ஞாயிறு, 8 செப்டம்பர், 2024


மகாவிஷ்ணுவால் அறிவியலுக்கு பாதிப்பா?
-----------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------------------------
கோழையும் முட்டாளுமான மகாவிஷ்ணுவின் 
பேச்சால் அறிவியலையும் பொருள்முதல்வாதத்தையும் 
எள்முனை அளவுகூட பாதிப்புக்கு உள்ளாக்க 
முடியாது.பொருள்முதல்வாதம் அவ்வளவு 
பலவீனமானது அல்ல. அறிவியலா விஸ்வரூபம் 
எடுத்து நிற்கிறது.

போலி நாத்திகமான பெரியாரியம் மகாவிஷ்ணுவைக் 
கண்டு அலறும்; அஞ்சும்.

உலகில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் அறிவியல் 
பரிசோதனைகள் நாத்திகத்தை உயர்த்திப் 
பிடிக்கின்றன. ஒரு மணி  நேரச் சொற்பொழிவில்    
மகாவிஷ்ணு போன்ற முட்டாள்களால் அறிவியலுக்கு  
பாதிப்பை ஏற்படுத்தி விட முடியாது.

நியூட்டன் அறிவியல் மன்றம் மகாவிஷ்ணுவை 
இன்ன பிற ஆசாமிகளை இடது கையால் 
சமாளிக்கும். கடவுள் இல்லை என்று நிரூபித்தவர்கள் 
நாங்கள். 

பள்ளிகளில் கிறிஸ்துவ மத மூட நம்பிக்கைகள்
தங்கு தடையின்றிப் பரவி வருகின்றன. அவற்றை 
எதிர்க்க ஆள் கிடையாது.   

சி  ஐ ஏவின் பட்ஜெட்டில் பணம் ஒதுக்கப்பட்டு 
இந்தியாவில் கிறிஸ்துவ மூடநம்பிக்கைகளைப் 
பரப்பி வருகிறார்கள். எனவே திராவிடக் கசடுகளும்  
போலி முற்போக்குகளும்  கிறிஸ்துவப் பிற்போக்கை 
எதிர்க்க மாட்டார்கள்.

இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் ஷரத்து 51A(h)
நாட்டின் குடிமக்கள் அறிவியல் மனப்பான்மையை 
வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.
இது குடிமக்களின் கடமை ஆகும்.

அரவியலைக் கற்காமல் அறிவியல் மனப்பாங்கு 
ஏற்படாது. எனவே அறிவியலைக் கற்போம்.

அறிவியல் கற்காத மூடர்கள்தான் மகாவிஷ்ணுவைக் 
கண்டு அஞ்சுகிறார்கள். குவாண்டம் தியரி , 
ஸ்டிரிங் தியரி என்று அனைத்தையும் கரைத்துக் குடித்த 
நாங்கள் ஏன் மகாவிஷ்ணுவைக் கண்டு அஞ்ச வேண்டும்? 

மகாவிஷ்ணுவுக்கு de Movir's  theorem தெரியுமா?
பைனாமியல்  தீரம் தெரியுமா?
a plus b whole squared  என்றால் என்ன என்றாவது 
தெரியுமா?

இப்படி ஒரு இழவும் தெரியாத மகாவிஷ்ணுவை 
அறிவியல் வழிப்பட்ட பொருள்முதல்வாதிகள்
ஏன் பொருட்படுத்த வேண்டும்? மகாவிஷ்ணுவால் 
அறிவியலுக்கு  அணு அளவு பங்கமும் ஏற்படுத்த 
முடியாது.

மாடு முட்டிக் கோபுரங்கள் சாய்வதில்லை! 
மாணிக்கம் கூழாங்கல் ஆவதில்லை! 
மகாவிஷ்ணுவால் அறிவியலுக்கு பங்கமில்லை!
அனுதினமும் அறிவியல் மேலே  செல்லாமல் இல்லை!
************************************************
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக