ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

கருப்பு என்பது நிறமல்ல!
கருப்புச் சட்டை அணிவது மூடநம்பிக்கையே!
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------
15 ஆண்டுகளுக்கு முன்பு! " கருப்புத்தான் எனக்குப்
பிடிச்ச கலரு" என்ற சினிமாப பாட்டு தமிழ்நாட்டில் 
எல்லா இடங்களிலும் ஒலித்துக் கொண்டிருந்தது. 

முதல் முறை இந்தப் பாடலைக் கேட்டதுமே எனக்குத் 
தூக்கி வாரிப் போட்டது. கருப்பு என்று ஒரு நிறம் 
கிடையாது என்கிறது அறிவியல். இல்லாத ஒரு 
நிறத்தை எடுத்துக் கொண்டு எனக்குப் பிடிச்ச கலரு 
என்று எப்படிப் பாட முடியும் என்று ஆச்சரியப்பட்டேன் 
நான்.

நான் நினைப்பது போல் வேறு எவரேனும் நினைக்கிறார்களா 
என்று அறிய விரும்பினேன். அப்போது என் மகள் 
அங்கிருந்தாள். அவள் physics படிக்கிறவள். எனவே 
அவளிடம் கேட்டேன். அவள் என்னை ஆமோதித்தாள்.
கருப்பு என்பது நிறமல்ல என்று தனக்குத் தெரியும் 
என்று அவள் குறிப்பிட்டாள். நான் திருப்தி அடைந்தேன்.
எனது ஸ்டேட்மென்ட் corroborate ஆகி விட்டது.

இயற்பியலைப் பொறுத்தமட்டில் நிறம் என்பது 
அலைநீளம் ஆகும் (colour means wave length). சிவப்பு 
நிறத்துக்கு ஒரு அலைநீளம்; ஊதா நிறத்துக்கு ஒரு 
அலைநீளம்.  அலைநீளம் 400 nm முதல் 450 நானோ
மீட்டர் வரை இருந்தால் அது ஊதா.அலைநீளம் 650
நானோமீட்டர் முதல் 750 நானோமீட்டர் வரை 
இருந்தால் அது சிவப்பு. இந்த நிறங்கள் அனைத்துமே 
visible lightன் ரேஞ்சுக்குள்  அடங்குபவை. Visible light
அல்லாத பிற ஒளியை நம்மால் பார்க்க இயலாது.

மேற்கூறிய நிறங்கள் அனைத்தின் அலைநீளங்களை 
நான் பரிசோதனை செய்து அறிந்தவன் (MSc Physucs 
experiments). என் அளவுக்கு பரிசோதனைகளை நீங்கள் 
செய்திருக்காவிட்டாலும், இயற்பியல் மாணவர்களே 
பட்டதாரிகள், உலகப் பிரசித்தி பெற்ற சோடியம் 
லாம்பின் அலைநீளம் கண்டு பிடிக்கும் 
பரிசோதனையை நீங்கள் கண்டிப்பாகச் 
செய்திருப்பீர்கள்தானே! நினைவு படுத்திப் பாருங்கள்.

வாசக அன்பர்களே,
கருப்பு ஒரு நிறமல்ல என்று நான் போகிற போக்கில் 
சொல்லவில்லை; காசுவலாகச் சொல்லவில்லை.
ஏராளமான பரிசோதனைகளைச் செய்து பார்த்த
பின்னரே சொல்லுகிறேன். கருப்பு நிறத்துக்கு 
அலைநீளம் கிடையாது. அலைநீளம் இல்லை 
என்பதால், கருப்பு ஒரு நிறமே கிடையாது.

அப்படியானால் கருப்பு என்பது என்ன?
கருப்பு என்பது நிறமின்மை; எனவே ஒளியின்மை.
(black = absence of light). இதுதான் இயற்பியல்; 
இதுதான் உண்மை! 
*********************************************** 
பின்குறிப்பு:
கருப்பு உடைகள் அதிகமாக வெப்பத்தை 
உட்கிரகிக்கும். தமிழ்நாடு போன்ற உஷ்ணப் 
பிரதேசங்களுக்கு கருப்பு உடைகள் 
பொருத்தமற்றவை. மேலும் உளவியல் ரீதியாக 
கருப்பு என்பது துக்கம், சோகம், தாழ்வு மனப்பான்மை 
ஆகியவற்றைக் குறிக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்து 
பச்சை நிறம்தான் செழிப்பின் அடையாளம்.

செழித்து வளர்ந்த பயிரை பச்சை நிறம் குறித்தால் 
கரிந்து தீய்ந்து போன பயிரையே கருப்பு நிறம் 
குறிக்கும். ஏனெனில் கருப்பு என்பது absence of light.   
****************************************************

  
     

  
      
   
.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக