வெள்ளி, 6 செப்டம்பர், 2024

 உணவின் ருசி அதைச் சாப்பிடும்போதுதான் தெரியும்!
--------------------------------------------------------------------------------------
இப்படி ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு.
The proof of the pudding is in the eating! பிரசித்தி பெற்ற 
இந்தப் பொன்மொழியை மார்க்சிய மூல ஆசான் 
எங்கல்ஸ் அடிக்கடி மேற்கோள் காட்டியுள்ளார்.  

CBSE பாடத்திட்டம் உயர்ந்ததா? தமிழ் மாநிலப்
பாடத்திட்டம் உயர்ந்ததா என்று கேள்விகள் 
எழும்பி உள்ளன. இதற்கு விடை காண்பது எளிது.

இரண்டு பாடத்திட்டங்களையும் சேர்ந்த 
பத்தாம் வகுப்பு கணிதப் பாடப் புத்தகங்களை 
(X Std Maths) எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 
அல்ஜிப்ராவில் Quadratic equations அத்தியாயத்தை 
எடுங்கள்.

இரண்டு பாடப்புத்தகங்களையும் சாப்பிடுங்கள்.
ஒப்பிட்டுப் பார்த்து உண்மையை அறியுங்கள்.
Proof of the pudding is in the eating! 

இரு பாடத்திட்டங்களின் கணக்குகளைச் செய்யுங்கள்.
எது உயர்ந்தது என்று முடிவு செய்யுங்கள்.

அடுத்து Trigonometry அத்தியாயத்தை எடுங்கள்.
இரண்டு பாடத்திட்டங்களின் பாடங்களையும் 
படியுங்கள். கணக்குகளைச் செய்யுங்கள்.
எது உயர்ந்தது என்று தெரிய வரும்.
வேறு குறுக்கு வழி எதுவும் இல்லை.

பாடத்திட்டங்களின் உயர்வு தாழ்வை முடிவு செய்ய 
உங்களுக்கு அறிவியல் கல்வி அவசியம். அதாவது 
கல்லூரிக் கல்வி அவசியம். அப்போதுதான் 
Maths Physics பாடங்களைப்  படிக்கவும், கணக்குகளைச் 
செய்யவும் ஒப்பிடவும் முடியும்.

Arts group degreeகளை வைத்துக் கொண்டு அறிவியல் 
பாடங்களை மதிப்பிட இயலாது.

தமிழக ஆளுநர் ஆர் என் ரவி MSc Physics படித்தவர்.
எனவே சுலபத்தில் பாடத்திட்டங்களை மதிப்பிட்டு 
விடுகிறார். அவரின் கூற்று 100க்கு 100 சரியே!
CBSE பாடத்திட்டம் உயர்ந்தது!
தமிழ்நாடு பாடத்திட்டம் தரக்குறைவானது.
************************************************

   
.          
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக