வியாழன், 21 செப்டம்பர், 2023

 அறிவை வளர்க்கும் உணவு என்னும் ராசாயனம்!
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------------
சமையலில் உப்பு போடுகிறோம். இந்த உப்பு ஒரு ரசாயனம்.
இதன் ரசாயனப்பெயர் சோடியம் குளோரைடு (NaCl).
காப்பியில் சர்க்கரை சேர்க்கிறோம். இந்த சர்க்கரையின் 
ரசாயனப் பெயர் சுக்ரோஸ் எனப்படும் டைசாக்ரைடு.
(Sucrose = white sugar = C12H22O11)
சர்க்கரை என்பது organic substance. உப்பு என்பது inorganic.   

NaCl என்பதும் C12H22O11 என்பதும் molecular formula
ஆகும். அவை பற்றி வாசகர்கள் அறிந்து கொள்ளவேண்டும்.

ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பண்பு உண்டு. ஒவ்வொரு 
பொருளுக்கும் ஒரு செயல்பாடு (function) உண்டு. 
உணவாகவும் மருந்தாகவும் நாம் உட்கொள்ளும் 
ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு function உண்டு.

TB எனப்படும் எலும்புருக்கி நோய் முற்காலத்தில் 
உயிரைக் காவு வாங்கும் நோயாக இருந்தது. காரல் 
மார்க்சுக்கு TB இருந்தது. ஜவகர்லால் நேருவின் 
துணைவியார் கமலா நேருவுக்கு TB இருந்தது.

அப்போதெல்லாம் TBக்கு மருந்தில்லை. 1952ல்தான் 
Isonex (isoniazid) என்னும் மருந்து கண்டுபிடிக்கப் பட்டது.
அதுபோல டைபாயிடு நோய்க்கான 
சிப்ரோபிளாக்சாசின் (Cyprofloxacin) மருந்து 1980களின் 
பிற்பகுதியில்தான் அறிமுகம் ஆனது. இம்மருந்துகள் 
ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டைக்
கொண்டிருப்பவை.      

உணவோ மருந்தோ நாம் உட்கொள்ளும் ஒவ்வொரு 
பொருளுக்கும் தனித்த ஒரு பண்பு உண்டு. பிற 
பொருட்களுடன் பொதுத்தன்மையும் உண்டு.
மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, மீன், பருப்பு 
வகைகள், தானியங்கள் என்று நாம் உட்கொள்ளும் 
உணவுப்பொருள் ஒவ்வொன்றும் ஒரு பண்பை 
(property) உடையது; ஒரு functionஐ உடையது.

உணவு என்ன செய்கிறது? உடலை வளர்க்கிறது.
உயிரை வளர்க்கிறது. மூளையை வளர்க்கிறது.
அறிவை வளர்க்கிறது.

உணவு எவ்வாறு உடலை வளர்க்கிறது? அறிவியலில் 
கீழ்நிலை வகுப்புகளில் இதெல்லாம் சொல்லித்தரப் 
படுகிறது. படித்திருந்தால் நினைவு கூருங்கள்.

வளர் மாற்றம் (anabolism)
சிதைமாற்றம் (catabolism)
வளர்சிதை மாற்றம் (metabolism) ஆகியவை பற்றிப் 
படித்ததை நினைவு கூறுங்கள். அல்லது மீண்டும் 
படியுங்கள்.

உணவு உடலை வளர்க்கிறது. மூளையை வளர்க்கிறது.
மூளை என்பது சிந்தனையின் உறுப்பு. மூளை 
வளர்ச்சி அடையாமல் அறிவு வளர்ச்சி இல்லை.
 
உணவு உட்கொள்ளாமல் பட்டினி கிடந்தால் என்ன
ஆகும்? வளர்ச்சி நின்று விடும். உறுப்புக்கள் 
ஒவ்வொன்றாகச் செயலிழக்கும்; உறுப்புகளுக்கு 
கட்டளையிடும் மூளையும் செயலிழக்கும். இறுதியில் 
உயிர் போய்விடும். தமிழ் ஈழத்தில் உணவோ நீரோ 
அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த 
திலீபனை நினைத்துப் பாருங்கள்.

ஒவ்வொரு உணவுப்பொருளும் எப்படிச் செயல்படுகிறது, 
அதில் என்ன சத்து இருக்கிறது, மூளையின் 
வளர்ச்சிக்கும் அதற்கும் உள்ள தொடர்பு என்ன 
என்பதையெல்லாம் இன்று சத்துணவு நிபுணர்களும் 
உணவுப் பரிந்துரையாளர்களும் (nutritional experts and 
dietitians) துல்லியமாக வரையறுக்கின்றனர்.

மனித மூளையில் கணிசமான பகுதி ஒமீகா-3
கொழுப்பு அமிலத்தைக் கொண்டது (Omega fatty acid-3).
மூளை வளர்ச்சிக்கு ஒமீகா-3 அதிகமுள்ள சில வகை 
மீன்கள் பயன்படும் என்பது மருத்துவ உண்மை.

அது போலவே Antioxidant எனப்படும் ஆக்சிஜனேற்றத் 
தடுப்பான்கள் மூளை வளர்ச்சிக்கும் செல்கள் 
அழியாமல் காப்பதற்கும் உறுதுணையாக 
இருப்பவை. பச்சைக் காய்கறிகளில் இது அதிகம்.

உண்ணும் உணவுக்கும் மூளை வளர்ச்சிக்கும் 
நேரடியான தொடர்பு இருக்கிறது என்பது இன்றைய 
மருத்துவ உலகில் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.   

அறிவு என்பது மூளையின் செயல்பாட்டின் ஒரு 
பெறுபேறு .(A derivative of the brain function). அறிவு 
என்பது 100 சதமும் மூளையைச் சார்ந்தது. 
மூளைக்கு அப்பால் உள்ள அறிவு என்று எதுவும் 
கிடையாது. எனவே உணவுக்கும் அறிவுக்கும் 
தொடர்பு உண்டு என்பது உயிரியல் ரீதியாகவும் 
மருத்துவ ரீதியாகவும் நிரூபிக்கப்பட்ட உண்மை.
----------------------------------------------------------------------
பின்குறிப்பு:
இக்கட்டுரையைச் சிலரால் அல்லது பலரால் 
புரிந்து கொள்ள இயலாமல் போகும். அவர்கள் 
11,12 வகுப்புகளின் உயிரியல் பாடப் புத்தகங்களை 
வாங்கிப் படிக்க வேண்டும். 
***************************************************               


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக