ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

குட்டி முதலாளித்துவச் சொல்லாக்கம்!
--------------------------------------------------------- 
அறிஞர் திரு ராம கி ஐயா அவர்களின் 
தமிழ்ச்சொற்கள் உருவாக்கம் பற்றி
நான் முன்னரே அறிவேன். 

புதிய கலைச்சொல்லாக்கத்தில் மார்க்சியக் 
கண்ணோட்டம், மார்க்சிய வழிகாட்டல்  
ஆகியவை இன்றியமையாதவை. அறிஞர் 
இராம கி ஐயா அவர்கள் குட்டி முதலாளித்துவ 
உளப்பாங்கின் உச்சத்தில் இருந்து கொண்டு 
புதிய சொற்களைப் படைத்தவர்.

மொழியின் பண்புகளில் பிரதானமானது 
அதன் தொடர்புறுத்தும் வல்லமையே.
நாம் உருவாக்கும் சொற்கள், மொழிநடை 
ஆகிய அனைத்தும் தொடர்புறுத்த 
வல்லவையாக இருக்க வேண்டும் என்பது 
மார்க்சியம் விதிக்கும் நிபந்தனை ஆகும். 

இராம கி ஐயா அவர்களின் சொல்லாக்கம் 
மொழியின் தொடர்புறுத்தும் பண்புக்கு 
(communicable)  நேர் எதிர்த்திசையில்
இருக்கிறது.

உருவாக்கப்பட்ட சொற்கள் மக்களால் புரிந்து 
கொள்ளத் தக்கவையாக இருக்க வேண்டும் 
என்று மார்க்சியம் வலியுறுத்துகிறது.
புறவய மதிப்பீட்டில் இருந்து (objective assessment)
சொற்களை உருவாக்க வேண்டும் என்று 
மார்க்சியம் கூறுகிறது. 

ஆனால் குட்டி முதலாளித்துவம்  தனது 
அகநிலைக் கண்ணோட்டத்தில் இருந்து 
சொல்லாக்கத்தை அணுகுகிறது. இது 
முற்றிலும் மார்க்சியத்துக்கு எதிரான 
subjectivism ஆகும். இராம கி ஐயா அவர்கள்  
உருவாக்கிய சொற்கள் 100 விழுக்காடு 
subjectivism  ஆகும். எனவே அச்சொற்கள் 
ஒருபோதும் பரந்துபட்ட மக்களுக்கோ 
மொழிக்கோ பயன்படாதவை.

மில்லியன், பில்லியன், டிரில்லியன் ஆகிய 
சொற்களுக்கு இராம கி ஐயா அவர்கள் 
உருவாக்கியுள்ள தமிழ்ச் சொற்களைப் 
பாருங்கள்.

million = நுல்லியம்.
billion = இரும நுல்லியம். 
டிரில்லியன் = மும்ம நுல்லியம்.   

adjective போடாமல் ஒரு சொல்லை உருவாக்குவது 
இவரைப் போன்றவர்களால் ஒருபோதும் 
இயலாது.

Billion என்பதற்கு இரட்டம் என்பது என்னுடைய 
தமிழாக்கம்; இரும நுல்லியம் என்று நீட்டி 
முழக்குகிறார் இராம கி ஐயா. சொற்செட்டு 
யாருடைய தமிழாக்கத்தில் இருக்கிறது 
என்பதை நுண்மாண்நுழைபுலம் உடையோர்  
அறிவர். 

அது போல trillion என்பதற்கு மும்ம நுல்லியம்.   
என்று adjectiveஐப் பெய்து சொற்செட்டை 
குட்டி முதலாளித்துவ பலிபீடத்தில் காவு 
கொடுத்து விடுகிறார் இராம கி ஐயா அவர்கள்.

தற்கால மாணவர்கள், பட்டதாரிகள் என்று 
இத் தலைமுறையினரின் தமிழறிவு எந்த 
அளவில் உள்ளது என்ற objective assessment 
ஏதுமின்றி, தமது அகநிலைத் தினவுகளுக்கு 
தீனி போடுவதாக அமையும் சொல்லாக்கம் 
பரந்துபட்ட மக்களுக்கு மட்டுமல்ல மேட்டுக்குடி 
எலைட்டுகளுக்கும் கூட பயன்படாதே!      
  
    



             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக