வெள்ளி, 14 ஜூன், 2019

"கதிரியக்கம்" என்பதை சிறிதளவேனும் தெரிந்து கொள்ள வேண்டும்.
நமக்கு தெரியும் உலகில் உள்ள எல்லா பொருட்களும் அணுக்களால் ஆனவை. ஒவ்வொரு பொருளையும் நுட்பமாக பகுத்துக்கொண்டே வரும்பொழுது மேலும் பகுக்க முடியாத மிக நுண்ணிய பொருளே அணு ஆகும். பகுக்க முடியாத இந்த அணுவும் எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்கிற மூலக்கூறுகளால் ஆனவை. ஒவ்வொரு உலோகமும் (தனிமம்) அதன் அணுவில் உள்ள புரோட்டான் எண்ணிக்கையை வைத்தே குறிக்கப்படுகின்றன. ஏதாவது ஒரு உலோகத்தின் அணுவோடு கூடுதலாக ஒரு புரோட்டானை சேர்ந்தாலோ அல்லது இருக்கிற புரோட்டானை நீக்கினாலோ அது வேறொரு உலோகமாக மாறிவிடும்.
உதாரணமாக பாதரசம். இதன் அணு எண் 80 (அதாவது இதன் அணுவில் 80 புரோட்டான்கள் இருக்கும்.)
தங்கம் இதன் அணு எண் 79
பாதரசத்தின் அணுவிலிருந்து ஒரு புரோட்டானை நீக்கிவிட்டால் அது தங்கமாக மாறிவிடும். ஆனால் புரோட்டானை நீக்கிய உடனே தங்கமாக மாறாது. நீக்கிய பின்னரும் அது சிலகாலம் பாதரசமாகவே இருக்கும். அந்த காலத்தில் அதனை பாதரசமாகவும் பயன்படுத்த முடியாது. தங்கமாகவும் பயன்படுத்த முடியாது. ஏனெனில் அந்த நேரத்தில் அதன் பெரியதாக இருக்கும் அணுக்கரு சிதைந்து அடுத்த சிறிய வடிவத்திற்கு தன்னை தகவமைத்துக்கொள்ள அதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படுகிறது. அந்த கால இடைவெளிக்கு அரை ஆயுள் (Half Life) என்று பெயர். இந்த அரை ஆயுள் நேரத்தில் அந்த உலோகத்திடமிருந்து ஏராளமான கதிர்வீச்சு வெளிப்படும்.
உதாரணமாக ஒரு தேசிய நெடுஞ்சாலையில் படுவேகமாக பயணித்துக்கொண்டிருந்த சரக்கு வாகனம் ஒன்று திடீரென மண் சாலையில் இறங்கி செல்லவேண்டி வந்தால் அந்த வாகனம் தன் வேகத்தை கட்டுப்படுத்தி நிதானமாக செல்லும் வரை அதிகமான குலுக்கல்கள், வரையறுக்கப்படாத அதிர்வுகளோடு கடும் புழுதியையும் பரப்பிவிடும்.
அதைப்போலவே மாறும் உலோகமும் நிலையற்ற தன்மையையும் கதிர்வீச்சையும் கொண்டிருக்கும். இது படிப்படியாக குறைந்து அதன் அரை ஆயுள் முடியும் நாளில் நேர்த்தியான அமைதியான உலோகமாக மாறும். உலகில் உள்ள ஒவ்வொரு உலோகத்திற்கும் வெவ்வேறு விதமான அரை ஆயுள் இருக்கும். அதன்படி அணு உலையில் பயன்படுத்தப்படும் யுரேனியம் 235 ன் அரை ஆயுள் 70 கோடி ஆண்டுகள் ஆகும். தோரியம் 232 ன் அரை ஆயுள் ஒரு கோடியே நாற்பது லட்சத்து ஐம்பதாயிரம் (1,40,50,000) ஆண்டுகள் ஆகும். அதுவரை இவை கேடு விளைவிக்கும் கதிர்களை ஒளியின் வேகத்தில் அள்ளி வீசிக்கொண்டிருக்கும்.
இந்த கதிர்கள் எதையும் ஊடுருவும் வல்லமை பெற்றவை. இவை ஊடுருவி செல்லும் பொருட்களில் உள்ள அணுக்களை சிதைக்கும் தன்மை கொண்டவை. எனவே எதிர்ப்படும் எந்த பொருளும் காற்று உட்பட சிதையும்.
மனித உடலில் ஊடுருவும் பொது உடலில் உள்ள செல்களை உயிரிழக்க செய்யும். DNA ஐ சிதைக்கும். எனவே இவை உலகில் உள்ள உயிர்கள் முதலாக எந்த பொருளுக்கும் தீங்கை மட்டுமே விளைவிக்கும்.
கதிரியக்கத்தை சீவேர்ட் Sievert (Sv) என்கிற அலகால் அளக்கிறார்கள்.
ஒரு ஆண்டு முழுதும் ஒரு மனிதனால் தாங்கிக்கொள்ள இயலுகிற அதிகபட்ச கதிரியக்க அளவை ரெம் Rem என்கிற அலகால் அளக்கிறார்கள்.
ஒரு சாதாரண எக்ஸ்ரே கருவி நம்மை ஊடுருவும்போது வெளியிடும் கதிரியக்க அளவு 0.02 மில்லி சீவேர்ட்.
நமது பல்லுக்கான எக்ஸ்ரே கருவி ஊடுருவும் போது வெளியிடும் கதிரியக்க அளவு 0.01 மில்லி சீவேர்ட்.
சிடி ஸ்கேன் எடுக்கும் கருவி ஊடுருவும் பொது வெளியிடும் கதிரியக்க அளவு 30 மில்லி சீவேர்ட்.
புற்று நோயை குணப்படுத்த செய்யப்படும் கதிரியக்க சிகிச்சையில் தேவைக்கேற்ப 20,000 மில்லி சிவேர்டிலிருந்து 80,000 மில்லி சீவேர்ட் வரை செலுத்துகிறார்கள்.
ஒரு சராசரி மனிதனால் ஒரு வருடம் முழுதும் தாங்கிக்கொள்ள முடிகிற அதிகபட்ச கதிரியக்க அளவு 2.5 மில்லி சீவேர்ட்.
ஏற்கனவே பூமியில் 2.5 மில்லி சீவேர்ட் கதிரியக்கம் இயற்கையாகவே நம்மை ஊடுருவிக்கொண்டிருக்கிறது. எனவே கூடுதலாக நம்மை ஊடுருவும் கதிரியக்கம் ஒவ்வொரு துளியும் நம் செல்களில் உள்ள DNA ஐ கொல்லும். ஒரு வருடத்திற்குள் 4 மில்லி சீவேர்ட் வரையிலான கதிரியக்கத்தால் ஏற்படும் செல்சிதைவுக்கு பதிலாக ஒரு "ஆரோக்கியமான" "மனிதனின்" உடலால் புதிய செல்களை உருவாக்கிக்கொள்ள முடியும்.
கதிரியக்க கதிர்களின் தன்மையை பொறுத்து அதனை தடுக்க கவசங்கள், உடுப்புகள் வெவ்வேறு பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. தடிமனான பிளாஸ்டிக், ஸ்டீல், டங்ஸ்டன், அலுமினியம், சாதாரண நீர், கன நீர், கனமான கான்கிரீட், போரான், காட்மியம், ஈயம் ஆகியன முக்கியமான கதிரியக்க கவச பொருட்களாகும்.
எனினும் இவை நூறு சதவீதம் கதிரியக்கத்தை தடுத்துவிடுவதாக எடுத்துக்கொள்ள முடியாது.
Senthil v சகோ பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக