புதன், 5 ஜூன், 2019

வெண்பா இயற்றி வாழ்ந்த
கிரேசிமோகன் மறைவுக்கு
வெண்பாவில் இரங்கல்!
----------------------------------------------- 
சென்றார் கிரேசிமோகன் வாழ்ந்தார் நகைசெய்து 
வென்றார் கடிமிகு யாப்பின் இலக்கணம்  
தொட்டதற் கெல்லாம் இயற்றினார் வெண்பாவை 
தொட்டு மறைந்தார்நம் நெஞ்சு.      

கிரேசி மோகனின் நகைச்சுவை குறித்துப் பேச
விரும்பவில்லை. அவர் அனாயாசமாக வெண்பா இயற்றும்
திறன் பெற்று இருந்தார். அவ்வப்போது வெண்பா
இயற்றி, வெண்பாவை உயிர்ப்புடன் திகழச் செய்த
அவருக்கு வெண்பாவால் ஓர் இரங்கல்!

வெண்பா இயற்றி வாழும் அரிய வகை மானுடப்
பிறவிகளின் எண்ணிக்கையில் ஒன்று குறைந்து
விட்டது. இது வெண்பாவுக்குப் பேரிழப்பு!
*************************************************    
மருதுபாண்டியன் நன்றி வீரராகவன். வாழிய நலனே!

வீரவநல்லூரில் தமிழிசை!
--------------------------------------------
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் இசக்கி கம்பர் குழுவினரின்
அற்புதமான நாதஸ்வரக் கச்சேரி!
 
மற்றப் பாடங்களை பள்ளியில்தான் கற்க முடியும்.
தாய்மொழியை பள்ளி அல்லாத இடங்களிலும்
கற்க இயலும். பத்து வகுப்பு வரையிலான நமது
தமிழ்நாட்டுப் பாடங்களில், உள்ளபடியே
உயர்தரக் கல்வி மொழிப்படமான தமிழில் உள்ளது.
இது பெருமைக்கு உரியது. அதே நேரத்தில் மொழி
இலக்கணம் தெரியாமல் மொழியாளுகையைப்
பெறாமல் பள்ளியில் இருந்து வெளியேறுகிறான்
மாணவன்.

இதுவே பெருங்குறை. எனவே இலக்கியம் சார்ந்த
பாடங்களைச் சிறிது குறைத்து, மொழியாளுகைத் திறனை
வளர்க்கும் பாடங்கள் தேவை. இதற்குத்தான்
நாம் குரல் கொடுக்க வேண்டும்.


   

இந்த வெண்பாவில் முதல் சீரும் இரண்டாம் சீரும்
எத்தளையால் கட்டப் பட்டுள்ளன? வாசகர்கள்
விடையளிக்க வேண்டும்.


கோனார் உரைநூலைக் குறைத்து மதிப்பிட
வேண்டாம். காலங்காலமாக இழையறாத
தமிழ்த்தொண்டில் தனித்துவத்துடன் திகழ்கிறது
கோனார் உரைநூல்.

மூலநூற்களுக்கு உரை எழுதுவது தமிழரின் மரபு.
சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்கு நல்லார் உரை
செய்தார். திருக்குறளுக்கு நூற்றுக்கணக்கானோர்
உரை எழுதி உள்ளனர்.

ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான
பாடநூற்களுக்கு உரை எழுதுகிறார் கோனார்.
இது இன்றி அமையாதது. இதைத் தவிர்க்கக் கூடாது.

ஆம், இந்தியாவிலேயே மொழிப்பாடம் என்ற
அளவில் மிகவும் உயர்தரத்தில் உள்ளது
தமிழ்ப் பாடமே. ஆறாம் வகுப்பு முதல் 12ஆம்
வகுப்பு வரையிலான பாடங்கள் 1940, 50களில்
வித்துவான் படிப்புக்கு உள்ள தரத்தில் இருந்து
வருகின்றன. கோனார் நோட்ஸ் இல்லாமல்
நிச்சயம் எவராலும் தமிழ்ப்பாடத்தில் நல்ல
மதிப்பெண் பெற இயலாது.

கண்டிப்பாக வாங்குங்கள். ஒவ்வொரு மாணவனுக்கும்
கோனார் நோட்ஸ் வாங்கித் தர வேண்டியது
பெற்றோரின் கடமை ஆகும். கோனார் நோட்ஸ்
இல்லாமல் தமிழ்ப்படத்தை முழுமையாகப் புரிந்து
கொள்ளவோ, தேர்வில் நல்ல மதிப்பெண் பெறவோ
இயலாது.

No Konar No Tamil! இதுவே உண்மை நிலை!

கோனார் நோட்ஸ் உங்கள் வீட்டில் இருந்தால்,
உங்கள் வீட்டில் சிறந்த புலமை பெற்ற ஒரு
தமிழாசிரியர் இருக்கிறார் என்பதை உணருங்கள்.
கோனார் நோட்ஸ் இல்லாமல் ஒரு மாணவன்
60 மதிப்பெண் எடுப்பான் எனில், கோனார் நோட்சைப்
படித்திருந்தால் 80 மதிப்பெண் எடுப்பான்.

ரயில் பயணங்களின்போது 11,12ஆம் வகுப்புகளுக்குரிய
கோனார் உரைநூலை எடுத்துச் சென்று படிக்குமாறு
பிரகாசுக்கு நான் பரிந்துரை செய்கிறேன்.

மாமுன் நிரையும் விளம் முன் நேரும்
வெண்சீர் வெண்டளை. காய் முன் நேர் வரின் இயற்சீர்
வெண்டளை.
  


 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக