வியாழன், 20 ஜூன், 2019

புவி வெப்பம் அடைதல்!
------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------
பூமியின் மேற்பரப்பில்தான் (surface) நாம் வாழ்கிறோம்.
பூமி சூடாவது அல்லது புவி வெப்பம் அடைவது
என்று பேசுகையில் நாம் பூமியின் மேற்பரப்பின்
வெப்பநிலை பற்றித்தான் பேசுகிறோம். (பூமியின் உட்பகுதி
inner core சராசரியாக 5500 டிகிரி செல்ஸியஸ் ஆகும்).

பூமியின் மேற்பரப்பின் வெப்பநிலை (surface temperature)
எவ்வளவு? தற்போது தோராயமாகவும் சராசரியாகவும்
15 டிகிரி செல்ஸியஸ் என்று எடுத்துக் கொள்ளலாம்.

உலக நாடுகள் ஒன்றிணைந்து புவி வெப்பம் அடைதலைத்
தடுக்க ஓர் அமைப்பை நிறுவி உள்ளன. IPCC என்று அதற்குப் பெயர்.
IPCC =Inter governmental Panel on Climate Change.

1750ல் தொழிற்புரட்சி தொடங்கியது. ஒரு நூறாண்டு
நீடித்தது. தொழிற்புரட்சிக்கு முன்பு இந்த பூமியின்
வெப்பநிலை எவ்வளவு இருந்ததோ (pre industrial level),
அதை ஒரு reference temperatureஆக IPCC  எடுத்துக் கொண்டுள்ளது.
இந்த வெப்பநிலையை விட 2 டிகிரி செல்ஸியஸ்
வெப்பம் அதிகரித்தால் அது பூமியில் மனித வாழ்வுக்கு
முடிவுரை எழுதும் என்று IPCC கருதுகிறது.

ஆக, 2 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் இந்த
உலகத்தின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
தொழிற்புரட்சிக்கு முன் என்ன வெப்பநிலை
இருந்ததோ, அதிலிருந்து 2 டிகிரி செல்ஸியஸ்
அதிகரித்தது விட்டால், பூமியில் மனித இனத்தின்
வாழ்வு முடிவுக்கு வந்து விடும். ஆக புவி வெப்பமாதல்
என்பது எவ்வளவு ஆபத்து என்று புரிந்து கொள்ள வேண்டும்.

நமது பூமி என்று சொல்லும்போது, நமது பூமியை
ஒரு கனத்த போர்வை போல மூடிக்கொண்டு இருக்கும்
நமது வளிமண்டலத்தையும் (atmosphere) சேர்த்தே
பூமி என்று எடுத்துக் கொள்கிறோம்.

இந்த வளிமண்டலம்தான் சூரியனில் இருந்து வரும்
தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சில் இருந்து நம்மைப்
பாதுகாக்கிறது. நமது வளிமண்டலம் பல அடுக்குகளாக
(layer) உள்ளது.

வளிமண்டலத்தில் பின்வரும் வாயுக்கள் உள்ளன.
நைட்ரஜன் = 78 சதம்.
ஆக்சிஜன் = 21 சதம்.
இவை இரண்டும் சேர்ந்தே 99 சதம் ஆகி விடுகிறது.
ஏனைய வாயுக்கள் மீதி ஒரு சதம் உள்ளன.

பசுங்குடில் வாயுக்கள்: (Green house gases)
------------------------------------------------------------
வளிமண்டலத்தில் இருந்து கொண்டு சூரியனின்
கதிர்வீச்சை உட்கிரகித்து (absorbed) பின்னர்
பூமியை நோக்கி வெளியிடும் (emission) வாயுக்கள்
பசுங்குடில் வாயுக்கள் எனப்படும்.இவ்வாறு
கதிர்வீச்சை வெப்பத்தை வெளியிடுவதால்
பூமி சூடாகிறது.

1. கார்பன் டை ஆக்ஸைடு CO2
2. மீத்தேன் CH4
3. நைட்ரஸ் ஆக்ஸைடு N2O
4.ஓசோன் O3
5. க்ளோரோ ஃபுளோரா கார்பன் CFC
6. ஹைட்ரொ ஃபுளோரா கார்பன் HFC
7. நீர்த்திவலைகள் (water vapour).

இப்பசுங்குடில் வாயுக்களில் புவிவெப்பம் அடைதலுக்குப்
பெரிதும் காரணமாக இருப்பது கார்பன் டை ஆக்ஸைடு.
உலகம் முழுவதும் பெருமளவு பயன்படுத்தப் படும்
எரிபொருள் பெட்ரோல் டீசல் போன்ற ஹைட்ரோ
கார்பன்கள் ஆகும். கார்பனை எரித்தால் கார்பன் டை
ஆக்ஸைடு வரும். இது வளிமண்டலத்துக்குச் சென்று
விடும். அங்கிருந்து கொண்டு சூரியனின் வெப்பத்தை
உட்கிரகிக்கும். உட்கிரகித்த வெப்பத்தை பூமிக்கு
அனுப்பும். இதனால் பூமி வெப்பம் அடையும்.

CO2 LEVELS:
------------------
வளிமண்டலத்தில் எவ்வளவு கார்பன் டை ஆக்ஸைடு
இருக்கலாம்? இதை ppm என்ற யூனிட்டால் அளப்பார்கள்.
ppm = part per million பத்ஹ்த்து லட்சத்தில் ஒரு பங்கு.

தற்போது 2013ஆம் ஆண்டில் வளிமண்டலத்தில் கார்பன்
டை ஆக்ஸைடு 400 ppm ஆகி விட்டது.
இதைக் குறைத்து 350 ppm என்ற அளவுக்குக் கொண்டு
வர வேண்டும்.

400 ppm என்பது ஆபத்தானது (dangerous level)
350 ppm என்பது பாதுகாப்பானது (safety level).

எனவே 400ல் இருக்கும் கார்பன் டை ஆக்ஸைடை
350க்கு இறக்குவது உலக நாடுகளின் கடமை.
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனின் கடமை.

உலகில் பல்வேறு இடங்களில் 350 club என்ற பெயரில்
மன்றங்களை அமைத்து கார்பன் டை ஆக்ஸைடின்
அளவை 350க்குக் கீழிறக்குவது பற்றி மக்களுக்கு
விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

நாம் என்ன செய்ய வேண்டும்?
----------------------------------------------
அரசும் மக்களும் ஒன்றிணைந்து கார்பன் டை ஆக்ஸைடின்
அளவை 350க்கு குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.

1. பெட்ரோல் டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்.
பெட்ரோலில் இயங்கும் சொந்த வாகனங்களைத்
தவிர்க்க வேண்டும். பொதுப்போக்குவரத்தை
பயன்படுத்த முனைய வேண்டும்.

2. ஹைடிரோ கார்பன் எரிபொருளுக்கு மாற்றாக
பாதுகாப்பான எரிபொருளை உற்பத்தி செய்ய வேண்டும்.
அனல் மின் நிலையங்களை மூட வேண்டும்.
*******************************************************
  • The concentration of GHGs in the earth’s atmosphere is directly linked to the average global temperature on Earth;
  • The concentration has been rising steadily, and mean global temperatures along with it, since the time of the Industrial Revolution;
  • The most abundant GHG, accounting for about two-thirds of GHGs, is carbon dioxide (CO2), is largely the product of burning fossil fuels.
  • ----------------------------
  • From 1880 to 2012, the average global temperature increased by 0.85 °C.
  • Oceans have warmed, the amounts of snow and ice have diminished and the sea level has risen. From 1901 to 2010, the global average sea level rose by 19 cm as oceans expanded due to warming and ice melted. The sea ice extent in the Arctic has shrunk in every successive decade since 1979, with 1.07 × 106 km² of ice loss per decade.
  • Given current concentrations and ongoing emissions of greenhouse gases, it is likely that the end of this century that global mean temperature will continue to rise above the pre-industrial leve. The world’s oceans will warm and ice melt will continue. Average sea level rise is predicted to be 24–30 cm by 2065 and 40–63 cm by 2100 relative to the reference period of 1986–2005. Most aspects of climate change will persist for many centuries, even if emissions are stopped.
---------------------------------------------
irreversile change on climate
---------------------------
There is alarming evidence that important tipping points, leading to irreversible changes in major ecosystems and the planetary climate system, may already have been reached or passed. Ecosystems as diverse as the Amazon rainforest and the Arctic tundra, may be approaching thresholds of dramatic change through warming and drying. Mountain glaciers are in alarming retreat and the downstream effects of reduced water supply in the driest months will have repercussions that transcend generations.
------------
Fifth Assessment Report
The report provides a comprehensive assessment of sea level rise, and its causes, over the past few decades. It also estimates cumulative CO2 emissions since pre-industrial times and provides a CO2 budget for future emissions to limit warming to less than 2 °C. About half of this maximum amount was already emitted by 2011.
--------------------
Global Warming of 1.5°C
In October 2018 the IPPCC issued a special report on the impacts of global warming of 1.5°C, finding that limiting global warming to 1.5°C would require rapid, farreaching and unprecedented changes in all aspects of society, the IPCC said in a new assessment. With clear benefits to people and natural ecosystems, the report found that limiting global warming to 1.5°C compared to 2°C could go hand in hand with ensuring a more sustainable and equitable society. While previous estimates focused on estimating the damage if average temperatures were to rise by 2°C, this report shows that many of the adverse impacts of climate change will come at the 1.5°C mark.
The report also highlights a number of climate change impacts that could be avoided by limiting global warming to 1.5ºC compared to 2ºC, or more. For instance, by 2100, global sea level rise would be 10 cm lower with global warming of 1.5°C compared with 2°C. The likelihood of an Arctic Ocean free of sea ice in summer would be once per century with global warming of 1.5°C, compared with at least once per decade with 2°C. Coral reefs would decline by 70-90 percent with global warming of 1.5°C, whereas virtually all (> 99 percent) would be lost with 2ºC.
The report finds that limiting global warming to 1.5°C would require “rapid and far-reaching” transitions in land, energy, industry, buildings, transport, and cities. Global net human-caused emissions of carbon dioxide (CO2) would need to fall by about 45 percent from 2010 levels by 2030, reaching ‘net zero’ around 2050. This means that any remaining emissions would need to be balanced by removing CO2 from the air.
---------------

United Nations Framework Convention on Climate Change

The UN family is in the forefront of the effort to save our planet. In 1992, its “Earth Summit” produced the United Nations Framework Convention on Climate Change (UNFCCC) as a first step in addressing the climate change problem. Today, it has near-universal membership. The 197 countries that have ratified the Convention are Parties to the Convention. The ultimate aim of the Convention is to prevent “dangerous” human interference with the climate system.

Kyoto Protocol

By 1995, countries launched negotiations to strengthen the global response to climate change, and, two years later, adopted the Kyoto Protocol. The Kyoto Protocol legally binds developed country Parties to emission reduction targets. The Protocol’s first commitment period started in 2008 and ended in 2012. The second commitment period began on 1 January 2013 and will end in 2020. There are now 197 Parties to the Convention and 192 Parties to the Kyoto Protocol.

Paris Agreement

At the 21st Conference of the Parties in Paris in 2015, Parties to the UNFCCC reached a landmark agreement to combat climate change and to accelerate and intensify the actions and investments needed for a sustainable low carbon future. The Paris Agreement builds upon the Convention and – for the first time – brings all nations into a common cause to undertake take ambitious efforts to combat climate change and adapt to its effects, with enhanced support to assist developing countries to do so. As such, it charts a new course in the global climate effort.
The Paris Agreement’s central aim is to strengthen the global response to the threat of climate change by keeping the global temperature rise this century well below 2 degrees Celsius above pre-industrial levels and to pursue efforts to limit the temperature increase even further to 1.5 degrees Celsius.
On Earth Day, 22 April 2016, 175 world leaders signed the Paris Agreement at United Nations Headquarters in New York. This was by far the largest number of countries ever to sign an international agreement on a single day. There are now 184 countries that have joined the Paris Agreement.

Climate Summit in 2019

In September 2019, Secretary-General António Guterres will convene a Climate Summit to bring world leaders of governments, the private sector and civil society together to support the multilateral process and to increase and accelerate climate action and ambition. He has named Luis Alfonso de Alba, a former Mexican diplomat, as his Special Envoy to lead its preparations. The Summit will focus on key sector where action can make the most difference—heavy industry, nature-based solutions, cities, energy, resilience, and climate finance. World leaders will report on what they are doing, and what more they intend to do when they convene in 2020 for the UN climate conference, where commitments will be renewed and may be increased.

Nobel Peace Prize

In 2007, the Nobel Peace Prize was awarded jointly to former United States Vice-President Al Gore and the IPCC "for their efforts to build up and disseminate greater knowledge about man-made climate change, and to lay the foundations for the measures that are needed to counteract such change."



.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக