ஞாயிறு, 30 ஜூன், 2019

உருபும் பயனும் உடன் தொக்க தொகை!
-----------------------------------------------------------
பதிவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு
வாசகர்கள் மற்றும் பதிவைப் படிப்பவர்கள்
விடையளிக்க வேண்டும் என்று கோருகிறோம்.

கூடுதல் வினாக்கள்! இவற்றுக்கும்
விடையளிக்க வேண்டும்!
-----------------------------------------------------
இலக்கணக் குறிப்பு என்ன?
11) சுவர்க் கடிகாரம்
12) கைக்குழந்தை
13) புஷ்பக் காவடி
14) கிணற்றுத் தவளை
15) பல்வலி
-------------------------------------------------

மண்குடம் என்பது சரியே!
மண்குடம் என்பது மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும்
உடன் தொக்க தொகை என்பதும் சரியே!
------------------------------------------------------------------------------------
1) மண்குடம் என்பது மூன்றாம் வேற்றுமை உருபும்
பயனும் உடன் தொக்க தொகை என்பது பிழையானது
என்று திரு வேல்முருகன் எழுதி உள்ளார்.
திரு வேல்முருகனின் கூற்று முற்றிலும் தவறாகும்.

2) மண்குடம் என்றால் மண்ணால் ஆன குடம் என்று
பொருள். அதாவது மண்ணால் செய்யப்பட்ட குடம்
என்று பொருள்.

3) மண்ணால் ஆன குடம் என்பதில் ஆல் என்பது
மூன்றாம் வேற்றுமை உருபு. இது தொக்கி நிற்கிறது.
அதாவது மறைந்து நிற்கிறது.

4) வேற்றுமை உருபு மட்டுமா தொக்கி நிற்கிறது?
இல்லை. உருபின் பயனும் தொக்கி நிற்கிறது.
" ஆன" என்பது உருபின் பயன். இதுவும் தொக்கி
நிற்கிறது.

5) ஆக, மண்குடம் என்பதில் "ஆல்" என்னும் மூன்றாம்
வேற்றுமை உருபும், "ஆன" என்னும் அதன் பயனும்
சேர்ந்து தொக்கி நிற்கிறது. எனவே இது மூன்றாம்
வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை ஆகும்.

6) திரு வேல்முருகன் இதை (மண்குடம் என்பதை)
உம்மைத்தொகை என்கிறார். இது பிழை.
இது எங்ஙனம் உம்மைத்தொகை ஆகும்?

7) மண்குடம் என்பது உம்மைத்தொகை என்றால்,
மண்ணும் குடமும் என்று விரியும். அதாவது
மண்ணும் குடமும் என்று பொருள்படும்.

8) எனவே அடித்துக் கூறுகிறேன்: மண்குடம் என்பது
மூன்றாம் வேற்றுமை உறுப்பும் பயனும் உடன் தொக்க
தொகையே. இதுவே சரியானது. இது மட்டுமே
சரியானது. மண்குடம் என்பது உம்மைத்தொகை
ஆகாது.
------------------------------------------------------------------

மண்குடம் என்பதை மட்குடம் என்றுதான் எழுத
வேண்டும் என்று வாதிடுவது விதண்டாவாதம்.
இது தமிழுக்கு எதிரானது; காப்பியர் நெறிக்கு
எதிரானது. (காப்பியர் நெறி = தொல்காப்பியர் நெறி).

ஆழிசூழ் உலகில் உள்ள எட்டுக்கோடித் தமிழர்களும்
தம் நாவால் மண்குடம் என்று ஒலிக்கும்போது,
இல்லை மட்குடமே சரி; மண்குடம் தவறு என்று
பேசுவது குறித்து என்ன சொல்வது?
--------------------------------------------------------------------------------

காலத்துக்கு ஒவ்வாப் புணர்ச்சி விதிகள்
செல்லாத நாணயம் போன்றவை. அவை இன்று
பயன்படா.

பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே.
இதுதான் தமிழ் மரபு.

மண்ணும் குடமும் புணரும்போது மட்குடம்
என்று மட்டுமே புணர வேண்டும் என்று கூறுவது
புணர்ச்சியின் போது புழைக்குள் ஆண்குறியை
இத்தனை பாகை அளவில்தான் (inclination)
உட்செலுத்த வேண்டும் என்று கட்டளை இடுவது
போன்றது.

மொழி தொடர்ந்து இயங்கிக்  கொண்டே இருக்கிறது;
இயக்கத்தின் போக்கில் மாறிக்கொண்டே இருக்கிறது
என்ற அழியா உண்மையைக் கருத்தில் கொள்ள
மறுக்கும் கதவடைப்புவாதமே  மட்குட வலியுறுத்தல்.

மட்குடம் = பண்டையச் செய்யுள் வழக்கு.
மண்குடம் = அன்று முதல் இன்று வரை மக்களின்
உயிர்த்துடிப்பான பேச்சு வழக்கு.

பேச்சு வழக்கே முதன்மை என்பது தொல்காப்பியர் நெறி.


இலக்கணக் குறிப்புத் தருக.
-----------------------------------------
1) தூண்டில் புழு
2 கூண்டுக்கிளி
3. மணல்வீடு
4. தொட்டில் குழந்தை
5. பொற்றாமரை
6 பொன்மான்
7 கால் கொலுசு
உன் கால் கொலுசின் ஒரு சலங்கை ஒலி
பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி.

பொற்சிலை
பளிங்குச்சிலை
வைரக்கம்மல்
வைர மூக்குத்தி
வழுக்குப்பாறை
---------------------------------------------------------------------------------



         


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக