செவ்வாய், 11 ஜூன், 2019

கேள்விக்கான விடை!
------------------------------------
அசை சீர் தளை அடி தொடை ஆகிய ஐந்தும்
யாப்பின் உறுப்புக்கள்.

சென்றார் என்பதில்
சென் = குறில் ஒற்று நேரசை
றார் = நெடில் ஒற்று நேரசை
எனவே சென்றார் = நேர் நேர் = தேமா
ஆக, முதல் சீர் மாச்சீராக (தேமா) உள்ளது.

அடுத்த சீர் = கிரேசிமோகன்
கிரே = குறில் நெடில் நிரையசை
சிமோ = குறில் நெடில் நிரையசை
கன் = குறில் ஒற்று நேரசை 
எனவே, கிரேசிமோகன் = நிரை நிரை நேர் =  கருவிளங்காய்.
ஆக, இச்சீர் காய்ச்சீராக உள்ளது.

முதல் சீரையும் இரண்டாம் சீரையும் சேர்த்துக் கட்ட
வேண்டும். இப்படிச் சேர்த்துக் கட்டுதல் தளை
எனப்படும்.

வெண்பாவுக்குரிய தளைகள் இரண்டு.
மா முன் நிரை = வெண்சீர் வெண்டளை
விளம் முன் நேர் = வெண்சீர் வெண்டளை
காய் முன் நேர் = இயற்சீர் வெண்டளை.

சென்றார் கிரேசிமோகன் என்பதில் முதல் சீரும்
இரண்டாம் சீரும் வெண்சீர் வெண்டளையால் கட்டப்
பட்டுள்ளன.
சென்றார் = தேமா
இதற்கு முன்பாக "கிரே" வருகிறது. கிரே = நிரை.
எனவே மா முன் நிரை; வெண்சீர் வெண்டளை.

யாப்புக்கும் வெண்பாவுக்கும் மதிப்பளித்து
விடையளிக்க முயன்ற அனைவருக்கும் நன்றி.     
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக