இந்தப் பதிவில் உள்ளது ஒரு செய்தி.
2004 வரை இந்தியாவில் செம்மொழி
என்பதே கிடையாது. முதன் முதலில் 2004ல்
மன்மோகன்சிங் தமிழை செம்மொழி ஆக்கி
உத்தரவு பிறப்பித்தார். பின்னர் 2005ல்
சமஸ்கிருதம் செம்மொழி ஆக்கப் பட்டது.
தொடர்ந்து 2008ல் கன்னடமும் பின்னர்
தெலுங்கு மலையாளம் ஒடிஷாவும் செம்மொழி
ஆக்கப் பட்டன. இவ்வாறு ஆறு மொழிகளை
செம்மொழி ஆக்கியவர் மன்மோகன்சிங்.
2000 ஆண்டுத் தொன்மை இருந்தால்தான்
செம்மொழி என்ற வரையறுப்பைத் திருத்தி
1000 ஆண்டுத் திண்மையே போதும் என்று
சட்டம் செய்து செம்மொழி இலக்கணத்தையே
கொச்சைப் படுத்தியவர் மன்மோகன்சிங்.
2014ல் மோடி ஆட்சிக்கு வரும்போது ஆறு
செம்மொழிகள் இருந்தன. மோடி தம் பங்கிற்கு
மராத்தி மொழியை செம்மொழி ஆக அறிவித்து
விடக்கூடும் என்று அஞ்சினேன் நான். ஆனால்
மோடி அதைச் செய்யவில்லை.
இந்தியாவில் செம்மொழிகளாக ஆறு மொழிகள்
இருக்கின்றன என்ற செய்தி நான் சொல்லித்தான்
பலருக்கும் தெரியும். நான் சொல்லாமல்
இருந்தால் எத்தனை பேருக்குத் தெரியும்?
மனச்சாட்சி பதில் சொல்லட்டும். .
தெய்வசுந்தரம் நயினார்
சைகை மொழியில் திருக்குறளைக் கொண்டு
வருகிறது செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனம்.
வரவேற்போம். காது கேளாதோர் வாய் பேசாதோர்
பயன் பெறுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக