ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

திருக்குறள் நகல் எரிப்புப் போராட்டம்!
ஆதரவு தாரீர்!
------------------------------------------------------------- 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------
முற்பிறவி இப்பிறவி மறுபிறவி என்று பிறவிகள் 
இருக்கின்றன. ஏழு பிறவிகள் உண்டு என்கிறது 
திருக்குறள்.

முற்பிறவியில் செய்த பாவத்திற்கு இந்தப் 
பிறவியில் தண்டனை கிடைக்கும் என்றும் 
இதை ஊழ்வினைப்பயன் என்றும் கூறுகிறது குறள்.

அதே போல், இந்தப் பிறவியில் பாவம் செய்தால் 
அடுத்த பிறவியில் தண்டனை உண்டு என்கிறது
குறள். இதை ஊழ் என்கிறது குறள். 

இந்த ஊழே சக்தி வாய்ந்தது. இதற்கு மிஞ்சிய சக்தி 
யாருக்கு உண்டு என்கிறது குறள்.
இதோ குறள்!

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்.

இந்தக் குறள் பிற்போக்கானது. ஊழ் என்று எதுவும் 
இல்லை. பிறவிகளில் முற்பிறவி, மறுபிறவி என்றெல்லாம் 
எதுவும் கிடையாது.

இந்தக் குறளை மாணவர்களுக்குக் கற்பித்தால் 
அவர்களிடம் பிற்போக்குச் சிந்தனை வளரும்.

எனவே பிற்போக்கான இந்தத் திருக்குறளின் நகலை,
அதாவது காகிதத்தில் மையால் எழுதப்பட்டு உள்ள 
இந்தக் குறளின் நகலை  நியூட்டன் அறிவியல் மன்றம்
தீ வைத்து எரிக்க விரும்புகிறது.

மனிதன் மட்டுமின்றி விலங்குகள் பறவைகள் 
புழு பூச்சிகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் 
ஒரு பிறவி மட்டுமே உண்டு என்கிறது அறிவியல்.

எனவே அறிவியலுக்கு எதிரான பிற்போக்குத் 
திருக்குறளின் காகித நகல் எரிப்புப் போராட்டத்தை 
நடத்த இருக்கும் எங்களின் சீரிய முன்னெடுப்பை 
ஆதரிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
**********************************************

 

 
  

   
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக