்.
ஒரு பெண்ணைக் கற்பழிப்பது, பஸ் ஸ்டாண்டில் குண்டு
வைப்பது, பெண்ணின் கழுத்து நகையைப்
பறிப்பது போன்ற கிரிமினல் குற்றங்களைப் புரியும்
கயவர்களை போலீசில் ஒப்படைப்பது சரிதான்.
இது ஒரு பொறுப்புள்ள குடிமகனின் கடமையும்தான்.
ஆனால் நமக்குப் பிடிக்காத ஒரு கருத்தைச்
சொன்னதற்காக, அது முட்டாள்தனமான கருத்தாக
இருப்பினும், அவரை போலீசின் அதிகாரத்தைக்
கொண்டு தண்டிக்க முயல்வது கடைந்தெடுத்த
பிற்போக்குச் சிந்தனை ஆகும். கோழைகளும்
பாசிச அடிவருடிகளுமே போலீசை நம்பி
வாழ்வார்கள். அது மனித நாகரிகமே வெட்கப்படத்
தக்க மானங்கெட்ட பிழைப்பாகும்.
திரு மணியனின் பேச்சில அனுவளவுகூட எனக்கு
உடன்பாடு இல்லை. திரு மணியனை நேருக்கு
நேர் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டி இருந்தால்
அவரின் முகத்தில் நான் காரி உமிழ்ந்திருப்பேன்.
அதுதான் அவருக்கு உரிய தண்டனை!
ஆனால் எந்த நிலையிலும் அவரைப் பற்றிப்
போலீசில் புகார் செய்து நடவடிக்கை எடுக்கச்
சொல்ல மாட்டேன்.அது போலீஸிடம் சரணகதி
அடைவதாகும்.
இடதுசாரி முகாம் என்கிறார்கள்! இருப்பவன் எல்லாம்
போலீஸ் இன்பார்மராக இருந்தால் என்ன செய்வது?
போலி இடதுசாரிகளும், போலி நக்சல்பாரிகளும்
ஆட்சியில் இருக்கும் திமுக அரசை ஆதரித்துக்கொண்டு
தங்களின் முதுகுத் தொலியைக் காப்பாற்றிக்
கொள்கிறார்கள். பாதுகாப்பாகப் புரட்சி பேசுவது
ஒரு கலை. அதில் கரை கண்டவர்கள் தமிழ்நாட்டின்
போலி நக்சல்பாரிகள்!
*******************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக