1) கோளிற் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
2) தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
3) அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீத்தல் அரிது.
மேற்கூறிய மூன்று குறட்பாக்களிலும் தாள் என்பது
பாதம் என்ற பொருளில் வந்துள்ளது.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்ணீர் பூசல் தரும்
என்ற குறளில் தாழ் என்பது தாழ்ப்பாள் என்ற பொருளில்
வந்துள்ளது.
தாள் = பாதம், காகிதம்
தாழ் = தாழ்ப்பாள், தாழ்வு
சரியான பொருள் மேற்கூறியதே.
பூங்கதவே தாழ் திறவாய் என்று சரியாகத்தான்
வைரமுத்து எழுதி உள்ளார். அவர் தாள் என்று
சொல்லவில்லை.
கதவைத் தாழிடுதல், கதவின் தாழ் திறத்தல்
ஆகியவற்றில் ள வருமா அல்லது ழ வருமா
என்ற மாணவர்களின் கேள்விக்கு விடையாக
இப்பதிவு எழுதப் பட்டுள்ளது.
தாழிடுதல், தாழ் திறத்தல் என்பவையே சரியானவை.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ் என்பதில்
வள்ளுவர் தாள் என்று எழுதவில்லை. குறளே
அனைவர்க்கும் வழிகாட்டி.
துவக்க உரை நிகழ்த்தினார்!
வகுப்பு துவங்கியது!
இவை பிழையானவை.
தொடக்கம் என்பதே சரி.
தொடக்க உரை, தொடங்கியது. இவையே சரி!
இருப்பினும் பதிவை எழுதியவன் என்ற முறையில்
நான்கு குறட்பாக்களை எடுத்துக்காட்டி தாள் என்ற
சொல்லை தாழ்ப்பாள் என்ற பொருளில் வள்ளுவர்
வழங்கவில்லை என்று நிரூபித்துள்ளேன்.
வழக்கில் இல்லை. வழக்கு வீழ்ந்திருப்பின்
அதையேனும் சுட்டலாம். நாம் திட்டவட்டமான
நோக்குடனும், மிக்க தெளிவுடனும், ஆழ்ந்த
அக்கறையுடனும் (seriously) ஒரு பதிவை எழுதுகிறோம்.
பிறர் அப்படி அல்லர். போகிற போக்கில் மிகவும்
casually பிழையான எதையோ ஒன்றைச் சொல்லி
விட்டுச் சென்று விடுவார். பொதுவெளியில்
எழுதும்போது இத்தகைய இடர்கள் மேலிடுவது
இயற்கையே.
இதனால்தான் நான் ஆயிரம் நிபனைகளை IQ சார்ந்து
விதிக்க நேர்கிறது.
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே!
இழிந்த பிழை!
எனக்கு அதிகாரம் இருந்தால் இதை எழுதிய
பா விஜய் என்பவனைத் தூக்கில் இடுவேன்!
அது வழுவமைதியில் வரும்.
பா விஜய் எழுதியது வழுவமைதி ஆகாது; ஆகவும்
இயலாது. வழுவமைதிக்கு இலக்கணம் இருக்கிறது.
பெருவழக்காக ஆகும்போது மட்டுமே ஒரு வழுவை
அமைதிப் படுத்துகிறது இலக்கணம்.
வெட்கம் என்ற சொல் வழக்கில் வெக்கம் என்றே
ஆளப்படுகிறது. வெக்கம் என்பது பெருவழக்காய்
உள்ளது. இதை ஆராய்ந்தார் தொல்காப்பியர்.
இவ்வாறு வருவதை, அதாவது இரு வேறு மெய்கள்
அடுத்தடுத்து வருகையில், அடுத்து வரும் உயிர்மெய்யைப்
பொறுத்து, முன்னது மறைந்து பின்னது
ஓங்குதலை, மெய்மயக்கம் (CLUSTER) என்று இலக்கணம்
செய்தார் தொல்காப்பியம். அதாவது வெட்கம் என்பது
வெக்கம் என்றாதல் மெய்மயக்கம்.
ஒரு ஓர் பயன்பாட்டில், இரண்டுக்கும் உள்ள
வேற்றுமையை மக்கள் கருத்தில் கொள்வதே இல்லை.
பேச்சு வழக்கில் "ஓர்" பயன்பாடு இல்லை. எனவே
வழுவமைதி தேவைப் படுகிறது.
அலட்சியம், ஆணவம், தமிழை மதியாமை ஆகிய
இழியுணர்வுகளால் உந்தப்பட்டு பா விஜய் எழுதியது
பெருங்கயமை. ஒவ்வொரு பூக்களுமே என்று
பேச்சு வழக்கில் இல்லை; இல்லவே இல்லை.
முற்றிய மனநோயாளி கூட ஒவ்வொரு பூவும்
என்றுதான் சொல்வான். ஆக வழக்கில் இல்லாத
ஒன்றை வழுவமைதியாக ஏற்க இயலாது.
செக்குக்கும் சிவலிங்கத்துக்கு உள்ள வேறுபாட்டைக்
கருத்தில் கொள்ளாமல் பேசக்கூடாது.
ஓர் இரவு என்பதே இலக்கணப்படி சரி.
அறிஞர் அண்ணாவின் நாடகம் ஓர் இரவு
என்றே பெயரிடப்பட்டது.
அடுத்து வருவது உயிர் என்றால், "ஓர்" என்று
எழுத வேண்டும். ஓர் ஆண்டு, ஓர் உலகம்,
ஓர் எருது, ஓர் உழவன் என்று எழுதுவதே சரியானது;
இலக்கணப்படி சரியானது.
அடுத்து வருவது உயிர்மெய் என்றால், "ஒரு" என்று
எழுத வேண்டும். ஒரு வீடு, ஒரு காடு, ஒரு தொட்டில்
என்றே எழுத வேண்டும். நிற்க.
ஜெயகாந்தனின் புகழ் ஏற்ற நாவலான " ஒரு மனிதன்,
ஒரு வீடு, ஒரு உலகம்" என்பதில் ஒரு உலகம்
என்றே எழுதினார்.நான் இதை வழுவமைதியாக
ஏற்கிறேன்.
"அவளுக்கென்று ஓர் மனம்" என்ற திரைப்படம்
வந்தபோது, "ஓர் மனம்" என்று பெயரிட்டது தவறு என்றும்
"ஒரு மனம்" என்பதே சரி என்றும் தமிழறிஞர்
மகா வித்துவான் மே வீ வேணுகோபாலப்பிள்ளை
கண்டித்தார்.
வானியல் நிகழ்வுகள் (celestial events) ஆயிரக்கணக்கில்
அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றில்
சில கவனம் பெறுகின்றன. நீங்கள் குறிப்பிடும்
நிகழ்வு இயல்பானதே. இது நமது புவியின்
வளிமண்டலத்தால் ஏற்படும் நிகழ்வு. இது ஓர் ஒளியியல்
நிகழ்வு (optical phenomenon). சூரிய ஒளி சிதறடிக்கப்
படுவதால் நேரும் நிகழ்வு இது.
மலையாளத்துக்கு ஏன் போக வேண்டும்?
திருநெல்வேலியில் எங்கள் ஊரில் (வீரவநல்லூர்)
இன்றும் தாழ்ப்பாள் என்ற சொல்லையே மக்கள்
பயன்படுத்தி வருகின்றனர்.
வாழ்த்துக்கள் அம்மா. பின்நவீனத்துவக்
கோட்பாட்டாளர்களின் வரிசையில் நீங்கள்
இடம் பெற்றிருப்பதாக அறிகிறேன்.
வாழ்த்துக்கள்!
"இதை விடக் கடினம்" என்பதே சரியானது.
" இதை விடப் பகை ஏது?" என்பதே சரியானது.
அகர ஈற்றின் முன் வல்லினம் மிகும் என்ற விதியின் கீழ்
மேற்கூறியவை சரியானவை.
:"இந்தியை விடச் சிறந்தது தமிழ்" என்பதையும் கருதுக.
இதை விட காரணம் வேறென்ன?
இந்த வாக்கியத்தைக் கருதுக.
இவ்வாக்கியத்தில் வல்லினம் மிகுந்தால்
ஒரு பொருளும், மிகாமல் இருப்பின் வேறு ஒரு
பொருளும் கிடைக்கும்.
"இதை விடக் காரணம் வேறு என்ன வேண்டும்?"
என்ற வாக்கியத்தில், வல்லினம் மிகுந்துள்ளது.
இதன் பொருள்: இதுவே சிறந்த காரணமாகி
விட்டது; வேறு காரணம் எதுவும் இதை விடப்
பெரிதானதில்லை என்ற பொருள் கிடைக்கும்.
இதை விட காரணம் வேறு என்ன?
இந்த வாக்கியத்தில் வல்லினம் மிகவில்லை.
இதன் பொருள்:
இதை விட (அதாவது இதை விட்டு விடுவதற்கு)
காரணம் வேறென்ன வேண்டும்?
இதை விடத்
அகர ஈற்றின் முன் வல்லினம் மிகும் பிற இடங்கள்:
-------------------------------------------------------------------------------
1) ஆடத் தெரியாத நாட்டியக்காரி
2) எழுதப் படிக்கத் தெரியுமா?
3) ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டில் ஒளிந்தான்.
4) ஓட்டப் பந்தயம்
5) உன் மனைவி பாடத் தெரிந்தவளா?
6) ஆங்கிலப் புத்தகம் வாசிக்கத் தெரியுமா?
7) போகச் சொன்னான்
8) தேடக் கிடைக்காத செல்வம்.
9) நீந்தக் கற்றுக்கொள்.
10) திருடப் பழகினான்.
7)
உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது.
----------------------------------------------------------------
இதை புரிந்து கொள்ள வேண்டுமெனில்,
உம்மைத்தொகை என்றால் என்ன என்று
முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
உம்மைத்தொகை தமிழின் அற்புதங்களில் ஒன்று.
உம்மை என்பது "உம்" என்பதைக் குறிக்கும்.
ஆங்கிலத்தில் உள்ள and போன்றது.
ஆணும் பெண்ணும், தாயும் தந்தையும்,
நகரமும் கிராமமும் ஆகியவற்றில் உம்மை
தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளது.
இவ்வாறு வெளிப்படையாகத் தெரியாமல்
தன்னை மறைத்துக் கொண்டு, அதே பொருளைத்
தந்தால் அது உம்மைத்தொகை எனப்படும்.
இதோ பாருங்கள்:
ஆண் பெண்
தாய் தந்தை
கணவன் மனைவி
அண்ணன் தம்பி
வெற்றிலை பாக்கு
மேசை நாற்காலி
நாடு நகரம்
ஆகிய எடுத்துக் காட்டுகள் அனைத்தும்
உம்மைத்தொகை ஆகும்.
ஆண் பெண் என்பது ஆணும் பெண்ணும் என்று
பொருள்படும். ஆனால் ஆண் பெண் என்பதில்
உம்மை இல்லை. அதவாது உம்மை தொக்கி நிற்கிறது.
எனவே இது உம்மைத்தொகை.
தொக்கி நிற்பது = மறைந்து நிற்பது.
உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது!
எப்படி?
தேங்காய் பழம் என்பது உம்மைத்தொகை.
தேங்காய்ப்பழம் என்று வல்லினம் மிகுத்து
எழுதக் கூடாது. தேங்காய் பழம் என்பதே சரி.
மேலும் ஒரு எடுத்துக்காட்டு!
வெற்றிலை பாக்கு என்று எழுதுவதே சரி.
வெற்றிலைப்பாக்கு என்று ப் போட்டு
எழுதக் கூடாது.
ஆக, உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது
என்பது இப்போது எளிதாகப் புரியும் என்று
கருதுகிறேன். இவை அனைத்தும் 9, 10 பாட நூல்களில்
உள்ளன.
***************************************************
மாமியார் உடைத்தால் மண்குடம்!
கீரை வடையும் கிணற்று நீரும்!
------------------------------------------------------
மேற்கண்ட வாக்கியத்தில் வரும் மண்குடம் என்பதன்
இலக்கணக் குறிப்பு என்ன?
மண்குடம் என்பது மண்ணால் செய்யப்பட்ட குடம் என்று
பொருள் படும்.
ஆல் என்பது மூன்றாம் வேற்றுமை உருபு.
மண்குடம் என்பதில் ஆல் என்னும் மூன்றாம்
வேற்றுமை உருபு தொக்கி நிற்கிறது.
(தொக்கி நிற்றல் = மறைந்து நிற்றல்).
வேற்றுமை உருபு மட்டுமா தொக்கி நிற்கிறது?
வேற்றுமைக்கு உருபைச் சேர்த்துச் சொல்லிப்
பாருங்கள். மண்ணால் குடம் என்று சொல்லலாம்.
அப்படிச் சொன்னாலும் பொருள் நிறைவு
பெறவில்லை.
மண்குடம் என்பதற்கு மண்ணால் செய்யப்பட்ட
குடம் என்றுதானே பொருள்.
மண்குடம் = மண் + ஆல் செய்யப்பட்ட + குடம்.
இங்கு ஆல் என்பதும் தொக்கி நிற்கிறது.
செய்யப்பட்ட என்பதும் சேர்ந்து தொக்கி நிற்கிறது.
அதாவது வேற்றுமை உருபும் தொக்கி நிற்கிறது.
வேற்றுமை உருபின் பயனும் தொக்கி நிற்கிறது.
எனவே இதை உருபும் பயனும் சேர்ந்து தொக்கி
நிற்கிறது என்கிறோம்.
(தொக்கி நிற்றல் = மறைந்து நிற்றல்).
இதைத்தான் தமிழ் இலக்கணம் உருபும் பயனும்
உடன் தொக்க தொகை என்கிறது.
ஆக, மண்குடம் = மூன்றாம் வேற்றுமை உறுப்பும் பயனும்
உடன் தொக்க தொகை ஆகும். இதுதான் மண்குடத்தின்
இலக்கணக் குறிப்பு.
மேலும் சில உதாரணங்கள்!
பொற்குடம் = பொன்னால் செய்யப்பட்ட குடம்.
எனவே இதுவும் மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும்
உடன்தொக்க தொகை ஆகும்.
மண்பானை,
பித்தளைக்குடம்,
செம்புக்குடம்,
வைரத்தோடு,
தங்கக் கம்மல்,
பட்டுச்சேலை
நூல்சேலை (நூற்சேலை)
ஆகிய இவை அனைத்தும் மூன்றாம் வேற்றுமை உருபும்
பயனும் உடன்தொக்க தொகை ஆகும்.
சரி, நெய்க்குடம் என்பதன் இலக்கணக் குறிப்பு என்ன?
நெய்யால் செய்யப்பட்ட குடம் என்று பொருள்படாது
அல்லவா? எனவே மூன்றாம் வேற்றுமை உருபும்
பயனும் உடன்தொக்க தொகை என்று சொல்ல இயலாது.
பின் என்ன சொல்வது?
நெய்க்குடம் = நெய்யை உடைய குடம்.
இதில் ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபும்
அதன் பயனும் சேர்ந்து தொக்கி நிற்கிறது அல்லவா?
எனவே இது இரண்டாம் வேற்றுமை உருபும்
பயனும் உடன் தொக்க தொகை ஆகும்.
கோரைப்பாய் = கோரையால் செய்த பாய். எனவே
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க
தொகை.
தண்ணீர்ப் பானை = தண்ணீரை உடைய பானை.
இது இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும்
உடன் தொக்க தொகை.
சரி, பின்வருவனவற்றுக்கு உரிய இலக்கணக் குறிப்பு
என்ன? வாசகர்கள் விடையளிக்க வேண்டும்.
இது கட்டாயம்!
இலக்கணக் குறிப்பு என்ன?
1) வெள்ளிக் கொலுசு
2) கீரை வடை
3) வெண்ணெய்த் தாழி
4) அரிசிப்பானை
5) பருப்பு மூட்டை
6) கிணற்று நீர்
7) தங்கப் பதக்கம்
8) வெல்லப் பிள்ளையார்
9) தகர உண்டியல்
10) காகிதக் குவளை.
------------------------------------------------------------------------
பின்குறிப்பு: வேற்றுமைகள் மொத்தம் எட்டு.
இவற்றுள் முதல் வேற்றுமை என்பது எழுவாய்
வேற்றுமை ஆகும். எட்டாம் வேற்றுமை என்பது
விளி வேற்றுமை ஆகும். இவற்றுக்கு உருபு இல்லை.
மீதி ஆறு வேற்றுமைக்கும் உருபு உண்டு.
இவற்றை நன்கு அறிந்திடுக. ஒவ்வொரு வேற்றுமைக்கும்
உரிய உருபும் பயனும் அறிந்திட வேண்டும்.
அவற்றை அறிந்தால்தான் வல்லினம் மிகும் இடம்,
மிகா இடம் பற்றி அறிய இயலும். கீழ்நிலை
வகுப்புகளின் இலக்கண நூற்களைக் கற்கவும்.
**************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக