செவ்வாய், 4 ஜூன், 2019

பள்ளிக்கல்வி எப்படி இருக்க வேண்டும்?
---------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------
இந்தியாவில் பள்ளிக் கல்வியில் 10ஆம் வகுப்பு வரை
கணிதமும் அறிவியலும் கட்டாயப் பாடமாக
உள்ளன. இதை 12ஆம வகுப்பு வரை நீட்டிக்க
வேண்டும். அதாவது 11,12 வகுப்புகளிலும்
கணிதமும் அறிவியலும் கட்டாயம் ஆக்கப்பட
வேண்டும்.

11,12 வகுப்புகளின் அறிவியல் என்பது
இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகியவற்றை
உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

இதனால் மாணவர்களுக்கு சுமை என்ற பட்சத்தில்,
இரண்டு மொழிப்படங்களை (தமிழ்நாட்டில் தமிழ்,
ஆங்கிலம்) அகற்றி விட வேண்டும்.

10ஆம் வகுப்புக்கு மேல் மொழிப்பாடங்களுக்கு
பெரிய தேவை எதுவும் இல்லை.

தற்போது 11,12 வகுப்பு மாணவர்கள் மொழிகள் உட்பட
6 பாடம் படிக்கிறார்கள்.
1. தமிழ் 2. ஆங்கிலம் 3. அக்கவுன்டன்சி 4. வணிகம்
5. பொருளியல் 6. கணினி அறிவியல்

இது பின்வருமாறு மாற்றப்பட வேண்டும்:-
1. கணிதம் 2. அறிவியல் 3. பொருளியல் 4. வணிகம்
5. அக்கவுன்டன்சி 6. கணினி அறிவியல்.

மொழிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும்
அறிவியலைப் புறக்கணிப்பதும் நாட்டின் வளர்ச்சிக்கும்
மக்களின் முன்னேற்றத்திற்கும் எதிரானது.
******************************************************

In India the production language is English and no Indian language
whether Hindi or Tamil is qualified enough to be so. In our country
the languages are given undue importance at the cost science.
So the language teaching should be stopped at secondary level.

Indian languages are capable to teach science upto XII standard.
Therefore the medium of instruction need not be English.

aen illai?   ஏன் இல்லை?
  மருதுபாண்டியன்

2016 இயற்பியல் பரிசு பற்றிய எனது விளக்கம்
இந்த வீடியோவில் உள்ளது. இதில் மிகுமின்கடத்தல்
(superconductivity) பற்றிய எனது விளக்கத்தைப்
பார்க்கவும் இது வீடியோவின் 5ஆம் நிமிடத்தில்
இருந்து தொடங்குகிறது.

தளபதி ஸ்டாலினின் மகள் செந்தாமரை
நடத்தும் சன்ஷைன் பள்ளியில் இந்தி கட்டாய பாடம்!
இந்த இந்தித் திணிப்பை யாரும் எதிர்க்கக் கூடாது.    ரகுபதி

சில தொகுதிகளில் காங்கிரஸ் தோற்றதாக
மேற்படி மார்க்சிஸ்ட் முன்னாள் எம்பி
குறிப்பிடுகிறார். அதற்கான வாக்கு விவரங்களையும்
அவர் ஆதாரமாகத் தருகிறார். அதையே பதிவு
குறிப்பிடுகிறது. மொத்த மாநிலத்தை அல்ல.
தங்களின் சுட்டிக்காட்டலுக்கு மிகவும் நன்றி.
அருள்கூர்ந்து இப்போது பதிவைப் படித்துப் பாருங்கள்.


11,12 வகுப்புகள் முதற்கொண்டு தேவையற்ற
மொழிச்சுமை கூடாது என்பதே நியூட்டன்
அறிவியல் மன்றத்தின் மொழிக்கொள்கை.
வெண்பாவின் இலக்கணம் என்ன என்ற
கேள்வி 12ஆம் வகுப்பில் ஏன்? எத்தனை பேர் வெண்பா
இயற்றப் போகிறான்?

1 muthal 12

1) பயிற்றுமொழி:
1 முதல் 12 வகுப்பு வரை அந்தந்த மாநில மொழியே
பயிற்றுமொழியாக இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் தமிழ், மேற்கு வங்கத்தில் வங்காளி

2) 11, 12 வகுப்புகளில் மொழிப்படச் சுமையைக்
குறைக்க வேண்டும். இலக்கியம் சார்ந்த
பாடங்களுக்குப் பதிலாக, மொழியாளுகை
சார்ந்த பாடங்கள் மட்டுமே வைக்கப்பட வேண்டும்.

3) அறிவியல் பட்டப் படிப்புகளில் (BSc) மொழிப்பாடம்
அறவே தேவையில்லை.
     

என்பது போல.

BSc பட்டப்படிப்பில் மொழிப்பாடம் தேவையில்லை.
முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும்.

ஈழத்தவரின் கல்வி  தரக்குறைவாக இருக்கிறது 
என்பதற்காக அதைக்கணக்கில் கொண்டு
இங்கு ஒரு கொள்கை வகுக்க இயலாது.
தமது கல்வியைத் தரம் உயர்த்துவது அவர்களின்
வேலை.

அறிவியல் படிப்பில் தேவையற்ற மொழிச்சுமை!
------------------------------------------------------------------------
1970களில் மதுரைப் பல்கலைக்கழகத்தில்
BSc பட்டப் படிப்பில் தமிழ் ஆங்கிலம் இரு மொழிகளும்
கற்க வேண்டும். தமிழில் நெடுநல்வாடை முழுவதும்
பாடம். dramaவில் மனோன்மணீயம்.

இயற்பியலுக்கும் நெடுநல்வாடைக்கும் என்ன சம்பந்தம்?
மனோன்மணீயம் காலத்துக்கு ஒவ்வாக் காப்பியம்.

அது போல ஆங்கிலத்தில், ஷேக்ஸ்பியரின் மாக்பெத்தும்
பெர்னார்ட் ஷாவின் செயின்ட் ஜோன் நாடகமும்
முதல் இரண்டு ஆண்டுகளில் இருந்தன.  

இவை அனைத்தும் தேவையற்றவை.

அறிவியல் பட்டப்படிப்பில் தேவையற்ற இலக்கியச் சுமை.
இவை அகற்றப்பட வேண்டும்.

அறிவியல் பட்டப் படிப்பில் BSc படிப்பில்
மொழிப்பாடங்கள் அறவே நீக்கப்பட வேண்டும்.
ஏற்கனவே B.Com பட்டப் படிப்பில் மொழிப்பாடம்
கிடையாது. Business English  மட்டுமே உண்டு.
இது ஒரு சிறந்த முறை.

BScயில் ஏன் மலைபடுகடாம்?
BScயில் ஏன் ஷேக்ஸ்பியரும் பெர்னார்ட் ஷாவும்?
----------------------------------------------------------

தமிழக அரசே, 12ஆம் வகுப்பில் தற்போதுள்ள
மொழிப்பாடத்தை அகற்று. 11ஆம் வகுப்புடன்
மொழிப்பாடத்தை நிறுத்து. இது முதல் கட்டம்.


பத்தாம் பசலித்தனமான வாதம்.
11ஆம் வகுப்புடன் மொழிப்பாடம் போதும்.
plus 2 என்பது ஓர் integrated course. அதில் 11 வகுப்புடன்
மொழிப்பாடத்தை நிறுத்திக் கொள்ளலாம்.

நான் மாணவனாக பள்ளியில் படித்த காலந்தொட்டு
இன்று வரை மாணவர்களுடன் வாழ்ந்து வருகிறேன்.
கல்வித் துறை சார்ந்து நீண்ட காலமாக செயல்பட்டு
வருகிறேன். மாணவர்களுக்கு பாடம் (physics maths)
எடுத்து வருகிறேன்.

நீங்கள் சாய்வு நாற்காலியில் இருந்து கொண்டு
உங்களின் அகநிலை விருப்பத்தை (subjective thought)
பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்.


இது விதண்டாவாதம்.


பதினோர் வகுப்புடன்


11, 12 வகுப்புகளில் மொழிப்பாடம் ஒரு வீண் சுமை!
வெண்பா மெல்லாம்

11ஆம் வகுப்புடன் மொழிப்பாடத்தை நிறுத்துக!
12ஆம் வகுப்பில் மொழிப்பாடம் தேவையில்லை!
வெண்பா வெண்பா வெண்பா!
--------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------

மேற்கொற்றிய கருத்தை உள்ளடக்கிய
ஒரு வெண்பாவைப் படித்து மகிழுங்கள்!

பன்னிரண்டாம் மாணவர்க்கு ஏனையா வீண்சுமை
மன்னுதமிழ் நாட்டின் அமைச்சரே கேளுமையா
ஆங்கிலம் ஏன்தமிழும் ஏன்மொழிப் பாடமாய்    
தாங்குமா போதும்போ தும்.        

வெண்பாவில் அதிக அளவில் காய்ச்சீர் பயிலுமாறு
அமைத்துள்ளேன். எத்தனை பேரால் இதன்
நலம் பாராட்ட இயலும்?

பதிவில் உள்ள கருத்துக்களை ஆதரிப்போர்
உரைநடையில் தங்கள் கருத்தைக் கூறலாம்.

பதில் உள்ள கருத்தை ஏற்காதோர்
தங்கள் கருத்தை ஒரு வெண்பாவில் மட்டுமே
கூற வேண்டும். அவர்களுக்கு உரைநடை
அனுமதிக்கப் படவில்லை.
*************************************************
மருதுபாண்டியன்  சிலமரசன் சிலம்பரசன் சே
 







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக