வியாழன், 13 ஜூன், 2019

திராவிட இயக்கத்தின் போலியான சமூகநீதி!
வாரிசு அரசியல் என்பது நவீன வருணாசிரமமே!
உதயநிதியின் காலைக் கழுவுவதா சமூகநீதி?
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------
ஒரே கல்லில் ஆயிரம் மாங்காயை அடித்து விட்டார்
ஆந்திர முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி. சமூகநீதி
என்பதன் மெய்யான பொருள் என்ன என்பதை
இந்த நாடு முழுமைக்கும் உணர்த்தி விட்டார் ஜகன் மோகன்.

யாரும் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்காத
விதத்தில் ஐந்து துணை முதல்வர்களைக் கொண்டதாக
தமது அமைச்சரவையை உருவாக்கினார். அதில் பழங்குடி
இனத்தைச் சேர்ந்த (ST)  பம்முலு புஷ்ப ஸ்ரீவாணி என்ற
பெண்மணியை துணை முதல்வராக்கி இருக்கிறார்.
மீதி நான்கு துணை முதல்வர்களும் பிற்பட்ட வகுப்பினர்.

அமைச்சரவையில் மிகவும் அதிகாரம் வாய்ந்த உள்துறைக்கு
பட்டியலினத்தவரான (SC) மேகதாட்டி சுசரிதா என்ற
பெண்மணியை அமைச்சராக்கி உள்ளார்.

SC சமூகத்தவர், அதிலும் பெண்மணி, இன்று உள்துறை
அமைச்சர்! ST சமூகத்தவர், அதிலும் பெண்மணி, இன்று
துணை முதல்வர்! இது போக, பிற்பட்ட சமூகத்தவரான
நான்கு பேர் துணை முதல்வர்கள்!

இதுதான் சமூக நீதி! இதுதான் அதிகாரம் அளித்தல்
(EMPOWERMENT)! நாட்டின் ஆளுகையில் (governance) பங்கு
பெற இயலாத SC, ST சமூகத்தவருக்கு அதிகாரம்
அளித்துள்ளார் ஜெகன்மோகன்!

கூத்தாடிச்சி நடிகை ரோஜா தான் அமைச்சராவோம்
என்று கனவில் மிதந்தார். ஆனால் ஜகன்மோகனோ
அந்தக் கூத்தாடிச்சியை அமைச்சர் ஆக்கவில்லை.
தமிழ்நாட்டில் கூத்தாடிப்பயல் உதயநிதி துணை முதல்வர்
கனவில் மிதக்கிறான்! ஆகிவிடக் கூடும்!

தன்னை  இடதுசாரி என்றோ முற்போக்காளர் என்றோ
ஒருநாளும் உரிமை கோரியதில்லை ஜெகன்மோகன்.
இடதுசாரி, முற்போக்கு மற்றும் லிபரல் முழக்கங்களை
என்றுமே அவர் மேடையில் பிரச்சாரம் செய்ததில்லை.

அவ்வப்போது நெற்றியில் குங்குமத்துடன் தோற்றமளிக்கும்
ஜெகன்மோகன் தீவிர கடவுள் பக்தர். அடிக்கடி இந்து மத
மடாதிபதிகளிடமும் சங்கராச்சாரிகளிடமும் அவர்களின்
காலடியில் அமர்ந்து ஆசி பெறவும் அவர் தயங்கியதில்லை.
ஆக மேம்போக்கான பார்வையில் அவரை ஒரு
வலதுசாரி என்றே குட்டி முதலாளித்துவம் எடை போடும்.

ஆனால் தமது உறுதிமிக்க செயல்பாடுகள் மூலம், அனைத்து
மாநில முதல்வர்களையும் விட தீவிரமான இடதுசாரியாக
தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் ஜெகன்மோகன்.
ஜகன்மோகனின் மேற்கூறிய செயல்பாடுகள் அனைத்தும்
நிச்சயமாக anti establishment மற்றும் anti feudal தன்மை
உடையவை. இருப்பினும் துதிபாடிகளைக் கொண்டு
தன்னை ஒரு சமூகநீதிக் காவலர் என்று ஜெகன்மோகன்
அழைத்துக் கொள்ளவில்லை. 

தமிழ்நாட்டில் இப்படி ஒரு நிலையைக் கற்பனையிலாவது
காண முடியுமா? சமூகநீதியின் மண் என்றும் பெரியாரின்
மண் என்றும் போலிப்பெருமை பேசும் மூடர்களைக்
கொண்டதல்லவா தமிழ்நாடு!

தமிழ்நாடு பெரியாரின் மண் என்று சொல்வது அபத்தம்.
தமிழ்நாடு நவீன வருணாசிரமத்தின் மண். பெரியாரின்
மண் என்றால் போலியான சமூகநீதியின் மண்
என்றே பொருள்.

ஆயிரம் ஆண்டுக்கு முந்திய நிலவுடைமைச் சமூகத்தில்
(feudal society) வருணாசிரமம் இறுகிக் கிடந்தது.
அதே அளவு இறுக்கத்துடன் இன்று தமிழ்நாட்டில்
நவீன வருணாசிரமம் பிடிப்புடன் விளங்குகிறது.
பண்டைய வருணாசிரமத்திற்கு பார்ப்பனியம் காரணம்
என்பது போல, தமிழகத்தின் இன்றைய நவீன
வருணாசிரமத்திற்கு திராவிட இயக்கம் காரணம்.

ஆம், தமிழ்நாடு நவீன வருணாசிரமத்தின் மண்! வாரிசு
அரசியலின் மண்! குடும்ப அரசியலின் மண்!
கருணாநிதியின் குடும்பம் தமிழ்நாட்டை ஆள்வதற்காக
பல்லக்குத் தூக்குவதே இங்குள்ள போலி
முற்போக்காளர்கள் மற்றும் போலி இடதுசாரிகளின்
திருப்பணி.

காமராசர் பக்தவத்சலம் ஆகியோரின் ஆட்சிக்  காலத்தில்
பட்டியல் இனத் தலைவரான கக்கன் உள்துறை அமைச்சராக
இருந்தார். அதற்குப்பின் திமுகவும் அதிமுகவும் 50 ஆண்டுகள்
மாறி மாறி ஆண்டும் எந்த ஒரு பட்டியல் இனத்தவரும்
இன்று வரை உள்துறை அமைச்சராக முடியவில்லை.

உள்துறையை விடுங்கள். எந்த ஒரு பட்டியல் இனத்தவராவது
கருணாநிதியின் ஆட்சியில் அல்லது மேனன், ஜெயலலிதா
ஆட்சியில் நிதி அமைச்சராக, தொழில் அமைச்சராக,
பொதுப்பணித்துறை அமைச்சராக, கல்வி அமைச்சராக,
சட்ட அமைச்சராக ஆனது உண்டா? உண்டா?
இல்லை என்பதை நாடறியும்! 

கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அவர் மகன் ஸ்டாலின்
துணை முதல்வர். அப்பன் முதல்வர், மகன் துணை முதல்வர்.
இது நவீன வருணாசிரமம் இல்லாமல் வேறென்ன?

ஜகன்மோகனைப்போல் துணை முதல்வர் பதவியை
ஒரு பட்டியல் இனத்தவருக்கு வழங்குவது பற்றி
என்றாவது போலி சமூகநீதிக் காவலர் கருணாநிதி
கற்பனையிலாவது நினைத்தது உண்டா?

தன் மகனுக்குப் போட்டியாக எவனும் வளர்ந்து விடக்கூடாது
என்பதுதானே கருணாநிதி கடைப்பிடித்த சமூகநீதிக்
கோட்பாடு! இது அப்பட்டமான வருணாசிரமக்
கோட்பாடு அல்லவா!

இந்தியாவிலேயே பார்ப்பனர்களின் மக்கள்தொகை
மிக அதிகமாக உள்ள (16 சதம்) உத்திரப் பிரதேசத்தில்
மாயாவதி ஐந்து முறை முதல்வராக முடிகிறது.
ஆனால் தமிழ்நாட்டில் ஏன் ஒரு பட்டியல் இனத்தவர்
கேவலம் பொதுப்பணித்துறை அமைச்சராகக் கூட
வர முடியவில்லை?

இதற்குக் காரணம் தமிழ்நாட்டின் தத்துவ அரசியல்
தளங்களில் ஆதிக்கம் செலுத்தும் போலி சமூக நீதிச்
சித்தாந்தமான பெரியாரியமும் திராவிட இயலுமே
ஆகும். பெரியாரியத்தின் ஒரு சிறிய துணுக்கு
நீடித்திருக்கும் வரை, இங்கு ஒருபோதும் ஒரு பட்டியல்
இனத்தவர் ஒரு முக்கியமான துரைக்குக்கூட
அமைச்சராக வர முடியாது.

திமுகவும் திராவிட இயக்கமும் நவீன வருணாசிரமத்தை
தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் இரும்புத் தூண்கள்.
கூத்தாடி உதயநிதியின் குண்டியைக் கழுவதே
சமூகநீதி என்பதுதான் தமிழகத்தின் போலி
முற்போக்காளர்கள் மற்றும் போலி இடதுசாரிகளின்
முழுநேரப் புரட்சிப்பணி!

பூர்ஷ்வா அரசியல் கட்சிகள் அனைத்தும் CPI, CPM உட்பட
சமூக மாற்றத்துக்கு எதிரானவை. தங்களின் இருப்பைத்
தக்க வைக்க அவ்வப்போது ஒரு சில anti establishment
வகைப்பட்ட சீர்திருத்தங்களைச் செய்வது அவற்றின்
வாடிக்கை! ஆனால் திமுகவும் திராவிட இயக்கமும்
அதைக்கூடச் செய்யத் தயாராக இல்லை. அவை மிகத்
தீவிரமான pro establishment காட்சிகள். ஆம், அவை நவீன
வருணாசிரமக் கட்சிகள். இவற்றைத் துடைத்தெறியாமல்
தமிழகத்தில் சமூகநீதி எள்ளளவும் சாத்தியமில்லை!

மெய்யான சமூகநீதிக்குப் பெருந்தடையாக இருப்பது
திமுகவும் திராவிட இயக்கமுமே என்ற உண்மையை
உணர மறுப்பவன் எவனும் முற்போக்காளனோ
இடதுசாரியோ அல்ல!
----------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக