வியாழன், 5 செப்டம்பர், 2024

 

செங்கோண முக்கோணம் குறித்த பித்தகோரஸ் தேற்றம் ஒரு  GOAT (Greatest Of All Time) ஆகும். அப்படியானால் பித்தகோரசை ஒரு சனாதனி 
என்பானா அந்த லூசுப்பையால்?    பயல்? 

பட்டிமன்றம் நடத்தி சாலமன் பாப்பையா தீர்ப்பு 
வழங்காமலேயே உள்ளங்கை நெல்லிக்கனியாய்த் 
தெரிவது "ஸ்டேட் போர்டு சிலபஸ் மட்டமானது; CBSE உயர்வானது" என்ற உண்மை!    ஆனது!


சரவணா பவனிலும் ல் காப்பி கிடைக்கிறது;

சரவண பவனிலும் காப்பி கிடைக்கிறது; கையேந்தி 
பவனிலும் காப்பி கிடைக்கிறது.TN ஸ்டேட் போர்டு 
சிலபஸ் என்பது கையேந்தி பவன் காப்பி. CBSEதான் 
சரவணபவன் காப்பி!     றி 

25 ஆண்டுக்கும் மேல் CBSE, ஸ்டேட் போர்டு,
மெட்ரிகுலேஷன் என்ற மூன்று சிலபஸிலும் 
Maths, Physics டியூஷன் எடுத்த நான்
கூறுகிறேன்: CBSE is the best.     



15 ஆண்டுகளுக்கு முன்பான XII Physics (TN State Board)
பாடப்புத்தகத்தில் E= mc^2 derivation  உண்டு. நான் பலமுறை 
பாடம் எடுத்திருக்கிறேன். ஆனால் அதே நேரத்தில் 
CBSE XII Physics பாடப்புத்தகத்தில் மேற்கூறியய derivation 
கிடையாது. நான் இரண்டு பாடத்திட்டத்திலும் 
XII Physics டியூஷன் எடுத்தவன்.

Portions சற்று அதிகமாக வைக்கப் பட்டுள்ளது 
என்பதைக் கொண்டு தரத்தைத் தீர்மானிக்க இயலாது.
இங்கிலாந்து, பிரான்சு நாடுகளின் XII Physics பாடப் 
புத்தகங்களையும் ஒப்பிட்டால் பல  ஒற்றுமைகளைக் 
காண இயலும். Quantum of lessons can't determine the standard.
There are other serious factors.    


பாடத்திட்டத்தில் ஒரு பாடத்தை வைத்து,
அதை மாணவனுக்கு கற்றுக் கொடுத்து 
அவன் பெற்ற அறிவை சோதிக்கும்போது 
தமிழ் மாநிலப் பாடத்திட்டம் வெறுமனே 
மேலெழுந்தவாரியாக மட்டுமே சோதிக்கிறது. 
அதாவது knowledgeஐ சோதிப்பதுடன் நின்று
விடுகிறது.

ஆனால் CBSE மாணவனின் அறிவைச் சோதிக்கையில் 
பின்வரும் நான்கு விஷயங்களை கணக்கில் 
கொள்கிறது.
1) Knowledge 
2) Understanding 
3) Application 
4) Skill     

      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக