சோதிடம்!
--------------
சோதிடந்தனை இகழ் என்கிறார் பாரதியார்.
ஒளவையாரைப் போன்றே பாரதியாரும் ஓர்
ஆத்திசூடியை எழுதி இருக்கிறார். அதில்தான்
சோதிடந்தனை இகழ் என்கிறார். சோதிடத்தை
இகழ வேண்டும் என்கிறார்.
மேலும் தமது ஆத்திசூடியில்,
"வானநூல் தேர்ச்சி கொள்" என்கிறார் பாரதியார்.
புரிகிறதா!
அஸ்ட்ரானாமியைப் படி!
அஸ்ட்ராலாஜியை காரித்துப்பு!
என்கிறார் பாரதியார்.
கர்நாடக இசைமேதை தியாகையரின் கீர்த்தனைகள்
எத்தனை பேருக்குத் தெரியும்? அவற்றின் பொருள்
தெரிய சிறிது தெலுங்கு தெரிந்திருக்க வேண்டும்.
தியாகய்யர் மிகப்பெரும் ராம பக்தர்.
அவரின் ஒரு கீர்த்தனையில் அவர் கிரகங்கள்
கிரக பலன்கள் ஆகியவற்றையெல்லாம்
எள்ளி நகையாடி இருப்பார்.
"கிரஹ பலம் ஏமி
கிரஹ பலம் ஏமி
ஸ்ரீராமானுக்ரஹ பலமே பலமு"
என்பதுதான் அந்தக் கீர்த்தனை.
ராமனுடைய அனுக்கிரஹம்தான் பலமே தவிர,
"இந்த ஜாதகருக்கு சுக்கிரன் பலமாக
இருக்கிறான், புதன் பலமாக இருக்கிறான்"
என்பதெல்லாம் அர்த்தமற்றவை என்கிறார்
தியாகையர்.
தேவாரத்தில் கோளறு பதிகம் என்று ஒன்று உண்டு.
பதிகம் என்றால் 10 பாட்டுக்கள் என்று பொருள்.
கோளறு பதிகம் என்பது சம்பந்தர் பாடியது.
"வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி"
என்று கோளறு பதிகம் தொடங்கும்.
பாண்டி நாட்டுக்குச் செல்ல முற்படுகிறார் சம்பந்தர்.
இப்போது போக வேண்டாம்; கிரஹ நிலை சரியில்லை
என்று தடுக்கிறார் நாவுக்கரசர்.
கிரஹமாவது மயிராவது நான் போவேன் என்று
கூறிய சம்பந்தர் அப்போது பாடியதுதான்
கோளறு பதிகம்.
1) பாரதியார்
2) தியாகையர்
3) சம்பந்தர்
ஆகிய கடவுள் பக்தர்கள் சோதிடம், கிரஹ பலன்
ஆகியவற்றைக் கண்டித்தும் எள்ளி நகையாடியும்
கூறிய கருத்துக்களைக் கண்டோம்.
இறுதியாக வீர சாவர்க்கர் பற்றிக் காண்போம்.
இந்துத்துவம் என்று அறியப்படும் இந்து தேசியவாதம்
(Hindu nationalism) என்ற சித்தாந்தத்தை உருவாக்கியவர்
சாவர்க்கர். அவர் அதிதீவிர நாத்திகர்.
சாவர்க்கர் ஒரு நாத்திகர் என்று அறிந்திராத மூடர்கள்
இங்கிருந்து வெளியேறவும்.
சோதிடத்தையும் கடவுளையும் இணைக்கும்
முயற்சிகளை பாரதியார், தியாகையர், சம்பந்தர்
ஆகியோர் வெட்டி எறிந்தனர் என்பதைப் பார்த்தோம்.
கடவுள் பக்தர்களான அவர்கள் சோதிடத்தின்பால்
நாட்டமற்றவர்கள் என்பதையும் அறிந்தோம்.
சோதிடம் என்பது பொய்; முட்டாள்தனம். அதைக்
கைவிடுங்கள்.
----------------------------------------------------------
பின்குறிப்புகள்:
1) சோதிடத்துக்கு ஆதரவான பின்னூட்டங்கள்
இங்கு தடை செய்யப் பட்டுள்ளன.
2) தமிழ்நாடு போலி நாத்திக முட்டாள்களின் சொர்க்கம்.
போலி நாத்திக முகாமில் சோதிடத்தை ஏற்றுக்
கொண்டவர்களே அதிகம். ஜோசியன் கூறியபடி
மஞ்சள் துண்டை அணிந்து கொண்டு பகுத்தறிவு
பேசி ஊரை ஏமாற்றும் ஆசாமிகள் எப்படி
சோதிடத்தை எதிர்ப்பார்கள்? எனவே திராவிடக்
கசடுகளுக்கு (Dravidian scum) இங்கு வேலை இல்லை.
******************************************
**************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக