சனாதனமும் சனாதன எதிர்ப்பும்!
------------------------------------------------------
1) சனாதனம் என்ற சொல்லுக்கு தமிழ்நாட்டில் ஒரு
பொருள். தமிழ்நாடு தவிர்த்த பிற மாநிலங்களில்
ஒரு பொருள்.
2) சனாதனம் என்றால் பார்ப்பனீயம் என்று
தமிழ்நாட்டில் பொருள். சாதிக்கொரு நீதியைச்
சொல்லும் மனு தர்மம் என்று பொருள்.
3) வட இந்தியாவிலும், தமிழ்நாடு தவிர்த்த பிற
தென்னிந்திய மாநிலங்களிலும் சனாதனம்
என்றால் இந்து மதம் என்று பொருள். இந்து
மதத்தின் தொன்மையான பெயர் சனாதன
தர்மம் ஆகும்.
4) சனாதன ஒழிப்பு மாநாடு என்றால் மனுதர்ம
ஒழிப்பு மாநாடு என்று தமிழ்நாட்டில் பொருள்.
5) தமிழ்நாடு தவிர்த்த பிற இந்திய மாநிலங்கள்
அனைத்திலும், சனாதன ஒழிப்பு மாநாடு என்றால்
இந்துமத ஒழிப்பு மாநாடு என்று பொருள்.
6) இந்துமத ஒழிப்பு என்பதையும் அதற்கு ஒரு
மாநாடு தமிழ்நாட்டில் நடைபெற்றது என்பதையும்
அதில் திமுக அமைச்சரும், முதல்வர் ஸ்டாலினின்
மகனும் ஆகிய உதயநிதி கலந்து கொண்டு
இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று
பேசியதையும் தமிழகம் தவிர்த்த பிற இந்திய
மாநிலங்களில் உள்ள மக்களால் ஏற்றுக் கொள்ள
இயலவில்லை. உதயநிதியின் பேச்சு மக்கள்
அனைவரையும் காயப் படுத்தி உள்ளது.
7) கிறிஸ்துவ மத ஒழிப்பு மாநாடு என்றோ அல்லது
இஸ்லாம் மத ஒழிப்பு மாநாடு என்றோ ஒரு
மாநாட்டை உதயநிதியாலோ அல்லது CPM
எனப்படும் போலி மார்க்சிஸ்ட் கட்சியாலோ
கற்பனையில் கூட நடத்த இயலாதபோது
இந்துமத ஒழிப்பு மாநாடு ஏன் என்று இந்திய
மக்கள் கேட்கிறார்கள்.
8) உதயநிதியின் பேச்சு இந்துமதத்தின் மீதான
வன்மம் நிறைந்த தாக்குதல் என்று தமிழகம்
தவிர்த்த பிற மாநில மக்கள் அனைவரும்
கருதுவதால் அவரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு
கிளம்பி உள்ளது.
9) தீவிர பாஜக எதிர்ப்பாளரான மமதா பானர்ஜி
உதயநிதியின் பேச்சை வன்மையாகக் கண்டித்து
உள்ளார்.
10) காங்கிரசின் கமல்நாத், காஷ்மீரின் கரன்சிங்
உள்ளிட்டோரும் உதயநிதியின் பேச்சை ஏற்கவில்லை.
11) உதயநிதியின் பேச்சு தமிழ்நாட்டைப் பொறுத்த
மட்டில் திமுகவுக்கு எந்த விதமான பாதிப்பையும்
ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டிற்கு
அப்பால் எதிர்க் கட்சிகளின் கூட்டணிக்கு வேரில்
வெந்நீர் ஊற்றி விட்டார் உதயநிதி.
12) தனது பொலிட் பீரோவில் ஒரே ஒரு தலித்துக்குக்கூட
கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து இடம்
கொடுக்காத மார்க்சிஸ்ட் கட்சிக்கு சனாதன
ஒழிப்பு பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை.
13) தலித் எதிர்ப்புக் கட்சியான திமுக, வேங்கைவயல்
குற்றவாளிகளைப் பாதுகாத்து நிற்கிறது. உதயநிதிக்கு
சனாதன ஒழிப்பு பற்றிப்பேச என்ன அருகதை
இருக்கிறது?
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக