சனி, 7 செப்டம்பர், 2024

ரகுராம் ராஜன் IAS அதிகாரி அல்ல. அவர் UPSC 
தேர்வே எழுதவில்லை. பிராமணரான ரகுராம் ராஜனை 
ரிசர்வ் வாங்கி ஆளுநர் ஆக்கினார் மன்மோகன்சிங். வ    வங்கி 



கைத்தல நிறைகனி பாட்டை மனப்பாடமாக 
ஒப்பிக்கச் சொல்லி, முடியாத பையன்களின்
முதுகுத் தொலியை உரிக்கிறார் இசக்கிமுத்து  அண்ணாச்சி    வீரவநல்லூரில் 


enna seyya v



என்ன செய்ய வேண்டும்?
பேச்சாளர் மகாவிஷ்ணு பிரச்சினைக்குத் 
தீர்வு என்ன?
------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------
காதல் மேலிட்ட காதலன் காதலியிடம் 
சொல்லுகிறான்: இந்தப் பிறவியில் உன்னை 
ஒருபோதும் பிரிய மாட்டேன்.

காதலி மகிழ்ச்சி அடைய வேண்டும் அல்லவா!
ஆனால் அவளோ அழுகிறாள். அப்படியானால் 
அடுத்த பிறவியில் பிரிந்து விடுவதாகத்தானே 
அர்த்தம் என்று எண்ணி அஞ்சுகிறான். 

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றனம் 
கண்நிறை நீர்கொண்ட னள்.

திருக்குறள்  உலகின் ஞான நூல்களில் ஒன்று.
அது பிறவிகளை அங்கீகரிக்கிறது. இப்பிறவி,
முற்பிறவி.மறுபிறவி என ஏழு பிறவிகளைக் 
கூறுகிறது.

உலக இலக்கியங்கள் அனைத்தும் மறுபிறவி 
பற்றிப் பேசுகின்றன. உலகின் மதங்கள் அனைத்தும் 
மறுபிறவிக் கோட்பாட்டை ஏற்கின்றன.

ஒருவர் மறுபிறவி இருக்கிறது என்று நம்புகிறார் 
என்றால் அது குற்றம் அல்ல. அதற்கா அவரைக்கைது 
செய்வது தவறு.

மறுபிறவியை நம்புகிறவனைக் கைது செய்வது 
என்றால், சாமி கும்பிடுகிறவனையும் கைது 
செய்ய வேண்டும் அல்லவா?

அப்படிக் கைது செய்ய ஆரம்பித்தாள் தமிழ்நாட்டில் 
நான் உட்பட வெகுசிலரத் தவிர மீதி அனைவரும் 
கைதாக வேண்டியது இருக்கும்.

என்ன செய்ய வேண்டும்?
-----------------------------------
ஒரு பள்ளியில் ஒரு பேச்சாளர் வந்து பிற்போக்காகவும் 
அறிவியலுக்கு எதிராகவும் பேசிவிட்டுச் சென்றால் 
நாம் என்ன செய்ய வேண்டும்?

அடுத்த வாரம் அந்தப் பள்ளியில் இன்னொரு கூட்டம் 
போட வேண்டும். அதில் ஒரு அறிவியல் அறிஞராய் 
பேச வைக்க வேண்டும். அவர் வாழ்வியலுக்கான 
அறிவியல் கருத்துக்களைப் பேச வேண்டும். 
பிற்போக்குப் பேச்சாளர் முன்வைத்த அறிவியலுக்கு 
எதிரான கருத்துக்களைக் கண்டிக்க வேண்டும்.
இதுதான் தீர்வு!
**************************************************
பின்குறிப்பு:
பெரியாரிய போலி நாத்திகத்தின் வீழ்ச்சியே 
மகாவிஷ்ணு போறவர்களின் வளர்ச்சிக்குக் காரணம்.  
***************************************************










 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக