வெள்ளி, 22 செப்டம்பர், 2023

 neet pg

1. மொத்தம் மருத்துவ மேற்படிப்பு இடங்கள் கிட்டத்தட்ட 70000.
2. இதற்கு விண்ணப்பம் செய்தது கிட்டத்தட்ட 2080000. (அதாவது மூன்றில் ஒருவருக்கு கட்டாயம் மருத்துவ மேற்படிப்பு நிச்சயம் கிடைக்கும்).
தேர்வு எழுதியது 200000 பேர்.
3. இதில் 0 மார்க் மற்றும் அதற்கு கீழ் வாங்கியவர்கள் வெறும் 13 பேர்.
0 to 99 வாங்கியவர்கள் 5885 பேர்
100 to 199 வாங்கியது 39000+ பேர்.
200 to 299 வாங்கியது 59000+ பேர்.
நம்ம சாதாரண பாஸ் மதிபெண்ணான 35 பெர்ஸன்ட் என்பது 800 கு 280.
இவங்க பாஷையில் சொல்லப்போனால்
கிட்டத்தட்ட 105000 பேர், அதாவது பாதிக்கு மேல் எழுதியவர்கள் பெயில் மார்க். இத்தமைக்கும் எழுதிய அனைவரும் MBBS படிப்பு முடித்தவர்கள்.
அப்டியானால் அந்த தேர்வு எவ்வளவு கடினமானது என்பது தெரிந்து கொள்ளட்டும்.
4. இந்த முதுகலை படிப்புக்ளை clinical non clinical என இருவகையாக பிரிக்கலாம்.
Clinical என்பது ஆஸ்பத்திரியில் சிகிட்சை தரும் படிப்பு சம்பந்த பட்டது.
Non clinical என்பது anatomy, biochemistry, சைக்காலஜி போன்ற படிப்புகள்.
இவற்றில் non. clinical படிப்புகளுக்கு அந்த அளவு போட்டி இல்லை. பண வசதி இருப்பவர்கள் கூட கட்.ஆப் குறைந்தது என்றால் ஒரு வருடம் கழித்து மீண்டும் தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற்று clinical துறைகளை தேர்ந்து எடுக்க முயல்வார்கள். இதில் அரசு கல்லுரிகிளில் கூட vacancy. வருகிறது..
இது மிக ஆபத்தான போக்கு. ஏன் என்றால் நாளடைவில் இந்த துறை.விற்பன்னர்களே இல்லாமல் போய்விட்டால்.
5. கடந்த மாதம் indian medical association மற்றும் federation of resident doctors association இரண்டும் மத்திய அரசையும் இந்திய மருத்துவ கழகத்தையும் 30 சத விகிதமாவது முதலில் குறிப்பிட்ட 291 மார்க்க பொது பிரிவினர், 257 பட்டியலின பிரிவு கட் ஆப் குறைக்க வலியுறுத்தினார்கள்.
இந்த குறைப்பிற்கு முன்னாள் கிட்டத்தட்ட 12 பெர்ஸன்ட் இடங்கள் காலியாக இருந்தன.
சென்ற வருடம் 3200 காலியிடங்கள் வீணாயின. இந்த வருடம் 8000 என்பது மிக அதிகம், மேலும் மருத்துவ கட்டமைப்பிற்கு இது பெரும் சவாலாக இருக்கும் என்பதால் தகுதி மதிப்பெண்களை குறைக்க முடிவு செய்யப்பட்டது.
6. இந்த குறைப்பு நடப்பு ஆண்டிற்கு மட்டுமே பொருந்தும்
7. பெரும்பாலான மருத்துவ வல்லுநர்கள் இந்த அரசின் முடிவை வரவேற்று உள்ளார்கள்.
.
நீட் தேர்வால் தற்கொலை என சொல்பவர்கள் நீட் பிஜி யால் ஏதாவது தற்கொலை நடந்தது என ஆதாரம் காட்டுவார்களா.
வெறும் 13 பேர் மட்டும் பூச்சியம் மதிப்பெண் பெற்ற்று உள்ளார்கள் என்கிற விஷயத்தை சொல்லாமல் பூச்சியம் வாங்கிய வர்கள் கூட மேற்படிப்பு படிக்கலாம் என்பதால் தரம் எங்கிற வாதம் அடிபட்டு போகுறது என்று சொல்கிறார்கள்.
ஒரு தேர்வில் பாதிக்கு மேல் 35 பெர்ஸன்ட் மார்க் கூட வாங்க முடியாது என்கிற நிலை உள்ளது என்பதையும் வசதியாக மறைத்து விடுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக