செவ்வாய், 11 ஜூன், 2019

நீட் மதிப்பெண் எவ்வளவு எடுத்தால்
MBBS சீட் கிடைக்கும்?
--------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------
1) தமிழ்நாட்டில் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில்
உள்ள அறிவிக்கப்பட்ட மருத்துவப் படிப்பு இடங்கள் வருமாறு:-
MBBS இடங்கள் = 3250. BDS இடங்கள் = 100.
மொத்த இடங்கள் = 3350.
இந்த 3350ல் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதம் இடங்களை
வழங்க வேண்டும். அதாவது 506 MBBS இடங்களையும்
15 BDS இடங்களையும் வழங்க வேண்டும். இதன் பிறகு
கிடைக்கும் மீதியுள்ள இடங்கள் வருமாறு:-
MBBS = 2744 இடங்கள்.BDS = 85 இடங்கள்.
ஆக மொத்தம் = 2829 இடங்கள்.

2) மேற்குறித்த 23 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும்
MBBS கட்டணம் = ரூ 13610 மட்டுமே.
BDS கட்டணம் = ரூ 11610 மட்டுமே.
மேற்குறித்த தொகை டியூஷன் பீஸ் மற்றும்
பிற Academic FEESகளையும் உள்ளடக்கியது.

3) இவை போக, அ) அண்ணாமலைப் பல்கலை
ஆ) IRT மருத்துவக் கல்லூரி பெருந்துறை,
இ) ESI மருத்துவக் கல்லூரி கே கே நகர் சென்னை
ஆகிய மூன்று கல்லூரிகளிலும் உள்ள இடங்களையும்
தமிழக அரசே நிரப்பும். இக்கல்லூரிகளில் கட்டணம்
அதிகம்.
IRT பெருந்துறை கல்லூரியில் கட்டணம் ரூ 3.85 லட்சம்.
அண்ணாமலை பல்கலையில் ரூ 5 லட்சத்தை விட அதிகம்.
ESI கல்லூரியில் ரூ 1.5 லட்சம்.

4) இவை தவிர தனியார் மருத்துவக் கல்லூரிகளில்
அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உண்டு. அவற்றையும்
நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

5) குறைந்தபட்சமாக இரண்டு கலந்தாய்வுகள்
நடக்கும். முதல் கலந்தாய்வில் இடம் கிடைக்கப்
பெறாதவர்களுக்கு இரண்டாம் கலந்தாய்வில்
கிடைக்கும் வாய்ப்பு உண்டு. மூன்றாம் கலந்தாய்வும்
நடைபெறுவது தற்போதைய வழக்கமாகி விட்டது.

6) ஆக மொத்தத்தில் 2829 அரசுக்கல்லூரி இடங்கள் 
தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள்
தோராயமாக 1700, ஆக மொத்தத்தில் 4529 இடங்கள் 
(MBBS+BDS) உள்ளன. இவற்றில் இடம் கிடைப்பது எப்படி?

7) பின்வரும் விதத்தில் நீட் மதிப்பெண் இருந்தால்,
மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும். இதற்கான
நிகழ்தகவு (PROBAILITY) = 0.85 ஆகும். சதவீதக் கணக்கில்
சொன்னால், 85 சதம் ஆகும்.

பொதுப்பிரிவு = 450க்கு மேல்.
BC = 400க்கு மேல்.
MBC = 385க்கு மேல்
SC = 300 க்கு மேல்
ST = 280க்கு மேல்.   

முக்கிய குறிப்பு:
கிடைத்திருக்கும் அதிகாரபூர்வமான தரவுகளின்
அடிப்படையில் நியூட்டன் அறிவியல் மன்றம்
இக்கணிப்பை மேற்கொண்டுள்ளது. தமிழக அரசு
இன்னமும் தேவையான புள்ளி விவரங்களை
வெளியிடவில்லை. சாதிவாரியாக 300க்கு மேல்,
400க்கு மேல் எத்தனை பேர் மதிப்பெண் பெற்றுள்ளனர்
என்பது போன்ற புள்ளி விவரங்கள் இன்னும்
அரசால் வெளியிடப் படவில்லை. எனவே இக்கணிப்பு
துல்லியமானது என்று நியூட்டன் அறிவியல் மன்றம்
உறுதி கூறத் தயாராக இல்லை.

ஒரு தோராயமான புரிதலுக்குப் பயன்படும் விதத்தில்
(a rough idea) மட்டுமே இக்கணிப்பை வெளியிட்டு உள்ளோம்.
*******************************************************    
தாமிரபரணியில் குளியல்!
இடம்: கல்லிடைக்குறிச்சி.  

இல்லை என்று அடித்துக்கூற முடியாது.
இடம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.
தேவையான தரவுகள் எதுவுமே இல்லாமல்
தோராயமான மதிப்பீடுதான் இது.
SEAT MATRIX இன்னும் இறுதியாகவில்லை.
3 கட்ட கலந்தாய்வு இருக்கிறது.

CLEAR CASESஐ மட்டும் இம்மதிப்பீடு சுட்டிக்
காட்டுகிறது. தற்போதைய சூழலில் அறுதியிட்டுக்
கூற இயலாது.



        

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக