புதன், 26 ஜூன், 2019

பூமி சூடாதல்   
மோடியின் சென்ற ஆட்சியை கொண்டு வந்ததில் முகேஷ் அம்பானிக்கு பாத்திரமிருந்தாலும் அந்த ஆட்சியின் இரண்டாம் பாதியில் இருவருக்கும் இடையில் முரண்பாடு தோன்றியது.
முகேஷ் அம்பானி அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரையிலும் இல்லாதவாறு தென்மும்பை காங்கிரஸ் வேட்பாளரை பகிரங்கமாக ஆதரித்தார். இது மோடியை ஆத்திரமூட்டியிருக்கிறது.
இப்பொழுதோ சுற்றுச் சூழல் மாசுபடுதலை தடுப்பது என்ற பெயரில் டீசல் மற்றும் பெட்ரோலில் இயங்கும் மூன்று சக்கர வாகனங்கள் 2023ல் தடை செய்யப்படும் எனவும் பெட்ரோலில் இயங்கும் இரு சக்கர வாகனங்கள் 2025ல் தடை செய்யப்படும் எனவும் அத்தகைய வாகனங்கள் மின்சாரத்தில் இயங்குபவையாக மாறிவிட வேண்டும் எனவும் மோடி அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
இந்தியாவில் இத்தகைய வாகனங்கள் கோடிக்கணக்கில் இருக்கும் இவை டீசல் மற்றும் பெட்ரோலில் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டால் மிகப் பெரும் பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தியில் ஏகபோகமாக உள்ள முகேஷ் அம்பானிக்கு எதிரானது.
மோடி அரசாங்கத்தின் இம்முடிவுக்கு முகேஷ் அம்பானி தனது கருத்தை ஏதும் இன்னமும் தெரிவிக்கவில்லை.
ஆனால் மூன்று சக்கர மற்றும் இரு சக்கர வாகன உற்பத்தியில் ஏகபோகங்களாக இருக்கும் டிவிஎஸ், பஜாஜ் உள்ளிட்டவை கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.
சுற்றுச் சூழல் மாசுபடுதலை தடுத்தல் என்ற பெயரில் இத்தகைய வாகன உற்பத்தியை தடை செய்யப்படுவதாக ஒரு புறத்தில் அறிவிக்கப்பட்டாலும் இன்னொரு புறத்திலோ இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு தேவையான மின்சாரமானது நிலக்கரியை அடிப்படையாக கொண்டதே. இத்தகைய மின்சார உற்பத்தியும் சுற்றுச் சூழலை பெருமளவில் கெடுக்கக் கூடியதே. அதே நேரத்தில் முகேஷ் அம்பானியையும் பெரியளவில் கெடுக்கக் கூடியதே.
முகேஷ் அம்பானி தனக்கு எதிரான மோடியின் ஆட்சியை டிவிஎஸ், பஜாஜ் போன்றோரோடு சேர்ந்து கவிழ்ப்பாரா?
===============================================
கீழ்ப்பாதி படங்களில் உள்ள கண்ணையா, ராஜா ஸ்ரீதர் 
இருவரையும் 1970களிலேயே நான் அறிவேன். ராஜா ஸ்ரீதர் 
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் டிக்கட் கவுண்டரில் 
வேலை செய்தார் அப்போது. கண்ணையா தண்டவாளத்தில் 
டிராலி தள்ளி வருவார்.

இன்று இருவரும் பெருங்கோடீஸ்வரர்கள். எப்படி வந்தது 
இவ்வளவு சொத்து? கண்ணையா கேட்ட கேட்டுக்கு 
அவருக்கு டாக்டர் பட்டம்!!! பட்டமளிப்பு விழாவுக்கு 
வரச்சொல்லி எனக்கு அழைப்பு அனுப்பி இருந்தார்.
நான் செல்லவில்லை.

ஆளும் வர்க்கக் கைக்கூலிகள்! இவர்களை எதிர்த்தால் 
எதிர்ப்பவனை கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள்.
நமச்சிவாயம் எப்படிச் செத்தார் தெரியுமா?

ரிட்டயர்ட் ஆனவர்கள் தொழிற்சங்கத் தலைமையில் 
இருக்கும் கொடுமை BSNL சங்கங்களிலும் உண்டு.  
தொழிலாளி விழிப்புறாமல் இதற்குத் தீர்வு இல்லை.
ரயில்வே தொழிலாளர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் 
தெரிவித்துக் கொள்கிறேன்.


மருதுபாண்டியன் 
சிலம்பரசன் சே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக